Home
News

7 ஸ்டார் ஹோட்டல் தோத்துடும் போலயே.. இது அதிநவீன தங்க ரதம்-யா.. IRCTC டிக்கெட் விலை மற்றும் பயண தேதி விபரம்..

இந்திய ரயில்வே (Indian Railway) மற்றும் ஐஆர்சிடி (IRCTC) இன் சொகுசு ரயில்களில் ஒன்றான கோல்டன் சேரியாட் சொகுசு ரயில் (Golden Chariot Luxury Train) மீண்டும் தண்டவாளத்தில் இறங்கி இந்தியாவை சுற்றி நியூ இயர் சுற்றுலா செல்லவுள்ளது. ஆம், அதிநவீன தொழில்நுட்பங்களை ஒரு ரயில் ஒட்டுமொத்தமாக களமிறக்கி, நடமாடும் ஒரு 7 ஸ்டார் ஹோட்டல் போல இந்த சொகுசு ரயிலை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. இதன் பெயருக்கு ஏற்றார் போல இதுவொரு தங்க ரதமாக 2024-2025 ஆரம்ப காலத்தில் பயணிக்கவுள்ளது.

கர்நாடகாவின் (Karnataka) செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கோல்டன் சேரியாட் சொகுசு சுற்றுலா ரயில், டிசம்பர் 14 அன்று அதன் பயணத்தை துவங்கவுள்ளது. இந்த ரயிலில் 13 டபுள் பெட் படுக்கை அறைகள் (double-bed cabins), 26 டிவின் பெட் படுக்கை அறைகள் (twin-bed cabins) அறைகளை கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளி விருந்தினர்களுக்கான 1 பிரத்தியேக கேபினையும் இந்த சொகுசு ரயில் கொண்டுள்ளது.

7 ஸ்டார் ஹோட்டல் தோத்துடும் போலயே.. இது அதிநவீன IRCTC தங்க ரதம்-யா..

கோல்டன் சேரியாட் சொகுசு ரயில் (Golden Chariot Luxury Train):

ஆடம்பபரமான கோல்டன் சேரியாட் சொகுசு ரயிலில் மொத்தம் 40 கேபின்கள் உள்ளது. இந்த ராயல் ரயிலில் 80 பயணிகள் பயணம் செய்யலாம். முழுமையான சொகுசு அனுபவத்தை வழங்க இந்த ரயிலில் பல ஆடம்பரமான அம்சங்களை IRCTC சேவையுடன் இணைந்து வழங்கியுள்ளது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏசி (AC), வைஃபை (WiFi), ஆடம்பரமான குளியலறைகள் (luxurious bathrooms), வசதியான படுக்கைகள் உள்ளது.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இந்த சொகுசு ரயில் 5 இரவு மற்றும் 6 பகல் பயணிக்கும் சுற்றுலா பயணத்தை அடக்கியது என்பதனால், பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்காக பல OTT சேவைகளை அனுபவிக்கக்கூடிய பெரிய டிஸ்பிளே டிவி (TV) கூட இந்த ரயிலில் வழங்கப்பட்டுள்ளது. நம்ப முடியாத விதமாக இந்த ரயில் ஸ்பா (SPA) மற்றும் சிகை அலங்காரம் செய்யும் சலூன் கூட இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிநவீன தங்க ரத சொகுசு ரயிலில் ருசி (Ruchi) and நளபாக் (Nalapak) என்ற இரண்டு உணவகங்கள் உள்ளது. இங்கு ஸ்டார் ஹோட்டல் தரத்தில் சைவம் (vegetarian) மற்றும் அசைவம் (non-vegetarian) என்று இரண்டு வகையான உணவுகள் கிடைக்கும். இதனுடன், சிறந்த பிராண்டட் ஒயின் (wine), பீர் (beer) மற்றும் மடீரா (Madeira) ஆகியவை ரயிலில் உள்ள பாரில் (BAR) கிடைக்கின்றன.

கோல்டன் சேரியாட் சொகுசு ரயில் டிக்கெட் விலை என்ன? (Golden Chariot Luxury Train Ticket Price):

சொன்னால் நம்பமாடீர்கள், இந்த ரயிலில் மாடர்ன் எக்ஸர்சைஸ் மெஷின்களை கொண்ட ஒரு ஹை-டெக் ஜிம் (Hi-Tech GYM) கூட இருக்கிறது. இந்த சொகுசு ரயில் முழுமையாக CCTV கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல பாதுகாப்பு அம்சங்களையும் இந்த ரயில் கொண்டுள்ளது. இந்த ரயிலில் 5 இரவு மற்றும் 6 பகல் பொழுது பயணிக்க பயணிகள் ரூ. 4,00,530 கட்டணம் (ticket price) செலுத்த வேண்டும். இதற்கு 5% GST கட்டணமும் செலுத்த வேண்டும்.

கோல்டன் சேரியாட் சொகுசு ரயில் (Golden Chariot Luxury Train) டிசம்பர் 14, 2024 ஆம் தேதி முதல் பயணிக்க துவங்குகிறது. இதில் பிரைட் ஆப் கர்நாடக (Pride of Karnataka) ரூட் ரயில் (5 இரவுகள்/6 நாட்கள்) - பெங்களூரு, பந்திப்பூர், மைசூர், ஹலேபிடு, சிக்மகளூர், ஹம்பி, கோவா மற்றும் மீண்டும் பெங்களூர் வந்தடையும்.

அடுத்தபடியாக, ஜெம்ஸ் ஆஃப் சவுத் (Gems of the South) ரூட் ரயில் (5 இரவுகள்/6 நாட்கள்) - பெங்களூரில் இருந்து மைசூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம், தஞ்சாவூர், செட்டிநாடு, கொச்சின், சேர்த்தலா மற்றும் பெங்களூரு திரும்பும். இது டிசம்பர் 21, 2024 ஆம் தேதி பெங்களூரில் இருந்து கிளம்புகிறது. இதற்கான டிக்கெட்களை www.goldenchariot.org ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

கோல்டன் சேரியாட் சொகுசு ரயில் பயண தேதிகள்:
- ஜனவரி 4, 2025- பிரைட் ஆப் கர்நாடக (5N/6D)
- பிப்ரவரி 1, 2025 - பிரைட் ஆப் கர்நாடக (5 nights/6 days)
- பிரவரி 15, 2025 - ஜெம்ஸ் ஆஃப் சவுத் (5N/6D)
- மார்ச் 1, 2025- பிரைட் ஆப் கர்நாடக (5 nights/6 days)

Best Mobiles in India

English summary
Golden Chariot Luxury Train Ticket Price and Route For 2024 2025 Details How To Book Online From IRCTC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X