மீண்டும் கோல்டன் பாபா! இம்முறை 6 கோடி மதிப்பிலான நகைகள்.!
கடந்த ஆண்டு இவர் சுமார் 14.5 கிலோ மதிப்பிலான தங்க நகைகளை அணிந்திருந்தார்.
கன்வார் யாத்திரையில் தங்க நகைகளை அணிந்துகொண்டு பங்கேற்று பிரபலமடைந்த கோல்டன் பாபா, தற்போது அதை விட அதிக நகைகளுடன் மீண்டும் வந்துள்ளார்.

இந்த ஆண்டு தனது 25வது கன்வார் யாத்திரையை பங்கேற்ற பாபா என அழைக்கப்படும் சுதிர் மக்கார், சுமார் 20கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்தார் என கூறப்படும் நிலையில், அதன் இன்றைய சந்தை மதிப்பு ஏறக்குறைய ரூ6 கோடி ஆகும். 2016ல் 12கிலோ தங்கம் வைத்திருந்த நிலையில், ஒவ்வொரு யாத்திரையின் போதும் மக்காரின் தங்க சேமிப்பும் உயர்ந்துகொண்டு செல்கிறது.
கடந்த ஆண்டு இவர் சுமார் 14.5 கிலோ மதிப்பிலான தங்க நகைகளை அணிந்திருந்தார். அவருடைய தங்கநகை சேகரிப்பில் 21 தங்க சங்கிலிகள், 21சிறு அலங்கார பேழை, அஸ்டகடகம் மற்றும் யாத்திரையின் போது தனது எஸ்.யூ.வி காரின் மீது அமர்திருக்கும் போது அணியும் தங்க அங்கி போன்றவையும் அடக்கம்.

2 கிலோ எடை
"இந்த புதிய சங்கிலிகள் 2 கிலோ எடை உடையவை மற்றும் அதில் சிவனின் உருவம் பொரித்த பேழையும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பயணத்தின் போது நான் அதிக நகைகளை அணிய விரும்பவில்லை. ஏனெனில் அதன் எடையால் எனது கழுத்து நரம்புகள் பாதிக்கப்படுகிறது மற்றும் ஒரு கண்ணின் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கன்வார் யாத்திரை தான் எனது கடைசிக்கு முந்தைய ஒன்று மற்றும் 2018 ல் நடைபெறும் வெள்ளிவிழா யாத்திரை கடைசியானதாக இருக்கும் " என 2017ல் குறிப்பிட்டார் பாபா.
ஹரித்வார் முதல் டெல்லி வரை 200கி.மீ பயண தூரம் முழுவதையும், பல்வேறு வாகனங்கள் புடைசூழ பயணம் செய்யவதில் பெயர் பெற்றவர் மக்கார் பாபா.

ரோலக்ஸ் கடிகாரம்
தங்கத்தின் மீதான மோகத்தை தவிர்த்து, ரூ27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரம், இவரின் வாகன அணிவகுப்பில் பங்குபெறும் பி.எம்.டபிள்யூ கார், 3 பார்டியூனர், 2 ஆடி கார், 2 இன்னோவா போன்றவற்றையும் சொந்தமாக வைத்துள்ளார். வேறு சில நிகழ்ச்சிகளின் போது, இவரின் ஹரித்வார் பயணத்திற்காக ஹம்மர், ஜாகுவார், லேண்ட் ரோவர் போன்ற கார்களையும் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறார்.
" தங்கம் மற்றும் கார்கள் மீதான எனது மோகத்திற்கு இறப்பு என்பது கிடையவே கிடையாது. 1972-73 ஆண்டுகளில் ஒரு டோலோ(10கிராம்) தங்கத்தின் விலை ரூ200 தான். அந்த சமயத்தில் தான் நான் தங்கத்தை அணிய ஆரம்பித்தேன் மற்றும் அப்போது என்னிடம் 4 டோலோ அளவில் தங்கம் இருந்தது. பின்னர் படிப்படியாக தங்கத்தின் அளவு அதிகரித்தது. நான் இறக்கும் வரை இந்த தங்கத்தை என்னுடனே வைத்துக்கொள்வேன். அதற்கு பிறகு எனக்கு பிடித்த சீடரிடம் ஒப்படைக்கப்படும்" என்கிறார் மக்கார் பாபா.

வியாபாரம்
ஆன்மீக பாதைக்கு செல்லும் முன்பு, மக்கார் டெல்லியில் உள்ள காந்திநகர் மார்க்கெட்டில் ஆடை வியாபாரம் செய்து வந்தார். தற்போது அவருக்கு காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் ஆடம்பர சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

துவக்க காலம்
இவருடைய வாழ்வின் துவக்க காலம் என்பது மிகவும் கடினமாகவே இருந்தது எனலாம். இவருடைய ஆறு வயதில் குருகுலத்திற்கு சென்றார். பின்னர் வாழ்வாதாரத்தை தேடி ஹரித்வார் சென்றார். அங்கு நடைபாதையில் ஜெபமாலைகள் மற்றும் ஆடைகள் விற்றார்.

பிராண்டில் ஜீன்ஸ்
"பின்னர் எனது தொழில் சிவனின் ஆசியால் தழைத்தோங்கியது. பிட்டு என்னும் பிராண்டில் ஜீன்ஸ், சர்ட், ஜேக்கட்களை விற்றேன். என்னை முழுவதுமாக சிவனுக்கு அர்பணித்த பிறகு, எனது சொத்து தொழிலும் வளர்ந்தது" என்கிறார் பாபா.
வருடாந்திர யாத்திரையில் பாபா மிகவும் பிரபலமான ஒரு நபர். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் இவருடைய வாகன அணிவகுப்பு யாத்திரைக்காக காத்திருப்பர். அவருடன் செல்பி எடுப்பது, வீடியோ எடுப்பது, ஆசி பெறுவது என இருப்பர்.


Click it and Unblock the Notifications