மொபைல் கவரில் 90 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்.! ஐடியா சரி இல்ல.!
பாங்காங் விமான நிலையத்திலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு மொபைல் கவர் மூலம் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளைக் கடத்திய நபர், கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பாங்காங் விமான நிலையத்திலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு மொபைல் கவர் மூலம் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளைக் கடத்திய நபர், கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜீதேந்திர சோலங்கி என்ற நபர், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்டார். சோதனையின் பொது அவரிடமிருந்த பல மொபைல் பிலிப்கவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகமடைந்த போலீசார் பிளிப்கவர்களை பிரித்துப் பார்த்த பொழுது, மொபைல் கவர்களுக்குள் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொபைல் பிளிப்கவரில், 2997 கிராம் எடை உடையத் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து பாங்காங்கில் இருந்து மும்பைக்குக் கடத்தி வந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. கடத்திவரப்பட் தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் 90 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஜீதேந்திர சோலங்கி கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அவருடன் வேற யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று போலீசாரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications