யார்யா நீங்கெல்லாம்.. தங்கத்தை உருக்கி பணமாகத் தரும் ATM.. எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?
சீனாவில் ஒரு புதிய வகை ஏடிஎம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதாவது இந்த புதிய வகை ஏடிஎம் இயந்திரத்தில் தங்கத்தை வைத்தால் அதனைப் பரிசோதித்து பணம் தரும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
எங்கு இருக்கிறது தங்க ஏடிஎம்?
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இந்த தங்க ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. குறிப்பாக இதுதான் உலகின் முதல் தங்க ஏடிஎம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த அதிநவீன ஏடிஎம்-ல் தங்க நகைகள், நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகள் டெபாசிட் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து தங்கத்தை உருக்கும் கருவி மற்றும் எடை பார்க்கும் அமைப்பு, தங்கத்தின் தூய்மை மற்றும் எடையை உடனுக்குடன் கணக்கிடும்.

அதன்பின்பு அந்த தங்கத்தின் சந்தை மதிப்பை மிதிப்பிட்டு, அதே தொகையை டிஜிட்டல் முறையில் உரிமையாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது. குறிப்பாக இந்த தங்க ஏடிஎம் இப்போது உலகம் முழுவதும் அதிக வைரலாகி உள்ளது.
சீனாவில் இருக்கும் இந்த தங்க ஏடிஎம் இயந்திரத்தை கிங்ஹுட் குழு நிறுவனம் தான் உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்தும், தங்கத்தின் குறைந்தபட்ச எடை 3 கிராம் இருக்க வேண்டும். பின்பு தங்கத்தின் தூய்மை 99.99 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் தங்கம் 1200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருக்கப்படுகிறது. இதன் மூலம் உரிமையாளர்கள் தங்களுடைய தங்க நகைகளை எளிதில் பணமாக மாற்றக் கொள்ள முடியும். மேலும் அந்த நாட்டில் 40 கிராம் தங்க சங்கிலி ஒன்றிற்கு கிராமுக்கு 785 யுவான் என மதிப்பீடு செய்யப்பட்டு, மொத்தம் 36,000 யுவான் பெறப்பட்டது. இப்போது தங்க ஏடிஎம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதால், மே மாதம் இதை பயன்படுத்த அதிக அளவில் மக்கள் முன்பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் சீன மக்கள் இந்த ஏடிஎம்-ஐ பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு உள்ள மக்களிடம் தங்கத்தைப் பணமாக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த தங்க ஏடிஎம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் நிறைய தொழில்நுட்பம் இதில் இருக்கிறது. விரைவில் இதுபோன்ற தங்க ஏடிஎம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ரயிலில் ஏடிஎம்:
மேலும் சமீபத்தில் இந்தியாவில் முதல் முறையாக நாசிக் அருகே உள்ள மன்மாட் முதல் மும்பை வரை இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் (Panchavati Express) ரயிலில் ஏடிஎம் (ATM) இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஏடிஎம் இயந்திரம் பஸ் நிலையம், ரயில் நிலையில் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது முதல் முறையாக மத்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனப் பெட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. அதுவும் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்தது.
பெட்டியின் பின்புறத்தில், ஏற்கனவே தற்காலிக சரக்கு அறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் தான் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், ரயிலின் 22 பெட்டிகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இருப்பதால் ஏடிஎம் இயந்திரத்தை மக்கள் எளிதில் அணுக முடியும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








