Home
News

பழைய SIM கார்டு.. உருக்கி, உருக்கி 191 கிராம் தங்கம்.. ரூ.26 லட்சம் மதிப்பு.. ஆனால், செயல்முறை ரொம்ப ரிஸ்க்!

தங்கம் விற்கும் விலைக்கு இனி சவரன் வாங்க முடியாது, கிராம் கணக்கில் தான் வாங்க முடியும் போலயே என்று நினைக்கும் நேரத்தில் பழைய சிம் கார்டுகளை உருக்கி உருக்கி 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்தது மட்டுமல்லாமல், அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார், சீனாவை சேர்ந்த கியாவோ என்னும் நபர். ஆனால், இது மிகவும் ஆபத்தான செயல்முறை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் தங்கத்தில் விலை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்க ஆர்வம் கிளம்பி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஹுய்சோ பகுதியை சேர்ந்த கியாவோ (Qiao) என்று அழைக்கப்படும் நபர் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்து உள்ளார்.

பழைய SIM கார்டு.. உருக்கி, உருக்கி 191 கிராம் தங்கம்.. ரூ.26 லட்சம்!

இப்படி பழைய சிம் கார்டுகளை உருக்கியே 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்து உள்ளார். இந்த தங்கத்தின் மதிப்பு 200,000 யுவானாக இருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.26 லட்சத்துக்கும் மேல் இருக்கும். இப்படிப்பட்ட செயல்முறையிலேயே தங்கத்தை பிரித்ததாகவும் வீடியோ பதிவு செய்து, அதையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மூலமாகவே இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

அந்த வீடியோவில், பழைய சிம் கார்டுகளை கெமிக்கல்கள் நிரப்பப்பட்ட டிரம்களில் கொட்டி வைத்திருக்கிறார். பிறகு ஹீட்டிங் (Heating), டிஸ்பிளேஸ்மெண்ட் (Displacement), கோர்ரோஷன் (Corrosion) போன்ற பல்வேறு செயல்முறைகளை செய்து, தங்கத்தை பிரித்து எடுத்து உள்ளார். இந்த செயல்முறை எளிதானது கிடையாது. மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.

அதேபோல சட்டப்பட்ட இப்படி செய்யவும் முடியாது. ஆகவே, சாதாரண மக்கள் இதை செய்ய முயற்சித்து பார்க்க வேண்டாம். இதையும் அவரே, அந்த வீடியோவில் பதிவு செய்து இருக்கிறார். உண்மையில், ஒரு சிம் கார்டில் 0.001 கிராமுக்கும் குறைவாகவே தங்கம் இருக்கும். ஆகவே, இதில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்தால் பல டன் கணக்கில் சிம் கார்டுகள் தேவைப்படும்.

இது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சிம் கார்டுகள் மட்டுமல்லாமல், டன் கணக்கில் தங்க முலாம் பூசப்பட்ட பொருட்களையும் உருக்கியே தங்கத்தை பிரித்து எடுத்ததாக சியாவோசியாங் மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனத்திடம் கியாவோ தெரிவித்து உள்ளார். இதில் சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை எடுக்கும் செயல்முறை மட்டும் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற பொருட்களை உருக்க சட்டப்பூர்வமாக கியாவோ அனுமதி பெற்றுள்ளார். இதனாலேயே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இதை சாதாரண மக்கள் செய்தால் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இதை செய்வது ஆபத்தானது. சீனாவில் இந்த வீடியோவுக்கு பிறகு பழைய சிம் கார்டுகள் அதிகம் வாங்கப்படுகின்றன.

சொல்லப்போனால், சிம் கார்டுகள் மட்டுமல்லாமல், கணினிகளில் பயன்படுத்தப்பட்ட சிப்கள், பேங்குகள் வழங்கும் கார்டுகளில் இருக்கும் சிப்கள் போன்றவற்றிலும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். இதை உருக்கினால் தங்கம் கிடைக்கும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஏனென்றால், 1 கிராம் தங்கத்தை எடுக்க டன் கணக்கில் கிராப்கள் (Scraps) தேவைப்படும். அதேபோல அந்த செயல்முறைக்கு அதிக பணம் செலவாகும்.

இதற்கு உரிய அனுமதியும் பெற்றிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்தாலும் அந்த தங்கத்தை காசு கொடுத்து வாங்குவதற்கும் இதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்காது. ஆகவே, இதுபோன்ற செயல்முறை வீடியோக்களை பார்த்து, எதையும் செய்யாமல் இருக்க வேண்டும். பழைய சிம் கார்டுகளில் இருந்து மட்டுமே 191 கிராம் தங்கத்தை எடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Gold From Old SIM Cards Man Extracted 191 Grams Worth Rs 26 Lakh Need To Aware This Process
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X