இந்த புது ரூல்ஸ் தெரியாம LPG சிலிண்டர் புக் பண்ணிடாதீங்க.. மாத கணக்கு, ஆண்டு கணக்கு, மொபைல் நம்பர், இ-கேஒய்சி!
எல்பிஜி கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் நெருக்கடி தொடர்பான விஷயத்தில்.. "யாரும் பயப்பட வேண்டாம்.. எல்லாம் கட்டுப்பாடில் இருக்கிறது" என்கிற பேச்சுக்கள் மற்றும் வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் கரைந்து விட்டது போல் தெரிகிறது. போதாக்குறைக்கு - கொரோனா காலத்தை போன்ற தாக்கங்களுக்கு தயார் ஆகுங்கள் என்று கூறி, பிரதமர் மோடி பீதியை கிளப்பி விட்டுள்ளார்.
ஒருவேளை நீங்கள் இதுநாள் வரையிலாக, ஏற்கனவே இருந்த கேஸ் சிலிண்டரை வைத்து நாட்களை ஒட்டி விட்டீர்கள், இப்போது புதிதாக ஒரு எல்பிஜி கேஸ் சிலிண்டரை புக் செய்ய போகிறீர்கள் என்றால்.. பிபிசிஎல் (BPCL) என்கிற பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited) அறிவித்துள்ள புதிய கேஸ் சிலிண்டர் புக்கிங் விதிகளை பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.

1. மாதத்திற்கு அதிகபட்சம் இரண்டு சிலிண்டர்கள்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிர்ணயம் செய்து உள்ள புதிய விதிகளின் படி, ஒரு வீட்டு உபயோக எல்பிஜி வாடிக்கையாளர் (Household LPG customer) ஒரு மாதத்தில் அதிகபட்சமாக இரண்டு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.
2. ஆண்டுக்கு அதிகபட்சம் 15 சிலிண்டர்கள் மற்றும் கூடுதல் சிலிண்டர்களுக்கு ஆப் மூலம் தகவல் தேவை: வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்களின் 12 மானிய சிலிண்டர்களைப் பயன்படுத்திவிட்ட போதிலும், மேலும் சிலிண்டர்கள் தேவைப்பட்டால், அவர்கள் ஹலோ பிபிசிஎல் மொபைல் ஆப் மூலம் விவரங்களை வழங்க வேண்டும். வீட்டில் திருமணம், குடும்ப விழா அல்லது சிறப்பு நிகழ்ச்சி உள்ளதா என்பது போன்ற கேள்விகளை இந்த அமைப்பு கேட்கக்கூடும்.
3. அடுத்த முன்பதிவிற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் காத்திருக்க வேண்டும்: முன்னதாக வாடிக்கையாளர்கள் முந்தைய முன்பதிவிலிருந்து 21 நாட்கள் கழித்து தான் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடிந்தது. இப்போது எல்ஜிபி கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் தட்டுப்பாடு காரணமாக, 25 நாட்களாக மாறியுள்ளது.
4.டெலிவரியின் போது ஒடிபி (டிஏசி) தேவை: எல்பிஜி கேஸ் சிலிண்டர் டெலிவரியின் போது, வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் டிஏசி (DAC) என்கிற டெலிவரி அங்கீகாரக் குறியீட்டை (Delivery Authentication Code) பெறுவார்கள், சிலர் இதை டெலிவரி ஒடிபி என்றும் கூறுவார்கள். இதுவும் அவசியம்.
5. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கட்டாய இ-கேஒய்சி: பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை (Registered Mobile Number) பயன்படுத்தி மட்டுமே சிலிண்டர் முன்பதிவுகளை செய்ய முடியும். வாடிக்கையாளர் தனது எண்ணை மாற்றியிருந்தால், அதை ஏஜென்சியிலோ அல்லது ஆப் மூலமாகவோ புதுப்பிக்க வேண்டும். இ-கேஒய்சி செயல்முறையும் அவசியம்.
கட்டாய இ-கேஒய்சி (Aadhaar e-KYC) செயல்முறை என்கிற அறிவிப்பு நுகர்வோர் மத்தியில், குறிப்பாக ஏற்கனவே தங்களது இ-கேஒய்சி செயல்முறையை முடித்திருந்தவர்களிடையே, சிறிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுவரை தங்களது இ-கேஒய்சி செயல்முறையை முடிக்காத எல்பிஜி நுகர்வோர் மட்டுமே அதை செய்ய வேண்டும்.
எல்பிஜிக்காக தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை ஏற்கனவே முடித்த நுகர்வோர், இந்த செயல்முறையை மீண்டும் செய்ய தேவையில்லை. பிரதம மந்திரி மாதத் திட்டத்தில் சேராத எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு இந்த விதி இன்னும் எளிமையானது: எல்பிஜி இணைப்புக்கான இ-கேஒய்சி ஒருமுறை பூர்த்தி செய்யப்பட்டால், அது இன்னமும் செல்லுபடியாகும், அதை மீண்டும் செய்ய தேவையில்லை!


Click it and Unblock the Notifications








