அது.. கைய மீறி போயிடுச்சு.. இனிமே ஒன்னும் பண்ண முடியாது.. AI காட்ஃபாதர் கிளப்பும் புது பீதி!
ஏஐ-யின் காட்ஃபாதர் (Godfather of AI) என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton) விடுத்துள்ள "இந்த" எச்சரிக்கையை எளிமையாக கடந்து போக முடியாது. ஏனென்றால் சாட்ஜிபிடி (ChatGPT), பிங் (Bing) மற்றும் பார்ட் (Bard) போன்ற சாட்பாட்களின் அடிப்படையாக செயல்படும் நரம்பியல் வலையமைப்பை (Neural Network) உருவாக்கியதே இவர்தான்!
ஆக, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence) தொடர்பான கசப்பான உண்மைகளையும் (Facts), அதனால் வரவிருக்கும் ஆபத்துகளையும் (Risks) இவரை விட வேறு யாராலும் சரியாக சொல்ல முடியாது. போதாக்குறைக்கு இவர் கூகுளில் (Google) இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே, ஏஐ தொடர்பான உண்மைகளை வெளிப்படையாக பேசத்தான்!

ராய்ட்டர்ஸ்க்கு (Reuters) அளித்த சமீபத்திய பேட்டியின் போது ஜெஃப்ரி ஹிண்டன், ஏஐ தொடர்பான ஒரு அவரச எச்சரிக்கையை விடுத்துள்ளார். பருவநிலை மாற்றத்தை (Climate Change) விட நாமெல்லாம் சந்திக்க போகும் மிகவும் அவரசரமான அச்சுறுத்தல் (Urgent Risk) என்றால் அது ஏஐ தான்" என்று கூறியுள்ளார்.
"காலநிலை மாற்றத்தில் இருந்து தப்பிக்க இன்னமும் நமக்கு ஒரு வழி உள்ளது; விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை மீறிச்செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிவோம். கார்பனை (Carbon) எரிப்பதை நிறுத்தினால் இறுதியில் விஷயங்கள் சரியாகிவிடும். ஆனால் செயற்கை நுண்ணறிவு என்று வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியவில்லை" என்று பகீர் கிளப்பியுள்ளார்.
மேலும் "பருவநிலை மாற்றத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று நான் கூற விரும்பவில்லை. அதுவும் ஒரு பெரிய ஆபத்துதான். ஆனால் ஏஐ-யின் ஆபத்துகள் இன்னும் அவசரமானது" என்றும் ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரித்துள்ளார். "ஏஐ-யின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் (Upgraded Versions of AI) மனிதகுலத்திற்கு ஆபத்தானவை" என்று ஹிண்டன் கூறுவது இது முதல் முறை அல்ல!
கூகுள் நிறுவனத்தில் தனது வேலையை ராஜினாமா செய்த கையோடு "ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ஆனது பகுப்பாய்வு செய்யும் பரந்த அளவிலான தரவுகளிலிருந்து எதிர்பாராத நடத்தையை கற்றுக்கொள்ளும் (Unexpected behaviour) போக்கை கொண்டுள்ளது. எப்போது ஏஐ சொந்தமாக கோடிங் (Coding) எழுதி, அதை ரன் (Run) செய்ய தொடங்குகிறதோ அப்போது மனிதர்களுக்கான வேலைகள் பறிக்கப்படும்" என்று எச்சரித்திருந்தார்.
மேலும் "மற்றவர்களை போலவே நானும் கூட.. இதெல்லாம் நடக்க இன்னும் 30 - 50 ஆண்டுகள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நான் அப்படி நினைக்கவில்லை" என்றும் ஜெஃப்ரி ஹிண்டன் கூறியுள்ளார். எம்ஐடி டெக்னாலஜி ரிவியூ உடனான மற்றொரு நேர்காணலில், "நுண்ணறிவின் அடிப்படையில் ஏஐ ஆனது விரைவில் மனிதர்களை மிஞ்சும்" என்றும் ஹிண்டன் எச்சரித்துளார்.
"மனிதர்களை விட புத்திசாலித்தனமான இயந்திரங்களை உருவாக்குவதன் சாத்தியமான விளைவுகளை (Potential consequences) பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க தொடங்க வேண்டும். ஒப்பீட்டளவில் ஜிபிடி 4 வெர்ஷனுக்கு ஒரு நபரை விட நூற்றுக்கணக்கான மடங்கு அதிக விஷயங்கள் தெரியும். எனவே அது நம்மை விட சிறந்த லேர்னிங் அல்காரிதம்களை (Learning algorithm) பெற்றிருக்கலாம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications








