எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே "இதை" செய்ங்க.. இல்லனா?

|

CERT-In வழியாக கிடைக்கும் எந்தவொரு எச்சரிக்கையையும் ஈஸியாக எடுத்துக்கொள்ள முடியாது; எடுத்துக்கொள்ளவும் கூடாது. ஏனென்றால் CERT-In என்பது இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (Indian Computer Emergency Response Team) ஆகும்.

இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பான CERT-In, ஹேக்கிங் மற்றும் ஃபிஷிங் போன்ற சைபர் செக்யூரிட்டி அச்சுறுத்தல்களை கையாள்வதில் ஒரு கில்லாடி ஆகும்.

கில்லாடி மட்டுமல்ல.. பொதுநல விரும்பியும் கூட!

கில்லாடி மட்டுமல்ல.. பொதுநல விரும்பியும் கூட!

சைபர் செக்யூரிட்டி அச்சுறுத்தல்களை கையாள்வது மட்டுமின்றி, CERT-In ஆனது கம்ப்யூட்டர் செக்யூரிட்டி தொடர்பான சம்பவங்களுக்கு 'ரெஸ்பான்ஸ்' செய்வது, அது தொடர்பான பாதிப்புகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவது மற்றும் நாடு முழுவதும் உள்ள மகக்ளுக்கு, பயனுள்ள தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நடைமுறைகளை பரிந்துரைப்பது போன்ற பணிகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் தான், CERT-In வழியாக கிடைக்கும் எந்தவொரு எச்சரிக்கையுமே சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அதில் பட்டியலில், சமீபத்தில் வெளியான ஒரு ஹை-ரிஸ்க் வார்னிங்கும் அடங்கும்!

அதென்ன வார்னிங்? அதை புறக்கணித்தால் என்ன ஆகும்?

அதென்ன வார்னிங்? அதை புறக்கணித்தால் என்ன ஆகும்?

கூகுள் க்ரோம் யூசர்கள், சைபர் அட்டாக்கிற்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக இருப்பதாக இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துளளது. இதனொரு பகுதியாக, CERT-In 'மிகவும் தீவிரமான எச்சரிக்கை' என்று பட்டியலிடப்படும் ஒரு வார்னிங்-ஐ வெளியிட்டுள்ளது.

வெளியான CERT-In அறிக்கையானது, 103.0.5060.53 க்கு முந்தைய கூகுள் க்ரோம் வெர்ஷனை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எச்சரிக்கிறது.

அப்போ இவ்ளோ வருஷம் Windows 98-ஐ வச்சி தான் Mars-ல தண்ணீ தேடுனீங்களா?அப்போ இவ்ளோ வருஷம் Windows 98-ஐ வச்சி தான் Mars-ல தண்ணீ தேடுனீங்களா?

ஹேக்கர்கள் கைவரிசை!

ஹேக்கர்கள் கைவரிசை!

மேலும் அந்த அறிக்கை, கூகுள் க்ரோமில் (இதுபோன்ற) பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், இதன் கீழ் தன்னிச்சையான குறியீட்டை (arbitrary code) இயக்குவது, முக்கியமான தகவலை வெளிப்படுத்துவது மற்றும் டார்கெட்டட் சிஸ்டம்களில் உள்ள செக்யூரிட்டி ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்-ஐ தவிர்ப்பது போன்ற வேலைகளில் ஹேக்கர்கள் ஈடுபடுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வெப் ரெக்வஸ்ட்-ஐ (Web Request) அனுப்புவதன் மூலம் ஒரு ஹேக்கரால், மேற்குறிப்பிட்ட சிக்கல்களுக்குள் உங்களை தள்ள முடியும்.

இதில் சிக்காமல் தப்பித்து.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இதில் சிக்காமல் தப்பித்து.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

ரொம்ப சிம்பிள்! அவ்வப்போது கூகுள் க்ரோம் ப்ரவுஸர்-ஐ அப்டேட் செய்ய வேண்டும்; அவ்வளவு தான்!

கூகுள் க்ரோம், உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு இன்டர்நெட் ப்ரவுஸர் ஆகும். இந்த ப்ரவுஸரை தினமும் மில்லியன் கணக்கான யூசர்ர்கள் அணுகுகிறார்கள்.

அனைத்து வகையான யூசர்களின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தின் கீழ் - உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான - கூகுள், மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி அம்சங்களை உள்ளடக்கிய அப்டேட்களை தொடர்ந்து வெளியிடுகிறது. அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.

அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது "இதை" மறக்காம செக் பண்ணுங்க!

க்ரோம் ப்ரவுஸரின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளதா?

க்ரோம் ப்ரவுஸரின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளதா?

ஆம்! கூகுள் நிறுவனம் இந்த வாரம் அதன் க்ரோம் ப்ரவுஸருக்கான லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்டது. அது Windows, Mac மற்றும் Linux க்கு அணுக கிடைக்கிறது. குறிப்பிட்ட அப்டேட்டில் சைபர் கிரைமினல்களால் பயன்படுத்தக்கூடிய கடுமையான பக்ஸ்களுக்கான (Bugs) திருத்தங்கள் (Fixes) உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, எந்தவொரு ஆன்லைன் மோசடியையும் மற்றும் சைபர் தாக்குதல்களையும் தவிர்க்க, உடனடியாக உங்கள் Google Chrome ப்ரவுஸர்-ஐ அப்டேட் செய்யவும். அதை செய்வது எப்படி? கூகுள் க்ரோமில் எங்கே சென்று அப்டேட்-ஐ கண்டுபிடிப்பது? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

கூகுள் க்ரோம் ப்ரவுஸர்-ஐ அப்டேட் செய்வது எப்படி?

கூகுள் க்ரோம் ப்ரவுஸர்-ஐ அப்டேட் செய்வது எப்படி?

- முதலில், கூகுள் க்ரோம் ப்ரவுஸரை திறக்கவும்.

- பின்னர் ப்ரவுஸரின் மேல் வலது மூலையில் உள்ள 'த்ரீ-டாட்' ஐகானை (செங்குத்தான மூன்று புள்ளிகளை) கிளிக் செய்யவும்.

- இப்போது மெனுவிலிருந்து 'செட்டிங்ஸ்' (Settings) என்பதை கிளிக் செய்யவும்.

- பிறகு, இடது பக்கத்தில் உள்ள 'அபௌட் க்ரோம்' (About Chrome) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- கூகுள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட் உங்களுக்கு அணுக கிடைக்கும் பட்சத்தில், அது அங்கே காட்சிப்படும். அதை கிளிக் செய்து உங்கள் க்ரோம் ப்ரவுஸரை அப்டேட் செய்து கொள்ளவும்.

- அப்டேட் முடிந்ததும், ப்ரவுஸர்-ஐ ரீலான்ச் (Relaunch) செய்யவும்; அவவ்ளவு தான்!

Samsung Samsung "தயவால்" அறிமுகமாகும் iPhone 14 சீரீஸ்; Apple-க்கு வந்த சத்திய சோதனை!

வார்னிங் வந்தாலும் வராவிட்டாலும் எப்போதும் அலெர்ட் ஆக இருக்கவும்!

வார்னிங் வந்தாலும் வராவிட்டாலும் எப்போதும் அலெர்ட் ஆக இருக்கவும்!

க்ரோம் ப்ரவுஸரை மட்டுமல்ல, ஆன்லைனில் அணுக கிடைக்கும் "எல்லாவற்றையுமே" அடிக்கடி அப்டேட் செய்யும் பழக்கத்தினை கொண்டு வாருங்கள். ஏதாவது ஒரு எச்சரிக்கை வெளியான பிறகு அப்டேட் செய்து கொள்ளலாம் என்று மெத்தனமாக இருக்க வேண்டாம்.

ஹேக் செய்து திருடும் அளவிற்கு என்னிடம் ஒன்றுமில்லை என்று அசால்ட் ஆகவும் இருக்க வேண்டாம். ஏனெனில் எது, எப்போது திருடப்படும்? எது, எங்கே அம்பலப்படுத்தப்படும் என்று யாருக்கும் தெரியாது. எனவே எப்போதும் அலெர்ட் ஆக இருங்கள்!

Best Mobiles in India

English summary
Just Go to your Google Chrome Browser Settings and Update It Immediately Because CERT-In releases a High-Risk Warning to do that. Check details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X