உங்க ஸ்மார்ட்போன் இதுவா?- "கூகுள் மேப்ஸ், ஜிமெயில், யூடியூப்" இனி இந்த ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படாது!

|

ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ், கூகுல் ப்ளே ஸ்டோர், கூகுள் கேலண்டர் உள்ள பல கூகுள் செயலிகள் கீழே குறிப்பிட்டுள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிமெயல், யூடியூப், கூகுள் மேப்ஸ்

ஜிமெயல், யூடியூப், கூகுள் மேப்ஸ்

குறிப்பிட்டுள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் கணக்கில் உள்நுழைவதற்கு ஜிமெயல், யூடியூப், கூகுள் மேப்ஸ் ஆகியவற்றுக்கான அணுகலை கிடைக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு போன் பயனர்கள்

குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு போன் பயனர்கள்

குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் தங்களது சாதனத்தை புதுப்பிப்பதற்கான நேரம் இதுவாகும். காரணம் செயலி மேம்படுத்தலே ஆகும். குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பான ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் போன்ற பல முக்கிய பயன்பாடுகளின் அணுகலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 2.3 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 2.3 ஓஎஸ்

தற்போது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் பயன்பாட்டை பயன்படுத்தி வருகிறோம். சில பயனர்கள் ஆண்ட்ராய்டு 2.3 ஓஎஸ்-ல் இயங்கும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்ட்ராய்டு 2.3 ஒஎஸ்-ல் இயங்கும் ஆண்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் டிசம்பர் 2010-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு 11 பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தை கருத்தில் கொண்டு அதற்கான மேம்படுத்தல் தேவை இருப்பதால் ஆண்ட்ராய்டு 2.3 ஓஎஸ்-ஐ கைவிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் இது தங்கள் பயனர்களை பாதுகாப்பாக வைப்பதற்கான தங்களின் முயற்சிகளின் ஒரு பகுதி என கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27 முதல் இயங்காது

செப்டம்பர் 27 முதல் இயங்காது

இதேபோல் கடந்தமுறை பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு 2.3-ல் இயங்கும் சாதனங்களில் கூகுள் பே கொடுப்பனவுகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது செப்டம்பர் 27 முதல் கூகுள் கணக்கு மூலம் அனைத்து பயனர்களும் உள்நுழைவதற்கான தடுக்கும் திட்டத்தை எடுக்க கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.

கூகுள் மேப்ஸ், ஜிமெயில், கூகுள் கேலண்டர்

கூகுள் மேப்ஸ், ஜிமெயில், கூகுள் கேலண்டர்

குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கூகுள் பயன்பாடுகளில் உள்நுழைய முயற்சிக்கும் பயனர்கள் தங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவைகளை சரியாக பதிவு செய்தாலும் பிழை என்றே காண்பார்கள். அதேபோல் பிற பயன்பாடான யூடியூப், கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ், ஜிமெயில், கூகுள் கேலண்டர் உள்ளிட்ட கூகுள் கணக்குகளும் பிற பிரபலமான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்-ம் வேலை செய்வது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 3.0-க்கு மேம்படுத்தல் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 3.0-க்கு மேம்படுத்தல் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 2.3 ஓஎஸ் மூலம் இயங்கும் சாதனங்களை பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் சாதனம் மேம்படுத்தலுக்கான தகுதியை பெற்றிருந்தால் அதை ஆண்ட்ராய்டு 3.0-க்கு மேம்படுத்தல் செய்யலாம். ஓஎஸ் புதுப்பித்தலுக்கு தங்கள் சாதனம் தகுதியானதாக இல்லை என்றால் புதிய ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது.

பிரதானமாக இருக்கும் வாட்ஸ்அப்

பிரதானமாக இருக்கும் வாட்ஸ்அப்

சமூகவலைதளத்தில் மிகவும் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப். இது பிரபல செய்தி பரிமாற்ற தளமாக இருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் இனி ஆப்பிள் சாம்சங் உள்ளிட்ட சில நிறுவனங்களின் சாதனங்களில் வேலை செய்யாது என குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அப்டேட் தான் இதற்கு காரணம் ஆகும்.

சிஸ்டம் அப்டேட்

சிஸ்டம் அப்டேட்

வாட்ஸ்அப் சமீபத்தில் தனது சிஸ்டம் அப்டேட்களை அறிவித்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட பழைய ஓஎஸ்-ல் இயங்கும் சாதங்களில் வாட்ஸ்அப் பயன்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அதன் பக்கத்தில் அதன் பயன்பாட்டை புதுப்பித்து அறிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஐஓஎஸ் 9 உள்ளிட்ட சாதனங்களில் நவம்பர் 1, 2021 முதல் இயங்காது என தெரிவித்துள்ளது. அதேபோல் அதற்கு முன்பு பழைய சாதனங்களுக்கான ஆதரவை டிசம்பர் 2020-ல் அறிவித்தது.

வாட்ஸ்அப் செயல்படுத்த முடியாது

வாட்ஸ்அப் செயல்படுத்த முடியாது

வாட்ஸ்அப் அதன் கேள்விகள் பக்கத்தில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1, ஐபோன் ஐஓஸ் 10, கெய் ஓஎஸ் 2.5.1 மற்றும் ஜியோபோன், ஜியோபோன் 2 ஆகிய சாதனங்களில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தங்கள் சாதனத்தில் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு சாதனத்தில் மட்டுமே வாட்ஸ்அப் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி உங்கள் சாதனம் ஆண்ட்ராய்டு 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஐஓஎஸ் 9-ல் இயங்குகிறது என்றால் அந்த ஓஎஸ் மேம்படுத்தவும், வேறு சாதனங்கள் வாங்குவதற்கான நேரம் இதுவாகும்.

எந்தெந்த சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படாது

எந்தெந்த சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படாது

எந்தெந்த சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்பது குறித்து பார்க்கலாம்.

சாம்சங்: சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் லைட் 2, கேலக்ஸி எஸ்2, கேலக்ஸி எஸ்3 மினி, கேலக்ஸி எக்ஸ்கவர் 2, கேலக்ஸி கவர், கேலக்ஸி ஏஸ்2

எல்ஜி: எல்ஜி லூசிட் 2, ஆப்டிமஸ் எஃப்7, ஆப்டிமஸ் எஃப்5, ஆப்டிமஸ் எல்3 2, ஆப்டிமஸ் எல்7, ஆப்டிமஸ் எல்7 டூயல், ஆப்டிமஸ் எல் 7 2, ஆப்டிமஸ் எஃப் 6, ஆப்டிமஸ் எல்4 2 டூயல், ஆப்டிமஸ் எஃப் 3, ஆப்டிமஸ் எல்4 2, ஆப்டிமஸ் எல் 2 2, ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி, 4எக்ஸ் எச்டி, ஆப்டிமஸ் எஃப்3 க்யூ

ஹூவாய்: ஹூவாய் ஏஸ்சென்ட் ஜி740, ஏஸ்சென்ட் மேட், ஏஸ்சென்ட் டி க்வாட் எக்ஸ் எல், ஏஸ்சென்ட் டி1 க்வாட் எக்ஸ்எல், ஏஸ்சென்ட் பி1 எஸ், ஏஸ்சென்ட் டி2

சோனி: சோனி எக்ஸ்பீரியா மிரோ, சோனி எக்ஸ்பீரியா நியோஎல், எக்ஸ்பீரியா ஆர்க் 5

அதேபோல் ஆல்காடெல் ஒன் டச் எவோ 7, ஆர்கோஸ் 53 பிளாட்டினம், எச்டிசி டிசைர் 500, கேட்டர்பில்லர் கேட் பி15, விகோ கங்க் ஃபைவ், விகோ டார்க் நைட், லெனோவா ஏ820, யூஎம்ஐ எக்ஸ் 2 ஆகிய சாதனங்களில் இயங்காது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Gmail, Youtube, Google Maps Will Discontinue its Services on these Android Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X