உங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் நம்பமுடியாத மோசடி: உஷார்.!

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயலில் பாதுகாப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்துபவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

|

ஜிமெயில் பயனர்களின் கணக்கில் இருந்து நம்பமுடியாத நம்பமுடியாத மோசடி ஏற்ப்பட்டுள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது, அதன்படி பயனர்களின் ஜிமெயில் கணக்கில் இருந்து அவர்களுக்கே spam-எனப்படும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் நம்பமுடியாத மோசடி: உஷார்.!

உலகத்திலேயே ஜிமெயில் தான் அதிகம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. மேலும் இந்த சேவையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இப்போது ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்லை என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களிலும் பெற முடியும். இவை சஜசன்ஸ் (Suggestions) அடிப்படையில் செயல்படுகிறது.

ஜிமெயில்:

ஜிமெயில்:

ஜிமெயில் பயன்படுத்தும் அனைத்து மக்களுக்கும் spam-எனப்படும் மின்னஞ்சல்கள் கண்டிப்பாக அனுப்பப்படும், மேலும் இதனை தவிர்க்க அவற்றின் சர்வர்-கணிப்பொறிகளில் spam filter எனப்படும் முறையால் தான் பிரித்தெடுக்கப்படுகிறது.

மோசடி:

மோசடி:

இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி பயனர்களின் ஜிமெயில் கணக்கில் இருந்து அவர்களுக்கே spam மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய மோசடி நடைபெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜிமெயில் பயனர்களுக்கு இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் spam filter கட்டுப்பாட்டையும் மீறி மெயில் வந்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலஸ்:

டெலஸ்:

இவ்வாறு அனுப்பப்படும் spam மின்னஞ்சல்கள் டெலஸ் எனப்படும் கனடா நாட்டுத் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து அனுப்பப்படுவது போல போலியாக வைத்துக் கொள்கின்றன. மேலும் அந்த மின்னஞ்சல்களின் தலைப்பு உடல் எடையைக் குறைக்கும் வழிகள் மற்றும் மருந்துகள் என்பதாக அமைந்துள்ளன.

மஷாபில்:

மஷாபில்:

மேலும் இப்போது வந்துள்ள இந்த மோசடி தகவல்கள் மஷாபில் எனும் தொழில்நுட்ப இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால், சிறிய அளவிலான ஜிமெயில் பயனர்களின் சேவையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அறிந்துள்ளோம், விரைவில் இதனை சரிசெய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
10சதவீதம்:

10சதவீதம்:

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயலில் பாதுகாப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்துபவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுளின் இலவசமான ஜிமெயில் சேவையை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துகின்றனர். அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையாகவும் ஜிமெயில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Gmail Users Receiving Spams From Their Own Accounts; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X