சத்தமின்றி Gmail-ல் புதிய அம்சத்தைச் சேர்த்த கூகுள்.. உற்சாகத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்கள்..
கூகுள் (Google) நிறுவனம் தொடர்ந்து பயனுள்ள அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு ஜிமெயில் (Gmail) வசதியில் ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய வசதி உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும், அதேசமயம் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது கூகுள் நிறுவனம் ஜெமெயில் கேள்வி பதில் (Gmail Q&A) அம்சத்தை வெளியிட தொடங்கியுள்ளது. குறிப்பாக உங்களது ஜிமெயில் இன்பாக்ஸைப் பற்றிய கேள்விகளைக் கேட்கவும், ஜெமினி ஏஐ சாட்பாட் பயன்படுத்தவும் கூகுள் சமீபத்தில் அனுமதிக்கத் தொடங்கியது. இந்த புதிய அம்சம் தற்போது மொபைலுக்கும் வருகிறது. ஆனாலும் ஜெமெயில் கேள்வி பதில் (Gmail Q&A) அம்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் தான் வெளிவரத் தொடங்கியுள்ளது. விரைவில் இந்த அம்சம் ஐஓஎஸ் (IOS) தளங்களுக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீங்கள் Gmail Q&A பயன்படுத்தி உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸை பற்றி கேள்விகளை ஜெமினியிடம் கேட்டகலாம் அல்லது உங்கள் மின்னஞ்சல்களில் குறிப்பிட்ட விவரங்களைக் கண்டறிதல், படிக்காத செய்திகளைக் (மெயில்களை) காண்பிப்பது, குறிப்பிட்ட அனுப்புநரிடமிருந்து செய்திகளைப் பார்ப்பது அல்லது உங்கள் இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சல்களைச் சுருக்கமாகக் கூறுவது போன்றவற்றைச் செய்யலாம்.
சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் Gmail Q&A என்பது உங்களது மின்னஞ்சலைப் பிரிப்பதற்கு அல்லது உங்கள் இன்பாக்ஸின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் மெயிலை கண்டறிவதற்கான ஒரு பயனுள்ள சிறந்த வழியாகும். அதேபோல் கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற அதன் I/O மாநாட்டில் Gmail Q&A பற்றி கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இந்த புதிய வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது இந்த வசதியை பெற நீங்கள் Google One AI பிரீமியத்திற்கு சேர வேண்டும் அல்லது Gemini Business, Enterprise, Education, Education Premium போன்ற திட்டத்தில்
இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Gmail Q&A வசதியானது கடந்த ஆகஸ்ட் 29, 2024 அன்று வெளிவரத் தொடங்கியது. ஆனால் இது பல்வேறு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க இன்னும் 15 நாட்கள் வரை ஆகலாம் என Google கூறுகிறது. குறிப்பாக இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் செயலியிலும் சில புதிய அம்சங்களைக் கொண்டுவந்தது. இது குறித்த தகவல்களையும் இங்கே பார்க்கலாம். அதாவது நெரிசல் அதிகமாக உள்ள நகரச் சாலைகளில் பயணம் செய்யும் போது, ஒரு ஃபிளைஓவர் வந்தால் மேலே செல்ல வேண்டுமா அல்லது கீழே செல்ல வேண்டுமா என்ற குழப்பம் வரும். சில சமயங்களில் இந்த சிறிய தவறான முடிவால் பல கிமீ கூடுதல் பயணம் செய்த நிகழ்வுகளும் பலருக்கும் நிகழ்ந்திருக்கும்.
இந்த நிலையில் இந்த மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்க கூகுள் மேப்ஸ் செயலியில் ஃபளைஓவர் அலர்ட் (Flyover Alerts) என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த ஃபிளைஓவர் வசதி மூலம் நாம் மேலே செல்ல வேண்டுமா அல்லது ஃபிளைஓவருக்கு கீழே செல்ல வேண்டுமா என்பதனை மேப்ஸே தெளிவாகக் கூறிவிடும் என்கிற கூகுள் நிறுவனம். குறிப்பாக பிளைஓவர் அலர்ட் வசதியானது 40 நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதியானது அனைத்து நகரங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதபோல் கூகுள் மேப்ஸ் இனி குறுகலான பாதையை தவிர்த்தல் (Avoiding Narrow Roads) குறித்து சொல்லும். வழக்கமான பாதையில் செல்லாமல் புதிய பாதையில் செல்லும் போது சில நேரம் குறுகலான பாதைகளில் நாம் மாட்டிக் கொள்ள நேரிடும். இதனைத் தவிர்க்க புதிய வசதியைக் கூகுள் மேப்ஸ் கொண்டுவந்துள்ளது. அதாவது இந்த வசதியின் மூலம் நாம் செல்லும் பாதையில் குறுகலான இடம் இருக்கிறதா என்பதைக் கணித்து மேப்ஸ் நமக்குச் சொல்லும்.
அதுவும் இந்த வசதியை ஏஐ (AI) மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறது கூகுள். குறிப்பாக ஏஐ வசதியானது சாட்டிலைட் மேப்ஸ், ஸ்ட்ரீட் வியூ படங்கள் மற்றும் ஒரு சாலை குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரித்து அது குறுகலான பாதையா இல்லையா என்பதனை பயனாளர்களுக்குக் கணித்துச் சொல்லுமாம். மேலும் இந்த வசதி இந்தியாவில் சில முக்கியமான நகரங்களில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நகரங்களிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
photo credit: fortuneindia.com


Click it and Unblock the Notifications








