Home
News

Gmail அக்கவுண்ட் இருக்கா? அறிமுகமானது புதிய வசதிகள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

கூகுள் (Google) நிறுவனம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஜிமெயில் சேவையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது செயற்றை நுண்ணறிவு (AI) அம்சத்துடன் ஜிமெயலை மொத்தமாக மாற்றி அமைத்துள்ளது. உலக முழுதும் உள்ள பல கோடி ஜிமெயில் பயனர்களுக்கும் இந்த மாற்றம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த புதிய மாற்றத்தின் மூலம் ஜிமெயில் வெறும் மெயில் அனுப்பும் ஒரு கருவியாக இல்லாமல் ஒரு டிஜிட்டல் உதவியாளர் என்று மாறிவிடும். சரி இப்போது கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையில் கொண்டுவந்துள்ள புதிய வசதிகளைக் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Gmail அக்கவுண்ட் இருக்கா? அறிமுகமானது புதிய வசதிகள்..

மெயில் எழுத சிரமம் இருக்காது
ஜிமெயில் (Gmail) தளத்தில் Help Me Write என்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நமக்கு மெயில் எழுதும் சிரமத்தைக் குறைக்கும். பயனர்கள் டைப் செய்யும்போதே ஜமெயிலில் இருக்கும் ஏஐ வாக்கியங்களைப் பரிந்துரைக்கும். அதுவும் இந்த அம்சம் வாக்கியங்களைச் சரி செய்யும் அல்லது முழு மெயிலை கூட டைப் செய்து கொடுக்கும்.

குறிப்பாக உங்களின் ஸ்டைலை புரிந்து கொண்டு, நீங்கள் டைப் செய்வது போலவே ஒரு மெயிலை ரெடி செய்து கொடுக்கும். அதாவது ஒரே மாதிரியான மெயிலாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மெயில் என்பதை போல இருக்கும். பின்பு அந்த வெர்ஷனை கூட நீங்கள் படித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

ஸ்மார்ட் தேடல் வசதி
கூகுள் ப்ரோ மற்றும் அல்ட்ரா சேவைகளை வைத்திருக்கும் பயனர்களுக்கு ஸ்மார்ட் தேடல் (Smart Search) வசதி கிடைக்கிறது. அதாவது நாம் ஜிமெயிலில் பழைய மெயிலை தேட வேண்டும் என்று செர்ச் இடத்தில் டைப் செய்வோம். அது கீவோர்ட்டை ஒப்பிட்டு பல மெயில்களை எடுத்து வந்து கொடுக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட் தேடல் வசதி மூலம் கீவோர்டை டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது நேரடியாக என்ன வேண்டும் அதை டைப்செய்யலாம்.

ஒரு உதாரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புக் செய்த விமான டிக்கெட் தேவை என்று எளிதாகக் கேள்வி கேட்கலாம். அதற்கு ஜிமெயில் உங்கள் இன்பாக்ஸை ஸ்கேன் செய்து துல்லியமான முடிவுகளை வழங்கும். மேலும் அமெரிக்காவில் மட்டும் சில பயனர்களிடம் ஏஐ இன்பாக்ஸ் (AI Inbox) என்ற வசதியும் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மெயில்களை ஸ்கேன் செய்து, கவனிக்கப்படாத நினைவூட்டல்கள், செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு எடுத்து வந்து காட்டும் என்று கூறப்படுகிறது.

Gmail அக்கவுண்ட் இருக்கா? அறிமுகமானது புதிய வசதிகள்..

மேலே கூறிய அம்சங்கள் அனைத்தும் கூகுள் நிறுவனத்தின் லார்ஜ் லெங்குவேஜ் மாடலான ஜெமினி 3 (Gemini 3) மூலம் இயங்குகின்றன. குறிப்பாக ஜிமெயில் சேவையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய அம்சங்களை அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி, கூகுள் நிறுவனம் பயனர்களுக்குப் பழைய ஜிமெயில் யூசர் நேமை மாற்றிக் கொள்ளும் வசதியைச் சோதனை அடிப்படையில் உருவாக்கி வருகிறது. குறிப்பாக இதன் மூலம் புதிய கூகுள் கணக்கு உருவாக்காமல் அதே கணக்கில் புதிய ஜிமெயில் முகவரியைத் தேர்வு செய்ய முடியும். குறிப்பாக சிறிய வயதில் உருவாக்கிய மெயில் ஐடியை இப்போது மாற்ற நினைக்கும் பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Gmail users now access Gemini 3 AI tools: How do you know?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X