Gmail யூஸ் பண்ணுறீங்களா? ஆபத்தில் 250 கோடி கணக்குகள்.. Google நேரடியாக கொடுத்த எச்சரிக்கை.. உடனே கவனியுங்க..
ஜிமெயில் (Gmail) பயன்படுத்தும் உலகத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் கூகுள் (Google) நிறுவனம் தற்போது நேரடியாக ஒரு புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய எச்சரிக்கை செய்தி, உங்கள் Gmail கணக்கை எப்படி பாதுகாப்பாக வைப்பதென்ற அறிவுரையுடன் வெளிவந்துள்ளது. ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) அம்சத்தை பயன்படுத்தி 2.5 பில்லியன் ஜிமெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூகுள் நிறுவனம் (Google warns 250 crore Gamil accounts are in danger) எச்சரித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க உடனே சில செயல்முறைகளை செய்யும்படி கூகிள் வலியுறுத்தியுள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone), லேப்டாப் (Laptop) அல்லது டெஸ்க்டாப் (desktop) என்று எந்தவொரு சாதனமாக இருந்தாலும், அதில் நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், இந்த பதிவை இறுதி வரை மிஸ் செய்யாமல் படியுங்கள். உலகத்தில் உள்ள அணைத்து ஜிமெயில் பயனர்களுக்கு AI உதவியுடன் நடைபெறும் புதிய ஹேக்கிங் குறித்து கூகுள் நிறுவனம் நேரடி எச்சரிக்கை (GOOGLE direct warning about AI powered hacking threat) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Gmail யூஸ் பண்ணுறீங்களா? ஆபத்தில் 250 கோடி கணக்குகள்.. Google நேரடியாக கொடுத்த எச்சரிக்கை:
உங்கள் ஜிமெயில் கணக்கில் (Gmail account) இருக்கும் தகவல்களுக்கு ஆபத்து விளைவிக்கும் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான போர்ப்ஸ் (Forbes) தகவலின் படி, தனிப்பட்ட நபர்களின் தகவல்களை திருடும் மோசமான ஹேக்கர்கள் ஜிமெயில் பயனர்களை போனில் அழைத்து கூகுள் சப்போர்ட் ஏஜெண்ட்ஸ் (Google support agent) போல பாவித்து, உங்கள் ஜிமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறி உங்களை காப்பாற்ற வந்தவர்கள் போல பேச துவங்குவார்கள்.
உங்கள் ஜிமெயில் கணக்கு ஹேக்கர்களால் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. உங்கள் Gmail கணக்கை இப்போது ஹேக்கர்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். உங்கள் ஜிமெயில் கணக்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களில் (Gmail connected devices) இருக்கும் தகவல்கள் எல்லாம் திருடு போக வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மூலம் மோசடி நடைபெற போகிறது என்று பல விஷயங்களை கூறி உங்களை பதட்டமடைய வைப்பார்கள்.
கூகுள் சப்போர்ட் ஏஜென்ட் போல பாவித்து பேசும் ஹேக்கர்கள்.. உஷார் மக்களே:
பிறகு, உங்கள் ஜிமெயில் கணக்கை ஹேக்கர்கள் அணுகுவதை உடனே தடுக்க உங்கள் ஜிமெயில் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள ரெக்கவரி கோட் எண்களை (Gmail recovery code details) உடனே எங்களிடம் பகிருங்கள். ஹேக் செய்யப்பட்ட உங்கள் ஜிமெயில் கணக்கை மீண்டும் உங்களிடம் பாதுகாப்பாக மீட்டு தருகிறோம் (Gmail account recovery) என்று பல நம்பிக்கை வார்த்தைகளை கூறி உங்களை மோசடி வலைக்குள் சிக்க வைக்கப் பார்ப்பார்கள்.
கூகுள் சப்போர்ட் ஏஜென்ட் போல பேசி, உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸை (Gmail inbox) ஓபன் செய்ய அறிவுரைப்பார்கள். உங்கள் ஜிமெயில் கணக்கிற்கு அசல் கூகுள் நிறுவனத்திடம் இருந்து வந்தது போன்ற ஒரு ரிக்கவரி மெயில் (Recovery mail) உங்கள் இன்பாக்சில் காண்பிக்கப்படும். யார் இந்த மெயிலை பார்த்தாலும், அது உண்மை தான் என்று நம்புவது போல, அந்த மெயிலை ஹேக்கர்கள் உருவாக்கியுள்ளதே பலர் ஏமாற்றம் அடைய காரணமாக இருக்கிறது.
ரெக்கவரி கோட் விபரங்களை பகிர்ந்துவிடாதீர்கள்.. உடனே இதை செய்யுங்கள் Google அறிவுரை:
உங்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலில் உள்ள ரிக்கவரி கோட் விபரங்களை அந்த நபருடன் பகிர்ந்த அடுத்த நொடி முதல் உங்கள் ஜிமெயில் கணக்கு ஹேக் (Alert of new Gmail hack) செய்யப்பட்டுவிடும். அதுவரை, அவர்கள் கூறிய அணைத்து விதமான ஆபத்துகளும் அந்த ரிக்கவரி கோட் விபரங்களை நீங்கள் பகிர்ந்த பிறகு தான் துவங்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இத்தகைய சிக்கலில் சிக்காமல் இருக்க ஜிமெயில் பயனர்கள் உடனே 2 ஃபேக்ட்டர் அத்தென்டிகேஷன் (Gmail 2 factor authentication) அம்சத்தை ஆக்டிவேட் செய்ய Google வலியுறுத்தியுள்ளது. அதேபோல், ஒருவேளை இதற்கு முன் உங்களை இதுபோன்ற கூகுள் சப்போர்ட் அதிகாரி யாரேனும் அழைத்து, அவர்களுடன் நீங்கள் ரிக்கவரி கோட் விபரங்களை பகிர்ந்திருந்தால், உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூகுள் நிறுவனம் (protection steps to keep your Gmail account safe from hacking) தகவல் வெளியிட்டுள்ளது.
உங்கள் Gmail கணக்கை பாதுகாப்பாக வைக்க உடனே இதை செய்யுங்கள்:
- உங்கள் Android சாதனத்தில் உள்ள Settings செல்லவும்.
- Google என்பதை கிளிக் செய்து உங்கள் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- Manage your Google account என்பதை கிளிக் செய்யவும்.
- மேலே உள்ள Security டேப் பட்டனை தட்டவும்.
- How to sign in to your Google account என்பதன் கீழ், Password விற்பதை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் புதிய பாஸ்வோர்டு தகவலை உள்ளிட்டு Change Password என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் பாஸ்வோர்டு மறந்துவிட்டால், Forgot my password என்பதைத் தட்டி, பாதுகாப்பு கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
- உங்கள் பாஸ்வோர்டை மீட்டமைக்கவும் திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்க, உங்கள் ஜிமெயில் கணக்கிற்கு எப்போதும் இரண்டு-காரணி அங்கீகாரத்தை இயக்கவும். ஹேக்கர்கள் உங்கள் கடவுச்சொல்லைப் (Password) பெற முடிந்தாலும், இந்த கூடுதல் படி உங்கள் கணக்கை அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கான வாய்ப்புகளைக் கணிசமாகக் குறைக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








