Home
News

Gmail கணக்கு இருக்கா? Mobile, லேப்டாப், கம்ப்யூட்டர் எதுவா இருந்தாலும் உஷாரா இருக்கனும்.. இல்லாட்டி சிக்கல்..

உங்கள் ஸ்மார்ட்போனில், மொபைலில், லேப்டாப்பில் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் ஜிமெயில் (Gmail) பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. காரணம், ஜிமெயில் பயனர்களை பாதிப்படைய செய்யும் புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாகவும், இதனால், உலகளவில் உள்ள பல கோடி கணக்கான ஜிமெயில் பயனர்களின் தகவல்களை திருடப்பட்டு மோசடி செய்யப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தல் இப்போது பல நாடுகளில் உள்ள ஜிமெயில் பயனர்களை பாதிப்படைய செய்து வருகிறது. இந்த அச்சுறுத்தல் இப்போது மிக வேகமாக இந்தியாவிலும் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மோசடி ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸில் (Gmail Inbox) கணக்கு மீட்பு கோரிக்கைகளின் மூலம் அவர்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நுட்பமான மோசடி போலி தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை உள்ளடக்கியது. இது பயனர்களின் சட்டபூர்வத்தன்மையை நம்ப வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வ கூகிள் தகவல்தொடர்பு போல தோன்றுகிறது. இருப்பினும் இது போலியானதாக இருக்கிறது.

Gmail கணக்கு இருக்கா? Mobile, லேப்டாப், கம்ப்யூட்டர் உஷார் மக்களே..

Gmail கணக்கு இருக்கா? Mobile, லேப்டாப், கம்ப்யூட்டரில் ஜிமெயில் யூஸ் பண்ணுறீங்களா? உஷார்:

தொழில்நுட்ப பதிவர் சாம் மித்ரோவிச் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, மோசடி எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியுள்ளார். ஜிமெயில் பயனர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்த ஆலோசனைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த மோசடி பொதுவாக பயனர்களால் தொடங்கப்படாத ஜிமெயிலுக்கான கணக்கு மீட்டலை அங்கீகரிக்க (gmail account recovery request) வேண்டும் என்று கூறும் எதிர்பாராத அறிவிப்போடு தொடங்குகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த மோசடியை பயனர் மறுத்தால், மோசடி செய்பவர்கள் சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு தொலைபேசி அழைப்புடன் பின்தொடர்வார்கள். கூகிள் (Google) அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து வரும் இந்த அழைப்பு, பயனரின் ஜிமெயில் கணக்கில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டதாக கூறி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகிள் பிரதிநிதிகள் போல நடிக்கும் மோசடி செய்பவர்கள், உங்களை ஏமாற்ற பல விதமான பொய்களை அடுக்கடுக்காக கூறுவார்கள்.

உங்கள் ஜிமெயில் இன்பாக்சிற்கு அனுப்பப்பட்டுள்ள மோசடி மீட்பு கோரிக்கையை அங்கீகரிக்க (Gmail account recovery request Link) தூண்டுவார்கள். அதில் உள்ள லிங்கை (Link) நீங்கள் கிளிக் செய்யாத வரை மட்டுமே உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பானதாக இருக்கும். ஒரு முறை அந்த லிங்கை கிளிக் செய்தால் கூட, மோசடி செய்பவருக்கு உங்களின் ஒட்டுமொத்த ஜிமெயில் கணக்கிற்கு முழு அணுகல் கிடைக்கும்.

இந்த சிக்கலில் நீங்கள் சிக்காமல் இருக்க Gmail பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?
- முதலில் நீங்கள் தாங்களாகவே தொடங்காத எந்த மீட்பு கோரிக்கைகளையும் அங்கீகரிக்க கூடாது.
- கூகுள் அதிகாரி என்று கூறி யார் பேசினாலும் அழைப்பை துண்டிப்பது பாதுகாப்பானது.
- வந்த மெயில் இல் டொமைன் பெயர் அல்லது "To" மின்னஞ்சல் முகவரிகளை கவனமாக ஆய்வு செய்யவும்.
- உங்கள் ஜிமெயில் லாகின் தகவல்களை கண்காணிப்பது அவசியமானது.

எச்சரிக்கையாக இருந்து இந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஜிமெயில் பயனர்கள் இந்த ஏஐ (AI) இயக்கப்படும் மோசடியிலிருந்து தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தலாம். தனிப்பட்ட தகவல்களுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பது இந்த டிஜிட்டல் காலத்தில் மிகவும் முக்கியமானது. இந்த புதிய Gmail மோசடியில் மற்றவர்களும் சிக்கி பாதிப்படையாமல் இருக்க, உடனே இந்த செய்தியை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Gmail Users Alert Beware Of New AI Gmail Scam Affecting Mobile Laptop and Computers Around World
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X