Gmail கணக்கு இருக்கா? அலெர்ட்.. உடனே இந்த விஷயத்தை கொஞ்சம் கவனிங்க.. இல்லையெனில் சிக்கல் தான்..
ஜிமெயில் சேவையை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மாணவர்கள், அலுவலங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் இந்த ஜிமெயில் சேவையில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் பயனுள்ள வகையில் உள்ளன.
ஆனாலும் இந்த ஜிமெயில் சேவையில் அவ்வப்போது எதாவது ஒரு பிரச்சனை வருகிறது. தற்போதும் ஒரு புதிய பிரச்சனை வந்துள்ளது. அதாவது ஜிமெயிலில் தேவையற்ற ஸ்பேம் மின்னஞ்சல்களைத் தடுக்க அறிமுகம் செய்யப்பட்ட Unsubscribe பட்டன் தற்போது ஹேக்கர்களின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. குறிப்பாக இது வெளிப்படையாகப் பாதிப்பில்லாததாகத் தோன்றினாலும் இது உங்கள் தனிப்பட்ட தரவை திருடி, உங்கள் சாதனங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஆபத்தான மோசடியாகும்.

எரிச்சலூட்டும் ஸ்பேம் மின்னஞ்சல்களை வருவதைத் தடுக்க ஜமெயிலில் Unsubscribe அம்சத்தை அறிமுகம் செய்தது கூகுள். குறிப்பாக இந்த அம்சம் மூலம் தேவையற்ற மின்னஞ்சல்களை எளிமையாகத் தடுக்க முடிந்தது. ஆனால் தற்போது ஹேக்கர்கள் இந்த அம்சத்தையே பயன்படுத்தி கவனக்குறைவான பயனர்களை ஏமாற்றுகின்றனர்.
ஜிமெயில் Unsubscribe மோசடி
அதாவது சில விளம்பர மின்னஞ்சல்களில் உள்ள Unsubscribe பட்டனை பயன்படுத்தி ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். எனவே இந்த பட்டனை கிளிக் செய்யும்போது, நீங்கள் ஒரு போலியான வலைப்பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள். உடனே இதன் மூலம் மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கணினியில் பதிவிறக்கப்பட்டு உங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி நீக்கப்படுவதற்குப் பதிலாக, உங்கள் தரவுகள் திருடப்படுகின்றன எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி மற்றும் Unsubscribe மோசடிகளிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1.முதலில் நீங்கள் அறியாத அல்லது நம்பகமற்ற அனுப்புநர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள Unsubscribe பட்டனை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். குறிப்பாக இதுபோன்ற மின்னஞ்சல்களில் எந்த இணைப்புகளுடன் தொடர்பு கொள்ளாமல் அதை உடனே நீக்கிவிடுவது மிகவும் நல்லது.
2. அதேபோல் உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் தலைப்பில் Urgent அல்லது "இறுதி அறிவிப்பு" என இருந்தால் அந்த மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாம். குறிப்பாக இவை மோசடியாளர்களால் அவசர உணர்வை உருவாக்கி, நீங்கள் யோசிக்காமல் கிளிக் செய்யத் தூண்டும் பொதுவான தந்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3. குறிப்பாக இந்த unsubscribe பட்டனின் இருப்பிடத்தைச் சரிபார்க்கவும். அதாவது இந்த Unsubscribe பட்டன் மின்னஞ்சல்
விவரங்களுக்கு அடுத்ததாக, மேல்பகுதியில் இல்லையெனில், அதை தொடவே வேண்டாம். உண்மையான unsubscribe விருப்பங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்.

4.மின்னஞ்சல்களில் எந்த இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன்பு மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை முழுமையாகப் படிக்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது மிகவும் நல்லது. அதாவது சில நேரங்களில் உற்று நோக்கினால் தெளிவான விவரங்கள் தெரிந்துவிடும்.
5. தற்போது மின்னஞ்சல் மோசடிகள் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தல். எனவே உங்களது இன்பாக்ஸில் வரும் மின்னஞ்சல்களில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்வதற்கு முன்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








