அடேங்கப்பா! Gmail இல் இப்படி 5 அம்சங்கள் இருக்கா? Send செய்த மெயிலை Undo செய்வது எப்படி?

|

இந்தியாவில் உள்ள 80% மக்களில், பெரும்பாலானோரிடம் குறைந்தது ஒரு Gmail கணக்காவது இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என்று அனைவருக்கும் இப்போது ஒரு ஜிமெயில் கணக்கின் தேவை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆரம்ப இன்ஸ்டால் செட்டப்பிற்கு உங்களுடைய Gmail தகவல் தேவைப்படுகிறது.

இந்தியாவில் யாரெல்லாம் ஜிமெயில் பயன்படுத்துகிறார்கள்?

இந்தியாவில் யாரெல்லாம் ஜிமெயில் பயன்படுத்துகிறார்கள்?

இதனால், இந்தியாவில் ஜிமெயில் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை பல மில்லியனை தாண்டி செல்கிறது. பலவிதமான மக்கள், இந்த ஜிமெயில் சேவையை வெவ்வேறு விதங்களில் பயன்படுத்துகின்றனர். அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இதைத் தினமும் அலுவலக பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் அவர்களின் அசைன்மென்ட், மற்ற படிப்பு சார்ந்த தகவல்களை ஷேர் செய்யப் படுத்துகின்றனர்.

Gmail பயனர்களே இந்த 5 விஷயங்களை கட்டாயம் தெரித்துக்கொள்ளுங்கள்

Gmail பயனர்களே இந்த 5 விஷயங்களை கட்டாயம் தெரித்துக்கொள்ளுங்கள்

இன்னும், சிலர் யூடியூப், கூகிள் பிளே ஸ்டோர்களில் லாகின் செய்வதற்காக மட்டும் கூட Gmail கணக்கை வைத்துள்ளனர். எது எப்படியாக இருந்தாலும், இந்த பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களிடமும் ஒரு ஜிமெயில் அக்கௌன்ட் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நம்மிடம் இருக்கும் GMail கணக்கை எப்படி ஒரு அமெச்சர் போலல்லாமல் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் ஒரு ஜிமெயில் பயனர் என்றால், இந்த 5 விஷயங்களைக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

Gmail இல் இந்த அம்சங்கள் எல்லாம் இருக்கிறதா? அடேங்கப்பா!

Gmail இல் இந்த அம்சங்கள் எல்லாம் இருக்கிறதா? அடேங்கப்பா!

Gmail இல் உள்ள பல அம்சங்களை ஜிமெயில் பயனர்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக, ஜிமெயில் இல் உள்ள பல அம்சங்கள் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை. நீங்கள் பயன்படுத்தும் ஜிமெயில் அக்கௌன்ட்டிற்கு தீம் வைத்து அலங்கரிப்பது, ஜிமெயில் இல் இருந்து வீடியோ காலிங் செய்வது, தவறாக அனுப்பப்பட்ட மெயிலை எப்படி Undo செய்வது போன்ற பல அம்சங்கள் Gmail இல் உள்ளது.

Gmail மூலம் வீடியோ காலிங் செய்வது எப்படி?

Gmail மூலம் வீடியோ காலிங் செய்வது எப்படி?

இது போன்ற 5 முக்கிய அம்சங்களை நாம் எப்படிப் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.

சரி, முதலில் எப்படி Gmail இல் இருந்து வீடியோ அழைப்பை மேற்கொள்வது என்று பார்க்கலாம். இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால், முதலில் உங்களுடைய மெயிலில் உள்ள Chat அம்சத்தை Settings சென்று ஆக்டிவேட் செய்ய வேண்டும். பின்னர், சாட் டேப் இல் இருந்து விரும்பும் பயனர்களை ஆட் செய்து, வீடியோ காலிங் ஐகானை அழுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஜிமெயில் Inbox-க்கு எப்படி தீம் செட் செய்வது?

ஜிமெயில் Inbox-க்கு எப்படி தீம் செட் செய்வது?

உங்களுக்குப் பிடித்த புகைப்படத்தையோ அல்லது ஜிமெயில் வழங்கும் தீம் ஆப்ஷன்களையோ தேர்வு செய்து உங்கள் இன்பாக்ஸ் தீம்-ஐ நீங்கள் மாற்றி அமைக்கலாம். இதை செய்வதற்கு, Gmail இல் உள்ள Settings மெனுவிற்கு சென்று, அங்குள்ள Themes ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். Select image அல்லது அங்குள்ள Default தீம் விருப்பங்களை கிளிக் செய்து உங்கள் இன்பாக்ஸிற்கு ஒரு புதிய தீம் செட் செய்யலாம்.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

Lables செட் செய்து கூட மெயில் யூஸ் பண்ணலாம்

Lables செட் செய்து கூட மெயில் யூஸ் பண்ணலாம்

இதேபோல், Lables விருப்பத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். லேபிள்ஸ் விருப்பம் உங்களுக்கு போல்டர் போன்ற பயன்முறையை வழங்குகிறது. Lables விருப்பத்தை ஆக்டிவேட் செய்ய, நீங்கள் ரீட் செய்யும் மெயிலை கிளிக் செய்து Lables என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். ஒரு மெயிலிற்கு நீங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட லேபிள்களை செட் செய்யலாம் என்பது கவனிக்கத்தக்கது.

ஜிமெயில் இன்பாக்சில் இருக்கும் Categories விருப்பம்

ஜிமெயில் இன்பாக்சில் இருக்கும் Categories விருப்பம்

உங்களுக்கு வரும் விதவிதமான மெயில்களை, ஜிமெயில் தானாகவே பிரிக்கிறது. உதாரணத்திற்கு, உங்களுக்கு அனுப்பப்படும் சேல்ஸ் தொடர்பான மெயில்கள் Promotions டேப் உள் வைக்கப்படும். ஸ்பேம் போன்று தெரியும் மெயில்களை ஜிமெயில் நேரடியாக Spam போல்டர்களில் வைக்கிறது. நீங்கள் இன்பாக்சில் எதிர்பார்க்கும் சில மெயில்களை காணவில்லை என்றால், பதற்றமடையாமல் Spam இல் தேடிப்பாருங்கள்.

1000 கணக்கான மெயில்களில் இருந்து 1 குறிப்பிட்ட மெயிலை கண்டுபிடிப்பது எப்படி?

1000 கணக்கான மெயில்களில் இருந்து 1 குறிப்பிட்ட மெயிலை கண்டுபிடிப்பது எப்படி?

ஜிமெயில் இன்பாக்ஸ் என்றாலே அதில் குறைந்தது சில ஆயிரக்கணக்கான மெயில்கள் குவிந்திருக்கக் கூடும். இந்த 1000 கணக்கான மெயில்களில் இருந்து, வேகமாக ஒரே ஒரு குறிப்பிட்ட மெயிலை மட்டும் நீங்கள் தேர்வு செய்ய நினைக்கிறீர்கள் என்றால், மெயில் பாக்ஸின் மேலே உள்ள Search mails விருப்பத்தை கிளிக் செய்து, அந்த நபரின் பெயர் அல்லது நினைவில் இருக்கும் மெயில் ஐடி விபரங்களை உள்ளிடுங்கள் போதும். நீங்கள் தேடும் மெயில் தானாக மேலே வந்து நிற்கும்.

ஓ மை காட்! Nothing Phone 1 மீது கிடைக்கும் சலுகை இதானா? 33W பாஸ்ட் சார்ஜிங் உண்மையாவே இருக்கா?ஓ மை காட்! Nothing Phone 1 மீது கிடைக்கும் சலுகை இதானா? 33W பாஸ்ட் சார்ஜிங் உண்மையாவே இருக்கா?

தவறாக அனுப்பப்பட்ட மெயிலை எப்படி Undo செய்வது?

தவறாக அனுப்பப்பட்ட மெயிலை எப்படி Undo செய்வது?

இது நம்மில் பெரும்பாலோனோருக்கு நடந்திருக்க வாய்ப்புள்ளது. நாம் அனுப்ப நினைத்த மெயிலை தவறுதலாக யாருக்காவது அனுப்பி இருப்போம் அல்லது அந்த மெயிலில் அட்டாச் செய்யப்பட வேண்டிய அட்டாச்மென்டை ஆட் செய்ய மறந்து மெயிலை அனுப்பி இருப்போம். இந்த மாதிரி நேரத்தில் உங்களுடைய ஜிமெயில் Undo விருப்பத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்து வைத்திருந்தால், சில குறிப்பிட நேரத்திற்குள் நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெயிலை மீட்டெடுக்கலாம். இந்த அம்சங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஜிமெயில் பயன்பாடு இன்னும் எளிமையானதாக மாறிவிடும்.

Best Mobiles in India

English summary
Gmail Tips: How To Undo Sent Mail Easily and You Should Know These 5 Tricks For Better Experience

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X