மாஸ் தல.. Gmail ஸ்டோரேஜ் ஃபுள் ஆகிடுச்சா? இந்த 5 டிப்ஸை பாலோவ் பண்ணுங்க.. டக்குனு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைக்கும்..
கூகுள் (Google) நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான ஜிமெயில் (Gmail) சேவை உலகளவில் மிக முக்கியமான சேவையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு (Android smartphone users) இது மிகவும் முக்கியமான சேவையாக பார்க்கப்படுகிறது. இல்லை-இல்லை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இதுவொரு கட்டாய சேவையாக பார்க்கப்படுகிறது. காரணம், ஜிமெயில் கணக்கு (Gmail account) விபரங்கள் இல்லாமல் உங்களால் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை முழுமையாக இயக்க முடியாது. இப்படி மிக முக்கியமான ஜிமெயில் சேவையில் அடிக்கடி ஸ்டோரேஜ் சிக்கல் (Gmail storage full problem) எழுகிறது. இதனால், பலரும் இக்கட்டான சூள்நுழைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஜிமெயில் ஸ்டோரேஜ் ஃபுள் என்ற நோட்டிபிகேஷனை அவர்களுடைய ஸ்மார்ட்போன் (smartphone) அல்லது லேப்டாப் (laptop) சாதனங்களில் பார்க்காத ஆளே இல்லை என்று கூட நாம் கூறலாம். அந்த அளவிற்கு இது எல்லோராலும் பொதுவாக சந்திக்கப்படும் ஒரு சிக்கலாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வதென்று பலருக்கும் ஐடியா இல்லை. ஆனால், மிகவும் எளிமையாக 5 செயல்முறைகளை பின்பற்றி உங்கள் ஜிமெயில் ஸ்டோரேஜ்ஜை கிளீன் (Gmail storage clean) செய்ய முடியும்.

உங்களுக்கும் ஜிமெயில் ஸ்டோரேஜ் சிக்கல் இருக்கிறதா?
அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ஜிமெயில் ஸ்டோரேஜ் சிக்கல் (Gmail storage problem) இருக்கும் நேரத்தில் உங்களால் புதிய மெயில்களை (mails) பெற முடியாது. இதனால் பல முக்கியமான விஷயங்களை நீங்கள் தவற நேரிடலாம். இனி அந்த நிலைக்கு நீங்கள் செல்லாமல் இருக்க, இந்த 5 செயல்முறைகளை பின்பற்றி உங்கள் ஜிமெயில் ஸ்பேஸ் அளவை (clear Gmail space) திருத்திக்கொள்ளுங்கள்.
1. பழைய மற்றும் பெரிய ஈமெயில்களை டெலீட் செய்க:
ஸ்டோரேஜ் சிக்கலை சரி செய்ய உங்கள் இன்பாக்சில் (Inbox) உள்ள பெரிய அட்டாச்மெண்ட் கொண்ட மெயில்களை (attachment mails) நீங்கள் முதலில் டெலீட் (delete mail) செய்ய வேண்டும். பொதுவாக 10MB அளவுக்கு மேல் உள்ள மெயில்களை ஜிமெயில் சுட்டிக்காண்பிக்கும் அவற்றில் உள்ள மெயில்களை கிளிக் செய்து டெலீட் செய்யுங்கள். டெலீட் செய்வதற்கு முன் அட்டாச்மெண்ட்களை டவுன்லோட் (download) செய்ய மறக்காதீர்கள்.
2. தேவையற்ற குரூப் மற்றும் சேவைகளில் இருந்து குழுவிலகவும்:
ப்ரோமோஷனல் ஈமெயில்களால் ஜிமெயில் இன்பாக்ஸ் நிரப்படுவது ஒரு வழக்கமாகிவிட்டது. இந்த தேவையற்ற மெயில்களால் நமது ஜிமெயில் ஸ்டோரேஜ் அகரமிக்கப்படுகிறது. தேவையற்ற சேவைகளின் மெயிலை கிளிக் செய்து Unsubscribe கிளிக் செய்யவும் அல்லது ஜிமெயில் பில்டர் விருப்பத்தை கிளிக் செய்து Unread/Promotions தேர்வு செய்து மொத்தமாக மெயில்களை டெலிட் செய்யலாம்.
3. ஸ்பேம் மற்றும் ட்ராஷ் போல்டரை டெலீட் செய்க:
நூற்றுக்கணக்கான குப்பை தேவையற்ற ஸ்பேம் மெயில்கள் (Spam mails) மற்றும் நீங்கள் டெலீட் செய்த ட்ராஷ் மெயில்கள் (Trash mails) ஸ்பேம் மற்றும் ட்ராஷ் போல்டர்களில் (Spam and Trash Folders) நிரம்பியிருக்கும். அதை கிளீன் செய்ய அந்தந்த போல்டரில் காணப்படும் Empty என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் போதும். மொத்தமாக அந்த போல்டர்களில் உள்ள மெயில்கள் டெலீட் செய்யப்படும்.
4. ஜிமெயில் ஸ்டோரேஜ் மேனேஜரை பயன்படுத்துக:
கூகுள் இப்போது ஸ்டோரேஜ் மேனேஜர் டூல் (Storage Manager tool) என்ற சேவையை Manage Your Google Account பிரிவின் கீழ் வழங்குகிறது. இது உங்கள் கணக்கில் உள்ள பெரிய மெயில்களை கண்டறிந்து வேகமாக டெலீட் செய்ய உதவுகிறது. ஆண்ட்ராய்டு போனில் செட்டிங்ஸ் (Settings) சென்று Google Account கிளிக் செய்து, Manage Storage கிளிக் செய்து இதை அணுகலாம்.
5. பேக்அப் மற்றும் ஆர்கைவ் ஈமெயில்கள்:
மிக முக்கியமான மெயில்களை கூகுள் டேக்அவுட் (Google Takeout) போன்ற சேவைகளை பயன்படுத்தி, அந்த மெயில்களை தனியாக எக்ஸ்போர்ட் செய்து, உங்கள் போன் ஸ்டோரேஜ்ஜிற்கு அல்லது Google Drive-க்கு நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் ஜிமெயில் ஸ்டோரேஜ் சிக்கலை சரி செய்ய முடியும். முக்கியமான மெயில்களை பேக்அப் (Backup) செய்து, அவற்றை ஆர்கைவ் (Archive) செய்துகொள்வதும் ஸ்டோரேஜ் சிக்கலுக்கு கைகொடுக்கும்.


Click it and Unblock the Notifications