Gmail அக்கவுண்ட் இருக்கா? வந்தது புதிய அம்சம்.. இனி அந்த சிக்கல் இருக்காது.. இதே முழு விவரம்..
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கூகுள் (Google) நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) சேவையைப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆதார் (AAdhaar) கார்டு, பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட் வரையில் இந்த ஜிமெயில் பயன்படுகிறது. இதுதவிர மாணவர்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் இந்த ஜிமெயில் சேவைையில் அவ்வப்போது புதிய அம்சங்களை சேர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் தற்போது ஜிமெயில் சேவையில் ஒரு புதிய டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் (Manage subscriptions) எனும் புதிய டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

அதவது நமது மெயில் இன்பாக்ஸ்களில் குவியும் நியூஸ் லெட்டர் உள்ளிட்ட அவசியமற்ற மெயில்களை மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் எனும் இந்த புதிய டேப் கீழ் கொண்டுவர ஜிமெயில் முடிவு செய்துள்ளது. எனவே இவ்வாறு செய்யும் போது நியூஸ் லெட்டர், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியிலான மெயில்களை எளிதில் கண்டறிந்து நீக்கவோ வகைப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதன் மூலம் இன்பாக்ஸ்களில் தேவையின்றி குவிந்து இருக்கும் மெசேஜ்களை பில்ட்டர் செய்து தேவையான மெயில்களை மட்டும் எளிதில் பார்க்க முடியும் என்பதால் ஜிமெயில் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த அம்சம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
மேலும் இந்த புதிய டூல் சமீபத்திய வாரங்களில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களின் எண்ணிக்கையுடன், செயலில் உள்ள சந்தாக்களை அவற்றின் frequency அடிப்படையில் காட்டுகிறது. உதாரணமாக ஒரு அனுப்புனர் சமீபத்தில் எத்தனை மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது, அதுவும் அந்த அனுப்புநரை கிளிக் செய்தால், அவர்களின் அனைத்து மின்னஞ்சல்களையும் பார்க்கலாம். உடனே அவர்களை unsubscribe செய்ய முடிவு செய்தால், ஜமெயில் தானாகவே உங்கள் சார்பாக ஒரு விலகல் கோரிக்கையை அனுப்பும்.
பயனர்கள் தங்கள் இன்பாக்ஸை சுத்தம் செய்து சந்தா மின்னஞ்சல்களை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவும் வகையில் இந்த புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது கூகுள் நிறுவனம்.
பயன்படுத்துவது எப்படி?
ஜிமெயிலில் இந்த அம்சத்தை பயன்படுத்த வெப் பிரவுசர் அல்லது மொபைலில் ஜிமெயிலில் திறக்கவும்
அடுத்து ஜிமெயில் இன்பாக்ஸின் மேல் இடது மூலையில் உள்ள நேவிகேஷன் (navigation) பாரில் கிளிக் செய்து
மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் (Manage subscriptions) என்பதை கிளிக் செய்யவும்.
அதன்பின்பு எளிதாக நியூஸ் லெட்டர், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியிலான மெயில்களை எளிதில் கண்டறிந்து நீக்கவோ வகைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிமெயிலின் தயாரிப்பு இயக்குநர் கிறிஸ் டோன் இது குறித்து கூறுகையில், பயனர்கள் தேவையற்ற சந்தா மின்னஞ்சல்களை அதிக அளவில் எதிர்கொள்கின்றனர். இந்த அம்சம் ஒரே இடத்தில் அவற்றை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது. மேலும் இந்த அம்சம் இன்பாக்ஸ் குப்பைகளை குறைக்கவும் உதவுகிறது. பின்பு இது பயனர்களுக்கு தேவையற்ற மெயில்கள் வருவதைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று அவர் கூறினார்.
கூகுள் நிறுவனம் தற்போது இணையம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் ஜிமெயிலுக்கான மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை வெளியிட்டு வருகிறது. ஆனாலும் இந்த புரிய அம்சம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இந்த புதிய அம்சம் அனைத்து நாடுகளிலும் உள்ள பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் மின்னஞ்சல்களைத் தடுக்கும் வகையில் இந்த புதிய அம்சம் வெளிவந்துள்ளதால் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








