உருமாறிய Gmail.! இனி உங்கள் இன்பாக்ஸ் லுக்கே மாறபோகுது.. இனி இப்படி தான் Gmail யூஸ் பண்ணனுமா?

|

Gmail பயனர்கள் கொஞ்சம் கவனியுங்க, இப்போது வரை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஜிமெயில் அக்கௌன்ட்டின் தோற்றம் இனி முழுமையாக மாறப்போகிறது. ஆம், Google நிறுவனம், இப்போது அதன் Gmail சேவைக்கான டிசைனை மாற்றி அமைத்துள்ளது. இதற்கான, புதிய அப்டேட் ரோல்அவுட்டை நிறுவனம் இப்போது அனைவருக்கும் கிடைக்கும் படி வெளியிட்டுள்ளது. இதன் படி, இனி உங்களுடைய ஜிமெயில் தோற்றமே முழுமையாக மாறப்போகிறது.

புதிய Gmail அப்டேட் ரோல்அவுட்

புதிய Gmail அப்டேட் ரோல்அவுட்

கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அப்டேட் ரோல்அவுட் மூலம் என்னென்ன மாற்றங்களை எல்லாம் நாம் பெறப்போகிறோம் என்றும், நிறுவனம் இந்த புதிய அப்டேட் மூலம் என்னென்ன மேம்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது என்றும் இப்போது தெரிந்துகொள்ளலாம் வாங்க. Google நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் தகவலின் படி, இந்த புதிய அப்டேட், அட்டகாசமான புதிய வடிவமைப்புடன் அனைவருக்கும் கிடைக்கும் படி லைவ் செய்யப்பட்டுள்ளது.

புதிய மெட்டீரியல் யூ டிசைன் தோற்றத்தில் உருமாறும் Gmail

புதிய மெட்டீரியல் யூ டிசைன் தோற்றத்தில் உருமாறும் Gmail

ஜிமெயிலின் புதிய மெட்டீரியல் யூ டிசைன் வரும் வாரங்களில் அனைவருக்கும் லைவ் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில பயனர்களுக்கு இப்போதே கிடைக்கத் துவங்கிவிட்டது. கூகிள் இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அப்டேட் மூலம் பழக்கமான ஜிமெயில் இடைமுகத்தின் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் இனி ஒரு இடத்திலிருந்து பல ஆப்ஸ்களுக்கு இடையில் மாறுவதை நிறுவனம் எளிதாக்கியுள்ளது.

புதிய டிசைனில் உள்ள மாற்றங்கள் எல்லாம் என்ன?

புதிய டிசைனில் உள்ள மாற்றங்கள் எல்லாம் என்ன?

மாற்றங்களின் பட்டியலில் முதலில் இருக்கும் புதிய மாற்றம், ஜிமெயில் 'சைடு பேனல்' ஆக உள்ளது. இது பயனர்களை, அவர்களின் மெயில், சாட்ஸ், ஸ்பேஸ் மற்றும் மீட் ஆகியவற்றுக்கு இடையே மாற அனுமதிக்கிறது. இதைக் கூகிள் Integrated View என்று அழைக்கிறது. சைடு பேனல் ஐகான்களைக் கிளிக் செய்வதன் மூலம் பயன்பாடுகளுக்கு இடையில் மாறுவதை Gmail இப்போது எளிதாக்கியுள்ளது. இது, உண்மையில் பயனர்களின் நேரத்தை மிச்சம்பிடிக்கச் செய்கிறது.

அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?

ஜிமெயில் இன் புதிய Integrated View ஆப்ஷன் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஜிமெயில் இன் புதிய Integrated View ஆப்ஷன் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஜிமெயில் கணக்கில் சாட் (Chat) மோடை இயக்கியவர்களுக்கு மட்டுமே இந்த Integrated View ஆப்ஷன் பயன்படுத்தக் கிடைக்கும் என்றும் கூகிள் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், கூகிள் நிறுவனம் ஜிமெயில் இல் கிடைக்கும் பில்டர் ஆப்ஷனிலும் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதேபோல், சிஸ்டம் லேபிள்கள் மற்றும் பயனர் உருவாக்கிய லேபிள்கள் இப்போது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இது ஒரு சிறப்பான மாற்றம் தான்.

Gmail இன் புதிய சாட் பப்பில்ஸ் முதல் சர்ச் சிப்ஸ் வரை

Gmail இன் புதிய சாட் பப்பில்ஸ் முதல் சர்ச் சிப்ஸ் வரை

இதேபோல், புதிய ஜிமெயில் அப்டேட் மூலம் இனி பயனர்கள் மெசேஜ் செய்யும் போது, குயிக் ரிப்ளை செய்வதற்கான விருப்பத்தையும் கூகிள் சாட் பப்பில்ஸ் தோற்றத்தில் வழங்கத் துவங்கியுள்ளது. புதிய பில்டர் பட்டன்களையும் Gmail இப்போது பெறுகிறது. இதைக் கூகிள் நிறுவனம், Search Chips என்று அழைக்கிறது. சர்ச் சிப்ஸ் எனப்படும் இந்தப் புதிய பில்டர்கள், "has attachment" மற்றும் "is unread" போன்ற வினவல்களைப் பயன்படுத்தி மெயில்களை வரிசைப்படுத்தப் பயனர்களுக்கு உதவுகிறது.

IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்

இனி Particular மெயிலை தேடி கண்டுபிடிப்பது சுலபம்

இனி Particular மெயிலை தேடி கண்டுபிடிப்பது சுலபம்

இது ஜிமெயில் இன்பாக்ஸில் மேம்பட்ட தேடலைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், நீங்கள் ஒரு மின்னஞ்சலைத் தேடும்போது மட்டுமே இந்த பில்டர்கள் ஆக்டிவேட் செய்யப்படும். ஜிமெயில் இப்போது contextual search பரிந்துரைகளை வழங்கத் துவங்கியுள்ளது. கான்டெக்ஸ்ட்ச்சுவல் சர்ச் தொடர்பான செயல்பாட்டை நிறுவனம் இப்போது பெரிதும் மேம்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இனி உங்கள் சர்ச் தகவல் உங்கள் பழக்கத்தை வைத்துப் பிரிக்கப்படும்.

Gmail இன் புதிய சர்ச் மெயில் ஆப்ஷன் எப்படி செயல்படும் தெரியுமா?

Gmail இன் புதிய சர்ச் மெயில் ஆப்ஷன் எப்படி செயல்படும் தெரியுமா?

எடுத்துக்காட்டாக, ஒரு காண்டக்ட் பெயரை வைத்து நீங்கள் ஜிமெயில் இல் தேடும் போது, அந்த நபரின் முதல் பெயர் மற்றும் அவருடைய மின்னஞ்சல் முகவரிகளுக்கு Google முன்னுரிமை அளிக்கும். மேலும், பேர்சொனலைஸ்ட் பரிந்துரைகளைக் காட்ட உங்கள் காண்டாக்ட்களுடன் நிகழ்ந்த உரையாடல்களை Gmail பரிசீலிக்கும். ஒரே பெயரில் இரண்டு பேர் இருந்தால், நீங்கள் யாருடன் அதிகம் உரையாடுகிறீர்கள் என்பதை Gmail கருத்தில் கொண்டு அவர்களின் பெயரை வரிசையில் முதலில் காண்பிக்கும்.

போனுக்குள்ள இயர்போனா? அம்மாடியோவ்! Nokia -வின் இந்த மாடல் போனில் இவ்வளவு டிவிஸ்ட்-ஆபோனுக்குள்ள இயர்போனா? அம்மாடியோவ்! Nokia -வின் இந்த மாடல் போனில் இவ்வளவு டிவிஸ்ட்-ஆ

ஆறு மாத சோதனைக்கு கூகிள் வெளியிடும் முக்கியமான அப்டேட் இது

ஆறு மாத சோதனைக்கு கூகிள் வெளியிடும் முக்கியமான அப்டேட் இது

இந்த ஆண்டு ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய ஜிமெயில் டிசைனை கூகுள் முதலில் கிடைக்கும் படி அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ​​ஆறு மாத சோதனை மற்றும் பயனர் கருத்துக்குப் பிறகு, இப்போது இந்த புதிய டிசைன் அப்டேட்டை கூகிள் நிறுவனம் இறுதியாக அனைவருக்கும் கிடைக்கும் படி வெளியிட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சிலருக்கு இப்போதே இந்த அப்டேட் கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Gmail டிசைன் பிடிக்கவில்லையா? அப்போ இதை செய்யுங்க

புதிய Gmail டிசைன் பிடிக்கவில்லையா? அப்போ இதை செய்யுங்க

நீங்கள் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், இந்த புதிய டிசைன் அப்டேட் உங்களுக்கும் கிடைக்கும். நீங்கள் சாட் பயனராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த புதிய ஜிமெயில் வடிவமைப்பு அனைவருக்கும் வெளிவரும். ஒருவேளை, புதிய ஜிமெயில் டிசைன் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் உங்களுக்குப் பிடித்த பழைய டிசைனிற்கு திரும்பலாம். அப்படி செய்வதற்கும் கூகிள் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. இதைச் செய்ய நீங்கள் Settings சென்று, Quick Settings திறந்து, 'Go back to the original Gmail view' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Gmail Rolls Out New Redesigned Material You Interface To All Users With Bubble Notifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X