ஞாபகமறதி நபர்களுக்கு ஜிமெயில் தந்துள்ள புதிய வசதி.!

சர்வெர் மூலம் அப்டேட் செய்யப்பட்டவர்களுக்கு ஜிமெயிலின் இந்த புதிய வசதி தானாகவே கிடைத்துவிடும். அதாவது ஜிமெயில் வி8.4.22 மற்றும் பழைய வெர்ஷனான வி8.4.8 ஆகிய ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் இந்த வசதி கிடைக்கும்.

|

கூகுள் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதிதான் நட்ஜ் என்னும் வசதி. இந்த வசதி ஜிமெயில் பயன்படுத்துவோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஞாபகமறதி நபர்களுக்கு ஜிமெயில் தந்துள்ள புதிய வசதி.!

இந்த வசதி கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமின்றி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும் தற்போது கிடைத்துள்ளது. இதன் மூலம் நாம் பார்க்க மறந்த ஜிமெயில்கள் முதலில் தோன்றி நமக்கு ஞாபகப்படுத்தும். இந்த வசதி ஒவ்வொரு ஜிமெயில் பயனாளிகளுக்கும் தானாகவே கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

சர்வெர் மூலம் அப்டேட் செய்யப்பட்டவர்களுக்கு ஜிமெயிலின் இந்த புதிய வசதி தானாகவே கிடைத்துவிடும். அதாவது ஜிமெயில் வி8.4.22 மற்றும் பழைய வெர்ஷனான வி8.4.8 ஆகிய ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் இந்த வசதி கிடைக்கும். அதேபோல் ஐஒஎஸ் மொபைல் போன் பயனாளிகளுக்கு தற்போது ஓடிக்கொண்டிருக்கும் வி5.0.180422 என்ற வெர்ஷனில் இந்த புதிய வசதி செயல்படும்.

ஞாபகமறதி நபர்களுக்கு ஜிமெயில் தந்துள்ள புதிய வசதி.!

தானாகவே இந்த வசதி செயல்படும் என்றாலும் ஒருசிலருக்கு செயல்படவில்லை என்றால் ஒருசில நாட்களில் இந்த வசதி கிடைத்துவிடும். இமெயில் செட்டிங்கில் இந்த வசதி தங்களுக்கு வேண்டும் என்ற ஆப்சனை தேர்வு செய்திருந்தால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகளில் இந்த வசதி உங்களுக்கு நிச்சயம் தோன்றும், எனவே செட்டிங் சென்று சரிபார்க்கவும்.

ஞாபகமறதி நபர்களுக்கு ஜிமெயில் தந்துள்ள புதிய வசதி.!

இந்த நட்ஜ் வசதி உங்கள் ஜிமெயிலில் உள்ள மெயில்களை ஞாபகப்படுத்தும் புதிய வசதி ஆகும். நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் ரிப்ளை செய்ய வேண்டும் என்று இருக்கும் இமெயில்களை உங்களுடைய இன்பாக்ஸின் முன்பக்கத்தில் தோன்று உங்களுக்கு அந்த மெயிலை ஞாபகப்படுத்தும். நாள் ஒன்றுக்கு பல மெயில்கள் வரும் பெரிய தொழிலதிபர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருசிலர் சில முக்கிய இமெயில்களுக்கு பதிலளிக்க மறந்துவிடுவதை இந்த புதிய வசதி அவர்களுக்கு ஞாபகப்படுத்தி பயனளிக்கும்

நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த புதிய வ்சதியின் மூலம் நீங்கள் படிக்க மறந்த, பதிலளிக்க மறந்த மெயில்கள் உங்கள் இன்பாக்ஸில் டாப்பில் தோன்றி உங்களுக்கு ஞாபகப்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு இந்த வசதி தேவையில்லை என்று நீங்கள் விரும்பினால், இந்த வசதியை டர்ன் ஆப் செய்துவிட்டால் இது செயல்படாது. இதற்கு இரண்டு ஆப்சன்கள் உள்ளது. ரிப்ளை செய்வது மற்றும் ஃபாலோ செய்வது என இருக்கும் இரண்டு ஆப்சனில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து டர்ன் ஆப் செய்துவிட்டால் இந்த வசதி உங்களுக்கு நிறுத்தப்படும்.

ஞாபகமறதி நபர்களுக்கு ஜிமெயில் தந்துள்ள புதிய வசதி.!

சமீப காலத்தில் ஜிமெயில் தரும் பல புதிய வசதிகள் குறிப்பாக ஏஐ வசதிகளான ஸ்மார்ட் ரிப்ளை, இமெயில் ஸ்னூஸ்ஸிங், ரிஸ்க் வார்னிங், ஒரு கிளிக் மூலம் நியூஸ்லெட்டர்களை அன்சப்ஸ்கிரைப் செய்வது ஆகியவை பயனாளிகளுக்கு தேவையான சிறப்பு வசதிகள் ஆகும்
Best Mobiles in India

English summary
Gmail Nudge Reminder Feature Rolling Out on Android and iOS ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X