Home
News

Gmail இருந்தா, இது நடக்கும்.. இனி எல்லாமே ரெக்கார்டுதான்.. உடனே இதை பாருங்க.. டெலிவரிக்கு முன்னாலயே ரெடி!

ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் இனிமேல் பர்சேஸ் டிராக்கிங் (Purchase Tracking) கிடைக்கப் போகிறது. ஆன்லைனில் எதை ஆர்டர் செய்தாலும் சரி, அது அப்படியே இனிமேல் டிராக் செய்யப்படும். இந்த ஆர்டர்களை நேரடியாக ஜிமெயில் மூலம் டிராக் செய்யலாம். இந்த புதிய அப்டேட்டால் ஜிமெயில் யூசர்களின் அக்கவுண்ட்டில் என்ன நடக்கும்?

அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), மிந்த்ரா (Myntra), அஜியோ (Ajio) போன்ற எந்த ஈ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்தாலும், இனிமேல் அதை அந்தந்த ஆப்களுக்கு சென்று டிராக் செய்ய வேண்டது கிடையாது. உங்களது ஆர்டர் அடுத்த 24 மணி நேரத்துக்குள் டெலிவரியாக இருந்தால், அது ஜிமெயில் அக்கவுண்ட்டில் அப்டேட் செய்யப்படும்.

Gmail இருந்தா, இது நடக்கும்.. இனி எல்லாமே ரெக்கார்டுதான்.. உடனே இதை!

இதற்காக புதிய டேப் மட்டுமல்லாமல், ஜிமெயிலை ஓப்பன் செய்தவுடனேயே உங்களது ஆர்டர்களை டிராக் செய்து கொள்வதற்கான டிராக்கிங் டேப்களும் தோன்ற இருக்கின்றன. இதில் சென்று 24 மணி நேரம் மட்டுமல்லாமல், எந்த தேதியில் எந்த ஆர்டர் டெலிவரி செய்யப்பட ரெடியாக இருக்கிறது என்பதையும் டிராக் செய்து கொள்ளலாம்.

எப்படி வேலை செய்கிறது? ஈ-காமர்ஸ் தளங்களில் எதையாவது ஆர்டர் செய்தால், உங்களுக்கு எந்த தேதியில் டெலிவரி செய்யப்படும் உள்ளிட்ட விவரங்களுடன் டிராக்கிங் ஆர்டர் சப்போர்ட் கொடுக்கப்படும். இந்த டிராக்கிங் மூலம் நீங்கள் ஆர்டர் செய்த பேக்கேஜ் எங்கே இருக்கிறது, எப்போது கிடைக்க வாய்ப்புள்ளது,

டெலிவரிக்கு இன்று வெளியாகிவிட்டதா உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த டிராக்கிங் பீச்சர்கள் பெரும்பாலும் அந்தந்த ஆப்கள் மூலம் மட்டுமே கொடுக்கப்படும். அதேபோல எஸ்எம்எஸ்கள் மூலமும் உங்களுக்கு அப்டேட் செய்யப்படும். ஆனால், இனிமேல் எத்தனை ஆர்டர்களாக இருந்தாலும் ஜிமெயில் போதும்.

இதில் இருந்து அனைத்து ஆன்லைன் ஆர்டர்களையும் டிராக்கிங் செய்து கொள்ளலாம். 24 மணி நேரத்தில் கிடைக்க இருந்தால், நீங்கள் ஜிமெயிலை ஓப்பன் செய்தவுடனேயே மேலேயே தோன்றும். அதில் டிராக் பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால், அந்த ஆர்டர் குறித்த விவரங்கள் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

பல்வேறு ஆர்டர்கள் இருந்தால், வலது புறத்தின் மேலே தோன்றும் 3 கோடுகளை கிளிக் செய்தால், முக்கியமானது (Important) டேப்-க்கு கீழே பர்சேஸ் (Purchase) என்னும் டேப் இடம்பெற்றிருக்கும். இதை கிளிக் செய்தால், ஒட்டுமொத்த ஆர்டர்களின் டிராக் விவரங்கள் மற்றும் எத்தனை நாளில் வெளியாகும் என்ற தேதி விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இப்போது கிடைக்கிறதா? இந்த புதிய அப்டேட் ஜிமெயில் யூசர்களுக்கு ஏற்கனவே கிடைக்கிறது. ஆனால், ஜிமெயிலை ஓப்பன் செய்தவுடனே காண்பிக்கப்படும் பர்சேஸ் டிராக்கிங் மட்டுமே கிடைக்கிறது. இதற்காக பிரத்யேகமாக கிடைக்கும் பர்சேஸ் டேப் இன்னும் அப்டேட் செய்யப்படவிலை. குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு மட்டும் கிடைக்கிறது.

வரும் நாட்களில் அனைத்து யூசர்களும் கிடைக்க இருக்கிறது. ஆகவே, உங்களது ஜிமெயில் ஆப்-ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த புதிய அப்டேட் சேர்க்கப்பட்டுவிடும். இந்த பர்சேஸ் டிராக்கிங் ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்லாமல், வெப் பேஜ்களிலும் பயன்படுத்த கிடைக்கிறது. இதேபோல மற்றொரு அப்டேட்டும் ஜிமெயிலில் வந்துள்ளது.

ப்ரோமோஷன்கள் டேப் (Promotions Tab): இந்த டேப் ஏற்கனவே ஜிமெயில் யூசர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், அதை தேடி சென்று பார்க்க வேண்டி இருக்கும். ஆனால், புதிய அப்டேட் மூலம் கேட்டகரி (Category) ஆக சேர்க்கப்பட இருக்கிறது. ஆகவே, சமீபத்திய ப்ரோமோஷன்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதுவும் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Gmail New Purchase Tracking That Brings All Your Delivery Updates in One Place How Does it Work?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X