ஜிமெயிலில் டார்க் மோட் வசதி அறிமுகம்: எந்த வெர்ஷனில் கிடைக்கிறது.! வாங்க பார்ப்போம்.!
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்போது ஜிமெயில் பயனர்களுக்கு டார்க் மோட் உடன் குவிக் ஸ்விட்சிங் என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் கூகுள் நிறுவனம் அன்மையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் சார்ந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திடீரென ஜிமெயில் பயனர்களுக்கு இந்த டார்க் மோட் வசதியை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 10
குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் பல்வேறு புதிய வசதிகள் பயனர்களுக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூகுள் க்ரோம், கூகுள் ஃபிட், கூகுள் பே உள்ளிட்ட ஆப்ஸ்களில் ஏற்கனவேடார்க் மோட் அம்சம் வந்துவிட்ட நிலையில் தற்போது ஜிமெயில் தளத்திற்கு அந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

எந்த வெர்ஷனில் கிடைக்கும்?
தற்சமயம் இந்த டார்க் மோட் வசதி அனைவருக்கும் கிடைக்கவில்லை, ஜிமெயில் ஆப்பின் சமீபத்திய அப்டேட்ஆன 2019.08.18 வெர்ஷனின் கீழ் மட்டுமே இந்த தீம் காணப்படுகிறது. இதன் வழியாக டார்க் மோட் அம்சமானதுமிக விரைவில் அனைவருக்கும் அணுக கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

உடனே பயன்படுத்த வேண்டுமா?
கூகுள் நிறுவனம் ஜிமெயில் தளத்திற்க்கு வழங்கியுள்ள இந்த புதிய அம்சத்தை உடனே பயன்படுத்த வேண்டுமா? அப்படியென்றால் இந்த APK-வை பதிவிறக்கம் செய்து நீங்கள் எளிமையாக பயன்படுத்தலாம்.

குவிக் ஸ்விட்சிங் அம்சம்:
ஜிமெயில் தளத்தில் டார்க் மோட் அம்சம் மட்டுமின்றி இன்னொரு அம்சமும் வழங்கப்பட்டுள்ளது, அது குவிக்ஸ்விட்சிங் எனும் அம்சம். இதன் சிறப்பு என்னவென்றால், நீங்கள் பல ஜிமெயில் அக்கவுண்ட்களை கையாளும்
போது வேகமாக இயக்க முடியும். குறிப்பாக உதவியாய் இருக்கும்.

முன் எச்சரிக்கை செய்யும் பேட்டரி வசதி:
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் உங்கள் பேட்டரி எப்போது வரை தாக்குப்பிடிக்கும் என்பதை காட்சிப்படுத்தும்புதிய அம்சம் வரும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications