ஜி மெயிலில் வந்த ஸ்வைப் வசதி.!
ஜிமெயில்: அதன் படி ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியில் ஆர்சிவ் (Archive), டிராஷ் (Trash), மார்க் ஆஸ் ரீட்/அன்ரீட் (Mark as read/unread), ஸ்னூஸ் (Snooze) மற்றும் மூவ் டு (Move to) என பல்வேறு அம்சங்களை ஸ்வைப்
கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையின் மொபைல் தளங்களில் சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். தளத்துக்கான ஜிமெயில் சேவையில் புதிய ஸ்வைப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்கள் மத்தியில் இதன் வரவேற்பு எப்படி இருக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜிமெயில்:
அதன் படி ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியில் ஆர்சிவ் (Archive), டிராஷ் (Trash), மார்க் ஆஸ் ரீட்/அன்ரீட் (Mark as read/unread), ஸ்னூஸ் (Snooze) மற்றும் மூவ் டு (Move to) என பல்வேறு அம்சங்களை ஸ்வைப் மூலம் இயக்கலாம்.

ஸ்வைப் செய்யலாம்:
இந்த அம்சம் கொண்டு பல்வேறு அம்சங்களை மிக எளிமையாக ஸ்வைப் செய்தே இயக்க முடியும்.

ஜிமெயில் செயலி:
பயனர்கள் ஸ்வைப் அம்சத்தை இயக்க ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். மேலும் இதே அம்சங்களை கொண்டு நோட்டிஃபிகேஷன்களையும் இயக்கலாம். உதாரணத்திற்கு மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய ஜிமெயில் ஐ.ஓ.எஸ். நோட்டிஃபிகேஷனை அழுத்திப் பிடித்து ஸ்னூஸ் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்விட் செய்ய வேண்டும்:
இவ்வாறு செய்யும் போது எதுவரை மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய வேண்டும் என்பதை தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் புதிய அம்சங்களுடன் அட்டாச்மென்ட் க்விக் வியூ, அக்கவுண்ட்களிடையே ஸ்விட்ச் செய்தல் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications