மெயில்டிராக் உட்பட 7 சிறப்பான அம்சங்களை கொண்டுவந்த ஜிமெயில்.! முழு விவரம்.!

|

உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

மூலம் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்து

இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த அம்சங்கள்
மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்த புதிய அம்சங்களை கூகுள் குரோமில் குரோம் வெப் ஸ்டோர்ஸ்மூலம் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

Checker Plus for Gmail-  செக்கர் பிளஸ்

Checker Plus for Gmail- செக்கர் பிளஸ்

செக்கர் பிளஸ் அம்சம் ஆனது நீங்கள் ஜிமெயிலை திற்காமலேயே, இன்பாக்ஸில் வந்துள்ள புதிய மெசேஜ்களை தெரிந்துகொள்ள உதவுகிறது. இந்த செக்கர் பிளஸை நீங்கள் இன்ஸ்டால் செய்தவுடன் கூகுள் குரோமின் எக்ஸ்டன்சன் பாரில் புதிய ஐகான் தோனறும், அதன் மூலம்உங்கள் இன்பாக்ஸில் வந்துள்ள புதிய இமெயில்களை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். பின்பு இதன் உதவியுடன் மெயிலுக்குபதிலளிக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது.

ரூ.200-க்கு கீழ் இவ்வளவு டேட்டா கொடுக்குறாங்களா- ஜியோ, பிஎஸ்என்எல் பயனரா நீங்கள்: இது தெரியாமா போச்சே!ரூ.200-க்கு கீழ் இவ்வளவு டேட்டா கொடுக்குறாங்களா- ஜியோ, பிஎஸ்என்எல் பயனரா நீங்கள்: இது தெரியாமா போச்சே!

Simple Gmail Notes-சிம்பிள் ஜிமெயில் நோட்ஸ்

Simple Gmail Notes-சிம்பிள் ஜிமெயில் நோட்ஸ்

ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர் தனக்கு வந்திருக்கும் முக்கியமான தகவல்களை குறிப்பெடுத்துக்கொள்ள நோட்ஸ் என்ற பக்கம் உருவாகும். குறிப்பாக சிம்பிள் ஜிமெயில் நோட்ஸ் வசதி பல முக்கியமான தகவல்களை உடனே சேமித்து வைக்க உதவும்.பின்பு இந்த நோட்ஸ்-ஐ உங்களது கூகுள் டிரைவில் சேமித்து வைக்கவும் முடியும். இந்த விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்தால்உங்களது இமெயில் பாக்ஸில் மேலே டைப் செய்தவதற்கு உதவியாக ஒரு டெக்ஸ்ட் ஏரியா காணப்படும். அதேபோல் உங்களது
நோட்ஸின் கலரை மாற்றி அதனை கூகுள் காலண்டரில் கூட பதிவு செய்துகொள்ள முடியும், பின்பு உங்களக்கு தேவைப்படும்சமயத்தில் ரிமைண்டர் செட் செய்தால் போதும், அது சரியான நேரத்தில் காட்டும்.

Grammerly-கிராமர்லி

Grammerly-கிராமர்லி

இலக்கணப்பிழை, ஸ்பெல்லிங் போன்றவற்றை சரி செய்ய இந்த கிராமர்லி உதவும் என்று கூறப்படுகிறது. அதாவது நீங்கள் ஒருவருக்கு
மெயில் அனுப்ப டைப் செய்தவுடன் அதில் உள்ள இலக்கணப்பிழை, ஸ்பெல்லிங் போன்றவற்றை சரி செய்ய இந்த கிராமர்லி உதவும்.அதேபோல் பணிசார்ந்த மெயில், நண்பர்களுக்கும் அனுப்பும் மெயில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இது அறிவுறுத்தும் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆனால் கிராமர்லி வசதியை பெற அதில் நீங்கள் சைன் இன் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 Sanebox-சேன்பாக்ஸ் வசதி

Sanebox-சேன்பாக்ஸ் வசதி

இந்த சேன்பாக்ஸ் வசதி என்பது ஒரு முக்கியமான வசதி என்றே கூறலாம். அதாவது சேன்பாக்ஸ் செட்டிங்கஸை நீங்கள் தேர்வுசெய்தவுடன்,அது உங்களது ஜிமெயிலை நிர்வாகிக்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உங்களது ஜிமெயில் இருக்கும் முக்கிய மெயில்களைமட்டும் காட்டும் மற்றவை சேன்லேட்டர் என்ற ஃபோல்டரில் இருக்கும். அதேபோல் எந்த வகையான இமெயில் என்பதைவகைப்படுத்திக்கொள்ள முடியும். ஆனாலும் இதனை 14 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதன்பிறகு நீங்கள்மாதம் தோராயமாக ரூ.510 செலுத்தி இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

மிரட்டலான டிசைன்.. அட்டகாசமான அம்சம்.. இந்த ஆண்டின் சூப்பர் கேமிங் போன் Nubia Red Magic 6R தான்..மிரட்டலான டிசைன்.. அட்டகாசமான அம்சம்.. இந்த ஆண்டின் சூப்பர் கேமிங் போன் Nubia Red Magic 6R தான்..

 Briskine-பிரிஸ்கின்

Briskine-பிரிஸ்கின்

பிரிஸ்கின் வசதியை நீங்கள் தேர்வுசெய்தால், இது ஒரே வார்த்தைகளை திரும்ப டைப் செய்யும்போது அதனை சுலபமாகபயன்படுத்துக்கொள்ளும் அந்த நேரத்தை குறைக்க உதவும். அதாவது நீங்கள் முன்னே ஒரு டெம்ப்ளேட்டை செட் செய்தால், அது
நீங்கள் டைப் செய்யும்போது தானாக அந்த வார்த்தைகள் முன் நிற்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் டைப் செய்யும் போது
நேரத்தை குறைக்கும் வகையில் உள்ளது இந்த வசதி. கூகுள் நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, 30 டெம்ப்ளேட்டுகள் வரைஇலவசமாக முன் கூட்டியே செட் செய்துகொள்ளமுடியும். இதை செயல்படுத்துவது எப்படி என்றால், ஜிமெயிலில் பிரிஸ்கின் லோகோவசதி இருக்கும். அதை தேர்வுசெய்து நீங்கள் செட் செய்திருக்கும் அனைத்து டெம்ப்ளேட்டுகளையும் எளிமையாக பார்க்கலாம்.

MailTrack- மெயில்டிராக்

MailTrack- மெயில்டிராக்

கூகுள் நிறுவனம் கொண்டுவந்துள்ள மிகவும் பயனுள்ள வசதி தான் இந்த மெயில்டிராக் வசதி. அதாவது இந்த மெயில்டிராக்கை நீங்கள்இன்ஸ்டால் செய்தால் உங்களது மெயில் சென்றடைந்தது என்பதை அறிய ஒரு செக் மார்க்கும், அது திறந்து பார்க்கப்பட்டதா என்பதைஅறிந்துகொள்ள இரண்டு செக்மார்க்கும் இருக்கும். இந்த வசதியின் மூலம் உங்களது மெயில் திறந்த பார்க்கப்பட்டதா என்பதை உறுதிபடுத்தமுடியும். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அனுப்பும் மெயில் சென்ட் வித்மெயில்டிராக் என்றஅடையாளத்துடன் செல்லும். ஒருவேளை 5 அமெரிக்க டாலர் கொடுத்து புரோ வெர்ஷனை இன்ஸ்டால் செய்தால் அந்த அடையாளம் இன்றிசெல்லும் என்றுகூறப்படுகிறது. கிட்டத்தட்ட லாபம் வரும் நோக்கத்தில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Dictation for Gmail- டிக்டேசன் ஃபார் ஜிமெயில்

Dictation for Gmail- டிக்டேசன் ஃபார் ஜிமெயில்

டிக்டேசன் ஃபார் ஜிமெயில் அம்சத்தைப் பற்றி சுருக்கமாக கூறவேண்டும் என்றால், உங்களது இமெயில் மெசேஜ் படித்துக்காட்டும். இதற்குவேண்டிமைக்ரோபோன் பட்டன் ஆனது உங்களது மெசேஜ் பாக்ஸில் இருக்கும். இதனை பயன்படுத்தி மிக எளிமையாக உங்களது இமெயிலைபடித்து, நீங்கள் பயன்படுத்தும் சொற்களை கணித்து அதனை டைப் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Gmail brings 7 great features, including MailTrack! Full details.!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X