FASTag: உங்கள் ஃபாஸ்ட்டேக் பேலன்ஸ் தெரிந்துகொள்ள இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்க.!

|

உங்களின் ஃபாஸ்ட்டேக் மூலம் டோல் பூத் கட்டணங்கள் எல்லாம் தானாக வசூல் ஆகிவிடும், ஆனால் சிலருக்கு அனைத்து நேரத்திலும் டோல் பூத் கட்டணங்கள் மற்றும் பேலன்ஸ் குறித்து கணக்கில் வைத்துக் கொள்ள இயலாது. எனவே நமது ஃபாஸ்டேக்கில் இருக்கும் பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி எனப் பார்ப்போம்.

என்.எச்.ஏ.ஐ

என்.எச்.ஏ.ஐ

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மேற்பார்வையில் இயங்கும் இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மெண்ட்கம்பெனி லிமிடெட் ஆனது வாகன ஓட்டிகளின் முக்கிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஒருபுதிய வசதியை உருவாக்கியுள்ளது. அதன்படி எண் என்.எச்.ஏ.ஐ ப்ரீபெய்ட் வாலட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் உங்களின் பேலன்ஸை உடனே தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ, பாரதி ஏர்டெல் & வோடபோன் ஐடியாவில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்!ஜியோ, பாரதி ஏர்டெல் & வோடபோன் ஐடியாவில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்!

 மிஸ்டு கால்

மிஸ்டு கால்

இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், +91-8884333331 என்ற டோல் ஃபிரி நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்களின் ஃபாஸ்ட்டேக்கின் பேலன்ஸ் அறிந்துகொள்ள இயலும்.

எஸ்.எம்.எஸ்

எஸ்.எம்.எஸ்

குறிப்பாக உங்களின் மொபைல் நம்பர் என்.எச்.ஏ.ஐ ப்ரீபெய்ட் வாலட்டுடன் இணைக்கப்படவில்லை என்றால் இந்த முறையில் பேலன்ஸை தெரிந்து கொள்ள இயலாது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களுக்காக என்.எச்.ஏ.ஐ ப்ரீபெய்ட்வாலட்டுடன் உங்களின் போன் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் அனைத்து அக்கௌண்ட்டுகளின் பேலன்ஸூம் காட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு உங்களின் வேலிடிட்டி பேலன்ஸ் இல்லையென்றாலும் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக அலெர்ட் கிடைத்துவிடும்.

ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன்

ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன்

ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர் தான் ஃபாஸ்ட் டேக் என்பது. சுங்கச்சாவடியில் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படும் இந்த ஃபாஸ்ட் டேக்
மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

பயணிகளின் நேரம் சேமிக்கப்படும்

பயணிகளின் நேரம் சேமிக்கப்படும்

மொபைல் ரீசார்ஜ் செய்வது போல உங்கள் ஃபாஸ்ட் டேக் கணக்கையும் நீங்கள் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும் பொழுது இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும். இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படும், சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்

சுங்கவரி

ஃபாஸ்ட்டேக்--கின் விற்பனை முன்பைக் காட்டிலும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த கால சுங்கவரியைக் காட்டிலும் தற்போது பல மடங்கு வரி வசூலாகவும் தொடங்கியுள்ளது. சுங்கச்சாவடிகளில் நிலவிவரும் கட்டணக் கொள்ளை மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும்விதமாக மத்திய அரசு இந்த ஃபாஸ்ட்டேக் திட்டத்தை நாடு முழுவதும் கட்டாயமாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Give A Missed Call to Know Your FASTag Walllet Balance Right Away: Read more about this in Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X