செல்பி மோகம்: ஆற்றுக்குள் இறங்கிய 2 இளம்பெண்கள்- உயர்ந்த நீர்மட்டம்., என்ன நடந்தது தெரியுமா?

|

மத்தியபிரதேசம் மாநிலத்தில் செல்பி மோகத்தால் ஆற்றுக்குள் இறங்கிய 2 இளம்பெண்களில் நீரில் சிக்கிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்பி மோகம்

செல்பி மோகம்

ஆறு, அருவி போன்றவைகளை பார்த்தால் ரசிப்பதும் குளிப்பதும் என்ற காலம் கழிந்து செல்பி மட்டும் எடுத்தால் போதும் அதுவும் ஆற்றுக்கு நடுவில் நின்று செல்பி, பாறையில் நின்று குதிப்பது போல் செல்பி என பிறர் கொடுக்கும் லைக்குகளுக்கு உயிரை பணயம் வைக்கும் ஏணைய நிகழ்வுகள் அரங்கேறி இருக்கிறது.

விலங்குகளோடு செல்பி

விலங்குகளோடு செல்பி

அதேபோல் வனப்பகுதிகள், மலைகிராமங்களுக்கு பயணிக்கும் போது திடீரென விலங்கள் வந்தால் அதை தொந்தரவு செய்யாமல் கடந்து சென்று விட வேண்டும். அதே விலங்கு அருகில் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் அல்லது முடிந்தளவு நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதே வழக்கம்.

எண்ணம் செல்பியை நோக்கி

எண்ணம் செல்பியை நோக்கி

இருப்பினும் இந்த காலத்தில் ஏதேனும் விலங்குகளை பார்த்ததும் ஓடிவிட வேண்டும் அல்லது தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக சிலரின் எண்ணம் செல்பியை நோக்கியும் கைகள் செல்போனை நோக்கியும் செல்கிறது.

பெரிதளவிலான விபத்துக்கள், அசம்பாவிதங்கள்

பெரிதளவிலான விபத்துக்கள், அசம்பாவிதங்கள்

பலர் செல்பி எடுக்கும் முயற்சியில் உயிரிழந்த சம்பவமும் பெரிதளவிலான விபத்துக்கள் என அசம்பாவிதங்கள் அரங்கேறியுள்ளது. செல்பி குறித்த விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் சமூகவலைதளங்களில் குவியும் லைக்குகளுக்காக உயிரை துச்சம் என கருதி விளைவுகளை சந்திக்கிறார்கள்.

வெளுத்து வாங்கும் மழை

வெளுத்து வாங்கும் மழை

இந்த நிலையில் வடமாநிலங்களில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக நீர்நிலைகள் நிரம்பியும், பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக மத்தியபிரதேசத்தில் உள்ள பெஞ்ச் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

மத்தியஅரசு மீண்டும் அதிரடி! புதிதாக 47 சீன ஆப்ஸ்களுக்கு தடை- லிஸ்டில் இன்னும் 275 ஆப்ஸ் இருக்கு!மத்தியஅரசு மீண்டும் அதிரடி! புதிதாக 47 சீன ஆப்ஸ்களுக்கு தடை- லிஸ்டில் இன்னும் 275 ஆப்ஸ் இருக்கு!

செல்பி எடுக்க முடிவு

செல்பி எடுக்க முடிவு

மத்தியபிரதேசத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதையும் பொருட்படுத்தாமல் இளம் பெண்கள் கிராம பகுதியை சுற்றி வந்துள்ளனர். ஆற்றில் குறைவான அளவில் தண்ணீர் சென்றுகொண்டிருந்ததை பார்த்து அங்கு நின்றபடி செல்பி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

இதையடுத்து ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அவர்கள் நடுப்பாறையில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கும்போது தண்ணீர் வரத்து அதிகரித்து பாறையை மூழ்கடித்துள்ளது.

சமூகவலைதளங்களில் வைரல்

சமூகவலைதளங்களில் வைரல்

நீர்மட்டம் உயர்ந்ததை பார்த்த அவரது தோழிகள் பயத்தில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்தும் சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் கயிற்றை கட்டி ஆற்றில் இறங்கி இரண்டு பெண்களையும் மீட்டனர். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Girls Take Selfie in Pench River Get Trapped in Swelling Water

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X