பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தாய்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.!

|

நாடு முழுவதும் பப்ஜி விளையாட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும், அதன்படி உலகம் முழுவதும் இந்த விளையாட்டு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி விளையாட்டு அதிகம் கவர்ந்துள்ளது.

பப்ஜி கேம்

பப்ஜி கேம்

மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் மிகவும் பிரபலமான மற்றும் அதிக டவுன்லோடு பெற்ற கேம் ஆப்களில் ஒன்று இந்த பப்ஜி எனப்படும் கேம். இந்த கேம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். குறிப்பாக இந்த பப்ஜி கேம் நிறுவனம் இந்தியாவில் அதன் லைட் வெர்ஷன் ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

வித்யாஸ்ரீ (18)

வித்யாஸ்ரீ (18)

இந்நிலையில் திருவொற்றியூர் அருகில் உள்ள காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவரர் ரகுபதி, இவர்வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகள் வித்யாஸ்ரீ (18) திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ்2-ம் ஆண்டு படித்து வந்தார்.

செல்போனில் கேம் ஆடுகிறாயே?

செல்போனில் கேம் ஆடுகிறாயே?

வித்யாஸ்ரீ நேற்று காலை தனது செல்போனில் யாருடனோ சேர்ந்து பப்ஜி கேம் விளையாடியதாக தெரிகிறது. இதனைப் பார்த்த அவருடைய தாய் காலையிலேயே புத்தகத்தை எடுத்து படிக்காமல் செல்போனில் கேம் ஆடுகிறாயே என்று மகளை திட்டுவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.

அரசு ஆதரவுடன் இந்தியர்களின் விவரங்கள் திருட்டு: கூகுள் அதிர்ச்சி தகவல்அரசு ஆதரவுடன் இந்தியர்களின் விவரங்கள் திருட்டு: கூகுள் அதிர்ச்சி தகவல்

தற்கொலை செய்துகொண்டார்

தற்கொலை செய்துகொண்டார்

பின்பு தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி வித்யாஸ்ரீ , வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் துப்பட்டாவால் தூக்துப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடைக்கு சென்று வீடு திம்பிய அவருடைய தாய், வெகு நேரமாக கதவை தட்டியும் வித்யாஸ்ரீ கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்தார்.

அக்கம் பகத்தினர்

அக்கம் பகத்தினர்

அதன்பின்பு அக்கம் பகத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனது மகள் வித்யாஸ்ரீ தூக்கில்பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்துபோன மகளின் உடலை பார்த்து அவருடைய தாய் கதரிஅழுதார்.

வழக்குபதிவு

வழக்குபதிவு

இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து, செல்போனில் பப்ஜி கேம் வளையாடுவதை தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்தார அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என விசாரித்து வருகின்றனர்.

news source: dailythanthi.com

Best Mobiles in India

English summary
girl commits suicide after mother warns against playing pubg : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X