Home
News

ஜியோனி ஏ1 பிளஸ் & ஏ1 லைட் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ஜியோனி ஏ1 பிளஸ் பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 20 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

By Prakash

தற்சமயம் ஜியோனி நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஜியோனி ஏ1 பிளஸ் மற்றும் ஜியோனி ஏ1 லைட் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரீடெயில் கடைகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஜியோனி ஏ1 லைட் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட டேட்டா சலுகையை வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம், மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஜியோனி ஸ்மார்ட்போன் மாடல்கள்.

 விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

ஜியோனி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.26,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3000-வரை விலைகுறைக்கப்பட்டு 23,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு ஜியோனி ஏ1 லைட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.13,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஜியோனி ஏ1 பிளஸ் :

ஜியோனி ஏ1 பிளஸ் :

இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் 1080 வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவை. கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஜியோனி ஏ1 பிளஸ் கேமரா:

ஜியோனி ஏ1 பிளஸ் கேமரா:

ஜியோனி ஏ1 பிளஸ் பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 20 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது.
மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

4ஜிபி ரேம்;

4ஜிபி ரேம்;

ஜியோனி ஏ1 பிளஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு
கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4550எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது ஜியோனி ஏ1 பிளஸ் .

ஜியோனி ஏ 1 லைட்

ஜியோனி ஏ 1 லைட்

ஜியோனி ஏ 1 லைட் பொறுத்தவரை 5.3-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டி வளைந்த கண்ணாடி மற்றும் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

ஜியோனி ஏ1 லைட் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

ஜியோனி ஏ1 லைட் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee A series smartphones price slashed ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X