5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?

|

ஆப்பிள் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு, அதன் விலை காரணமாகவோ அல்லது உங்கள் பட்ஜெட்டிற்குள் வரவில்லை என்றாலோ கவலைப்பட வேண்டாம், உங்களுக்காகவே ஆப்பிள் ஐபோனின் டிஸ்பிளே தோற்றத்தில் ஒரு புதிய ஸ்மார்ட் போன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ரசிகர்களின் கவனத்தைக் கூட இந்த சாதனம் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 13 டிஸ்பிளே போல இருக்கும் புதிய Gionee P50 Pro

ஐபோன் 13 டிஸ்பிளே போல இருக்கும் புதிய Gionee P50 Pro

ஜியோனி (Gionee) நிறுவனம் சீனாவில் ஒரு புதிய தொலைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஐபோன் 13 மற்றும் ஹவாய் P50 ப்ரோ போன்ற மாடல்களுடன் மிக நெருக்கமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஜியோனி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்போனின் பெயர் Gionee P50 Pro ஆகும். மேலும் இது ஒரு பாக்ஸி வடிவமைப்பு மற்றும் செல்ஃபி ஷூட்டருக்கு இடமளிக்கும் டிஸ்பிளே நாட்ச் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5 பின்பிற கேமரா அமைப்பு

5 பின்பிற கேமரா அமைப்பு

இதனால், இந்த டிவைஸ் இப்போது பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போன் டிவைஸ் மக்களின் கவனத்தை ஈர்த்ததற்கு மற்ற இரண்டு காரணமும் இதில் உள்ளது. இதில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒன்று இதன் விலை மற்றும் மற்றொன்று இதன் பின்புற கேமரா அமைப்பு, ஆம் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5 பின்பிற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர் போனில் ஆபாச தகவல்.. வீட்டிற்குள் 'கேமரா' வைத்து தொடர்ந்து மிரட்டல்.. 13 வயது மகன் தான் காரணமா?பெற்றோர் போனில் ஆபாச தகவல்.. வீட்டிற்குள் 'கேமரா' வைத்து தொடர்ந்து மிரட்டல்.. 13 வயது மகன் தான் காரணமா?

 ஸ்லிம்மான டிஸைனுடன் கம்மி விலையில் ஒரு மிரட்டல் டிவைஸ்

ஸ்லிம்மான டிஸைனுடன் கம்மி விலையில் ஒரு மிரட்டல் டிவைஸ்

முன்பே சொன்னது போல், இந்த ஸ்மார்ட்போன் Huawei P50 Pro-க்கு மிகவும் ஒத்ததாக உள்ளது. இந்த டிவைஸ் இரண்டு வட்ட தொகுதிகளில், ஐந்து கேமரா சென்சார்களை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதில் பாதுகாப்பிற்காகப் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. ஸ்லிம்மான பெசல்கள் மற்றும் பின்புறத்தில் ஒரு தனித்துவமான கிரேடியன்ட் வடிவமைப்பைப் பெற்றுள்ளது.

Gionee P50 Pro சிறப்பம்சம்

Gionee P50 Pro சிறப்பம்சம்

Gionee P50 Pro ஸ்மார்ட் போன் 6.5' இன்ச் FHD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த Gionee P50 Pro ஸ்மார்ட் போன் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் விரிவாக்கக் கூடிய எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட் போன் டிவைஸ் 4G LTE நெட்வொர்க் இணைப்பு மற்றும் 6ஜிபி ரேம் உடன் வருகிறது. ஆனால், இந்த ஸ்மார்ட் போனின் சிப்செட் விவரங்கள் மட்டும் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன் இது தான்.. டீல் இன்று மட்டுமே.. வுட்றாதீங்கப்போ!ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன் இது தான்.. டீல் இன்று மட்டுமே.. வுட்றாதீங்கப்போ!

Gionee P50 Pro கேமரா அம்சம்

Gionee P50 Pro கேமரா அம்சம்

கேமராவை பொறுத்தவரை, Gionee P50 Pro ஆனது 13MP முதன்மை சென்சார் மற்றும் நான்கு லென்ஸ்கள் மற்றும் LED ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற சென்சார்கள் குறித்த விவரங்கள் தற்போது தெரியவில்லை. இது எச்டி நைட் ஷாட், மேக்ரோ ஷாட், போர்ட்ரெய்ட் பியூட்டி லென்ஸ் மற்றும் பிற பல கேமரா மோட்களுடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு முன்பக்கத்தில் 5MP ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது.

Gionee P50 Pro ஸ்மார்ட் போனின் விலை

Gionee P50 Pro ஸ்மார்ட் போனின் விலை

ஜியோனி பி50 ப்ரோ ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடல் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இந்த மாடலின் விலை RMB 659 ஆகும். இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ.7,600 மட்டுமே. அதேபோல், இதன் 4ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை RMB 739 ஆகும். இது தோராயமாக ரூ. 8,600 மட்டுமே.இதன் ஹை-எண்டு வேரியண்ட் மாடலான 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் விலை தோராயமாக ரூ 8,800 ஆகும்.

Amazon-ல் இப்படி ஒரு ரோபோ வேலை செய்கிறதா? உங்கள் பார்சல் சரியாக வர ரோபோ தான் காரணமா?Amazon-ல் இப்படி ஒரு ரோபோ வேலை செய்கிறதா? உங்கள் பார்சல் சரியாக வர ரோபோ தான் காரணமா?

எப்போ? எங்கே வாங்க கிடைக்கிறது?

எப்போ? எங்கே வாங்க கிடைக்கிறது?

இந்த டிவைஸ் பிரைட் பிளாக், கிரிஸ்டல் மற்றும் டார்க் ப்ளூ நிறங்களில் வருகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவின் இ-காமர்ஸ் தளமான JD.com இல் பட்டியலிடப்பட்டுள்ளது. Gionee P50 Pro விவரக்குறிப்புகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, OTG, Wi-Fi, Bluetooth மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். ஜியோனி பி50 ப்ரோ பாதுகாப்பு மற்றும் AI ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றிற்காகப் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee P50 Pro Comes With iPhone 13 Like Display And Five Rear Camera Setup priced around Rs 7600 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X