Home
News

7000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட கருவி, டிசம்பர் 26-ல்அறிமுகம்.!

ஆம். 7000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டது தான் ஜியோனி எம்2017 கருவி என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது, மற்றும் டிசம்பர் 26ஆம் தேதியன்று வெளியாகவும் இருக்கிறது.

By Muthuraj

கடந்த வாரம், அடுத்த வெளியாகும் ஜியோனி ஒரு 7000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம் என்ற லீக் தகவல் வெளியானது. இப்போது அதை உறுதி செய்யும் பொருட்டு இந்த சீன உற்பத்தியாளர் விபோ-வில் பதிவு செய்த போஸ்ட் ஒன்றில் ஜியோனி எம்2017 கருவியானது ஒரு சீன நிகழ்ச்சியில், டிசம்பர் 26 அன்று வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

வெளியாகப்போகும் இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் 7000எம்ஏஎச் என்ற ஆகப்பெரிய பேட்டரி திறன் உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வானது ஹைனன் என்ற இடத்தில் உள்ள ஹைகொ மிஷன் ஹில்ஸ்-ல் நடைபெற இருக்கிறது மற்றும் இக்கருவியின் விலை சார்ந்த எந்த விதமான விடயமும் வெளியிடப்படவில்லை.

ஆனால், இருக்கருவி 7000 எம்ஏஎச் கொண்டிருக்கும் என்பதை முன்னரே கணித்த லீக்ஸ் தகவல்கள் என்ன சொல்கிறது என்பது பற்றிய விவரங்கள் உள்ளன, யாருக்கு தெரியும் அதுவும் நிஜமாகலாம்.!

கடினமான பூச்சு

கடினமான பூச்சு

வெளியான கசிவு தகவல்களின்படி, ஜியோனி எம்2017 ஸ்மார்ட்போன் நான்குமெட்டல் எட்ஜ் கொண்டிருக்கும் மற்றும் அதன் பவர், வொல்யூம் பட்டன்கள் வலது பக்கத்தில் அமைந்திருக்கும் உடன் ஸ்மார்ட்போன் ஒரு ரப்பர் போன்ற கடினமான பூச்சு கொண்டிருக்கும் என்றும் லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

சான்றிதழ் தளத்தில் கசிந்த ஜியோனி எம்2017 குறிப்புகளில் இக்கருவியில் ஒரு 5.7-அங்குல (1440x2560 பிக்சல்கள்) க்யூஎச்டி டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

செயலி, ரேம், மெமரி

செயலி, ரேம், மெமரி

உடன் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 1.9ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 653 அக்டா-கோர் செயலி, 6ஜிபி ரேம் மற்றும் அட்ரெனோ 510 ஜிபியூ மூலம் இயக்கப்படலாம், மெமரி துறையை பொறுத்தமட்டில் 128 ஜிபி என்ற ஒரு பாரிய உள்ளடக்க சேமிப்பு கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இயங்குதளம்

இயங்குதளம்

ஜியோனி எம்2017 கருவியானது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கலாம் என்றும் உடன் அதில் இரட்டை சிம் அட்டைகள் ஆதரவு, 155.2x77.6x10.6எம்எம் அளவு மற்றும் 230 கிராம் எடை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமிரா

கேமிரா

ஒரு 12-மெகாபிக்சல் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 13-மெகாபிக்சல் பின்பக்க கேமிரா என இரட்டை பின்புற கேமிரா அமைப்பு, மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமிரா ஆகியைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

மற்றும் இக்கருவியில் ஹோம் பட்டன் அடியில் மறைமுகமாக கைரேகை சென்சார் வைக்கப்பட்டு இருக்கிறது, மற்றும் 7000எம்ஏஎச் பேட்டரி வேகமாக சார்ஜ் செய்ய ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உடன் ஜிபிஎஸ், ப்ளூடூத் வி4.2, 4ஜி எல்டிஇ ஆதரவு, மற்றும் வைஃபை 802.11 ஏசி ஆகிய இணைப்பு விருப்பங்கள் உள்ளன.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெளி சந்தைகளில்

வெளி சந்தைகளில்

எல்லாவற்றைவிடவும் மேலான ஜியோனி நிறுவனம் இக்கருவியை சீனாவை தாண்டி வெளியே இதர ஸ்மார்ட்போன் சந்தைகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்பது பற்றிய எந்த தகவலும் கிடையாது

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோனி பி7 : வோல்ட் ஆதரவுடன் ரூ.9,999/- என்ற விலைக்கு அறிமுகம்.!

Best Mobiles in India

English summary
Gionee M2017 With 7000mAh Battery to Launch on December 26. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X