ரூ.6,999க்கு வெளியான ஸ்மார்ட்போன்..
ஜியோனி நிறுவனம் பாய்னீர் வகையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜியோனி பாய்னீர் பி2எம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.6,999க்கு கிடைக்கும் என்றும் இந்த கருவியை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வர்த்தகர்களிடம் இருந்து வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு வெளியான பாய்னார் பி2 கருவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் தான் இந்த கருவி. பி2எம் டூயல் சிம் கார்டு ஸ்லாட் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் கொண்டு 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளேவும் கொண்டிருக்கின்றது. மேலும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமராவும் சீன் டிடெட்க்ஷன், ஃபேஸ் ரிகஃக்னீஷன், பானரோமா போன்ற கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆப்ஷன்களோடு 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த விலையில் ஜியோனி பாய்னீர் பி2எம் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் 2, லாவா ஐரிஸ் ஃபூயல் 50 போன்ற கருவிகளுக்கு போட்டியாக விளங்கும்.


Click it and Unblock the Notifications