சிலிர்க்க வைக்கும் ஜியோனி ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!
தீபாவளியை முன் வைத்து ஜியோனி நிறுவனம் புதிய வகை ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது. அதன்படி ஜியோனி ஈலைஃப் ஈ8 ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு இந்த கருவியானது அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈலைஃப் ஈ8 கருவியானது 6 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி திரை 2560*1440 ரெசல்யூஷன், 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹெலியோ எக்ஸ்10 ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 21 எம்பி ப்ரைமரி கேமரா, 4கே வீடியோ வசதியும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 4ஜி எள்டிஈ, வை-பை, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 இயங்குதளமும் கொண்டிருப்பதோடு 3520 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications