கூகிள் மேப்ஸ் இல் சிக்கிய ராட்சத பாம்பின் எலும்புக்கூடு: அடேங்கப்பா எவ்வளவு நீளம்! உண்மையில் இது என்ன தெரியுமா

|

ஓய்வு எடுக்கும் நேரத்தில் சிலர் பொழுதுபோக்கிற்காக யூடியூப் பார்ப்பது, பேஸ்புக் பதிவுகளை ஸ்க்ரோல் செய்வது, இன்ஸ்டாகிராமில் பிடித்தவரின் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் கொடுப்பது, ஊர் சுற்றுவது போன்ற செயல்களைச் செய்து வருவோம். ஆனால், இன்னும் சிலர் கூகிள் மேப்ஸ் மூலம் உலகத்தைச் சுற்றி வருவதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். பூமியில் அவர்களால் நேரில் சென்று பார்க்க முடியாத இடங்களை எல்லாம் கூகிள் மேப்ஸ் மூலம் தெளிவாகப் பார்த்து மகிழ்வது இவர்களின் வேலை. அப்படியான ஒரு அனுபவத்தில் தான் இந்த திடுக்கிடும் தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

கூகிள் சுற்றும் வாலிபர் கண்டறிந்த ராட்சத பாம்பின் எலும்புக்கூடு

கூகிள் சுற்றும் வாலிபர் கண்டறிந்த ராட்சத பாம்பின் எலும்புக்கூடு

கூகுள் மேப்ஸ் மூலம் உலகை ஆராய்வது வித்தியாசமானதாகத் தோன்றினாலும், உண்மையில் இது உங்களுக்குப் பல அற்புதமான மற்றும் அசத்தல் விஷயங்களைக் கண்டறிய உதவுகிறது. ஆனால், சில நேரங்களில் இது உங்களுக்கு ஆச்சரியத்தை வழங்கக்கூடிய விஷயங்களையும் காண்பிக்கிறது. கூகிள் சுற்றும் வாலிபர் ஒருவர் சமீபத்தில் பிரான்சில் ஒரு பெரிய 'பாம்பு எலும்புக்கூட்டை' கண்டறிந்துள்ளார். இது உண்மையில் கூகிள் மேப்ஸ் ஆப்ஸில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை வேறு எதிலும் இல்லாத ஒரு சலசலப்பை இது உருவாக்கியது.

TikTok கணக்கில் வைரலான பாம்பின் எலும்புக்கூடு வீடியோ

TikTok கணக்கில் வைரலான பாம்பின் எலும்புக்கூடு வீடியோ

வெளியான சமீபத்திய தகவலின் படி, @googlemapsfun எனப்படும் TikTok கணக்கில் இது ஒரு வீடியோ பதிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிக்டாக் கணக்கு, கூகுள் வரைபடத்தை ஆராயும் போது அவர்கள் கண்டறிந்த சில விசித்திரமான விஷயங்களின் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கிறது. அப்படி, மார்ச் 24 ஆம் தேதி அன்று, பிரான்ஸ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெரிய பாம்பு போன்ற பொருளின் வீடியோவை இந்த டிக்டாக் கணக்கு பகிர்ந்துள்ளது.

18 ஆண்டு தவம்.. பள்ளியில் தோன்றிய ஐடியா.. கிராமத்திற்காக சொந்த காசில் நீர்மின் நிலையம் அமைத்த கிராமவாசி..18 ஆண்டு தவம்.. பள்ளியில் தோன்றிய ஐடியா.. கிராமத்திற்காக சொந்த காசில் நீர்மின் நிலையம் அமைத்த கிராமவாசி..

கூகுள் எர்த்தில் தெளிவாகத் தெரியும் பாம்பின் ராட்சத உருவம்

கூகுள் எர்த்தில் தெளிவாகத் தெரியும் பாம்பின் ராட்சத உருவம்

கூகுள் மேப்ஸ் எர்த்தில் மட்டும் தான் இப்படியான விஷயங்களை நாம் பார்க்க முடிகிறது. பூமியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இது போன்ற ஒரு மாபெரும் உருவத்தை நாம் கூகிள் எர்த் செயற்கைக்கோள் உதவியுடன் பார்க்க முடிகிறது என்று அந்த வீடியோ உடன் கூறப்பட்டுள்ளது. கூகிள் எர்த் அம்சத்தைப் பயன்படுத்திய போது, அந்த பயனர் ஒரு ராட்சத பாம்பின் எலும்பு எச்சங்களைக் கண்டிருக்கிறார். இது உண்மையில் 30 மீட்டர் நீளம் மற்றும் இதற்கு முன் பிடிபட்ட எந்தப் பாம்பையும் விட பெரியதாக இருக்கக்கூடும் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது டைட்டனோபோவா? அனகோண்டாவை விட பெரியதா?

பாம்பு எலும்புக்கூடு அழிந்துபோன டைட்டனோபோவா இருக்கலாம் என்ற வதந்தி கிளம்பியது. டைட்டனோபோவா என்பது அனகோண்டா போன்ற மிகப் பெரிய பாம்புகளின் இனம் என்பது குறிப்பிடத்தக்கது. இவை நமக்குத் தெரிந்த அனகோண்டா பாம்புகளை விடப் பல மடங்கு பெரியவை மற்றும் ராட்சத வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு டைட்டனோபோவாக இருக்கலாம் என்றும் அந்த டிக்டாக் கணக்கு பரிந்துரைத்தது.

இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லையா? இதைச் செய்தால் போதும் மக்களே..இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லையா? இதைச் செய்தால் போதும் மக்களே..

பாம்பின் எலும்புக்கூடு பின்னணியில் உள்ள உண்மை என்ன?

பாம்பின் எலும்புக்கூடு பின்னணியில் உள்ள உண்மை என்ன?

இந்த வீடியோ டிக்டோக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகிவிட்டாலும், கூகுள் மேப்ஸில் பாம்பு போன்ற ஒரு பொருளை இப்போது நீங்கள் காணலாம். இந்தக் கதையில் கண்ணுக்குத் தெரிகிறதை விட இது இன்னும் அதிகமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாம்பின் எலும்புக்கூடு பின்னணியில் உள்ள உண்மையை ஆராய்ந்த போது, இந்த பாம்பின் எலும்புக்கூடு கூகிள் மேப்ஸ் எர்த் இல் காண்பிக்கப்படுவது உண்மையானது.

இணையத்தை உலுக்கிய பாம்பின் மர்மம் கட்டவிழ்க்கப்பட்டது

ஆனால், நாம் பார்க்கும் 'பாம்பு எலும்புக்கூடு' உண்மையில் ஒரு பாம்புடையது தானா என்று அடுத்த கட்ட சோதனையின் போது, அது "Le Serpent d'Ocean என்று அழைக்கப்படும் ஒரு பெரிய, உலோக சிற்பம்" என்பது கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இந்த பாம்பின் எலும்புக்கூடு சிற்பம் பிரான்சின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது மற்றும் 425 அடி நீளத்தில் இது உள்ளது. Estuaire கலைக் கண்காட்சியின் ஒரு பகுதியாக Le Serpent d'Ocean 2012 இல் இது வெளியிடப்பட்டது என்று இணையத்தள தகவல் தெரிவிக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதனின் பேச்சு சிதைந்துவிடுமா? NASA கண்டுபிடிப்பு என்ன சொல்கிறது?செவ்வாய் கிரகத்தில் மனிதனின் பேச்சு சிதைந்துவிடுமா? NASA கண்டுபிடிப்பு என்ன சொல்கிறது?

'பாம்பு எலும்புக்கூடு' உண்மையில் ஒரு கலைப்பொக்கிஷமா?

'பாம்பு எலும்புக்கூடு' உண்மையில் ஒரு கலைப்பொக்கிஷமா?

இது சீன-பிரெஞ்சு கலைஞர் ஹுவாங் யோங் பிங் என்பவரால் உருவாக்கப்பட்டது என்று அட்லஸ் அப்ஸ்குரா தெரிவிக்கிறது. முடிவில், கூகுள் மேப்ஸில் காணப்படும் 'பாம்பு எலும்புக்கூடு' உண்மையில் ஒரு கலைப்படைப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்ன தான் இது ஒரு கலைப்படைப்பாக இருந்தாலும், இதன் தோற்றம் அப்படியே அசல் பாம்பின் எலும்புக்கூடு போலத் தத்ரூபமாகக் காட்சியளிக்கிறது. செர்பெண்ட் என்ற அங்கிள் சொல் மிகப் பெரிய பாம்பு என்பதைக் குறிக்கிறது. இந்த கடல் பகுதியின் பெயர் Le Serpent d'Ocean என்பதனால் இந்த பாம்பு சிற்பம் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Giant Snake Skeleton On Google Maps Sparks Titanoboa Theories : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X