Home
News

திடீரென சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த ராட்சத பல்லி .! பின்பு என்ன நடந்தது தெரியுமா?

தற்போதைய காலகட்டத்தில் இணையத்தில் பதிவிடும் பதிவுகளில் எந்த ஒரு பதிவு திடீரென வைரல் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு ஏற்றார் போல், இணையத்தில் பதிவிடும் பதிவுகளும் காரணம் இல்லாமல் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகிறது.

சூப்பர் மார்க்கெட்

சூப்பர் மார்க்கெட்

இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த ராட்சத பல்லி இனத்தை சேர்ந்த உடும்பு பொருட்களை அடுக்கி வைத்திருந்த அலமாரி மேல் ஏறியதால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.

உடும்பு ஒன்று பொருட்கள் அடுக்கி வைத்திருந்த

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, தாய்லாந்தில் இருக்கும் தாய் டிராவல் ஏனென்ஸி நிறுவனம் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த மிக்பெரிய ராட்சத பல்லி இனத்தை சேர்ந்த உடும்பு ஒன்று பொருட்கள் அடுக்கி வைத்திருந்த அலமாரி மேலே ஏறியது.

அங்கிருக்கும் பொருட்கள் கீழே விழுந்தும்

தொடர்ந்து அங்கிருக்கும் பொருட்கள் கீழே விழுந்தும் பொருட்படுத்தாமல் மேலே ஏறிய உடும்பு அலமாரியின் மேல்மட்டதிற்கு சென்று படுத்துக் கொண்டது. பின்பு திரைப்படங்களில் வருவதை போன்று அச்சமூட்டும் வகையில் சூப்பர் மார்க்கெட்டில் உடும்பு புகுந்ததால் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டில் உடும்பு

குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டில் உடும்பு நுழைந்ததை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர். அதன்படி இப்போது ராட்சத பல்லி இனத்தை சேர்ந்த உடும்பு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த வீடியோவை பார்ந்த சிலர் இதுதான் காட்சில்லா என்று கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

 அமெரிக்காவில் ஒரு ஆச்சரியமளிக்கும்

இதேபோல் அமெரிக்காவில் ஒரு ஆச்சரியமளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதாவதுஅமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் சைரியா என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவருடைய இல்லத்தில் தான் கரடி ஒன்று புகுந்து செய்துள்ள அனைத்து சேட்டைகளும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து சைரியா வீட்டினுள் புகுந்த கரடி ஒனறு வீட்டில் உள்ள வளாகத்தில் வலம் வந்துள்ளது. இதனை சைரியா கவனித்துள்ளார்.

 கரடியின் போக்கை சைரியா

அதன்பின்பு கரடியின் போக்கை சைரியா ஆராய்ந்துள்ளார். வளாகத்தில் இருந்து வீட்டின் பின்புறம் சிறுவர்கள் விளையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான நீர் தொட்டியை அந்த கரடி அடைந்தது.

நீர்த் தொட்டியை கரடி சுற்றி சுற்றி

பின்னர் அந்த நீர்த் தொட்டியை கரடி சுற்றி சுற்றி வந்திருந்தது. அடுத்து சிறுது நேரத்தில் அந்த தொட்டியை பார்த்ததும் கரடிக்கு ஏதோ தோன்றியது போலவே அந்த தொட்டிக்குள் பதமாக அந்த கரடி இறங்கியது. தொட்டிக்குள் இறங்கியதுமே முதலில் நீரை ஆசைதீர பருகியது, பின்னர் அந்த தொட்டிக்குள் அப்படியே சிறுது நேரம் விளையாடத் துவங்கியது. தற்சமயம் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Best Mobiles in India

English summary
Giant lizard suddenly enters a supermarket! Viral video: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X