உடற்பயிற்சி செய்யும் பேய்: பூங்காவில் நடந்த பதறவைக்கும் வைரல் வீடியோ- உண்மையில் பேயா?

|

பூங்காவில் உள்ள உடற்பயிற்சி இயந்திரத்தை பேய் இயக்கும் விதமான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில் குறித்து பார்க்கலாம்.

ஆன்லைனில் வைரலாகும் பல்வேறு விசித்திர வீடியோக்கள்

ஆன்லைனில் வைரலாகும் பல்வேறு விசித்திர வீடியோக்கள்

ஆன்லைனில் வைரலாகும் பல்வேறு விசித்திர வீடியோக்களுக்கு பதில் தெரியாமல் போவது வழக்கம். இந்த வீடியோ எப்படி நடக்கிறது, இது சிலரின் மர்ம முயற்சியா போன்ற பல்வேறு கேள்விகள் மனதில் தோன்றினாலும் நாம் அடுத்த வீடியோக்களை பார்த்து கடந்து சென்றுவிடுவோம்.

சில வீடியோக்கள் மர்மாகவே இருக்கிறது

சில வீடியோக்கள் மர்மாகவே இருக்கிறது

இருப்பினும் ஒரு சில வீடியோக்கள் மர்மாகவே இருக்கும் அதன்படி பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் பொது உடற்பயிற்சி கருவிகள் தாமாக இயங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்போரை திகைப்பிலும் பல்வேறு கேள்வியில் ஆழ்த்துகிறது.

ஜான்சி பகுதியில் உள்ள காஷிராம் பூங்கா

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள காஷிராம் பூங்காவில் அனைவருக்கும் பொதுவான உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் பூங்காவிற்கு வருபவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த பகுதியில் உள்ள சாதனங்களில்தான் வீடியோ காட்சியாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சிலர் இது டெல்லியில் உள்ள பூங்காவில் காட்சியாக்கப்பட்டது என கூறுகின்றனர்.

பூங்காவில் உள்ள உடற்பயிற்சி சாதனங்கள்

இந்த வீடியோவில் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களில் இரண்டு கருவிகள் தாமாக இயங்குகிறது. அதேபோல் இது காற்றில் ஆடுவதற்கு சாத்தியமில்லை, மேலும் இந்த சாதனங்கள் அனைத்தும் மனிதர்களால் இயக்கப்படுவது மின்சாரம் மூலம் இயக்கப்படுவது அல்ல. தோள்பட்டை பளுதூக்கும் கருவியான இந்த இயந்திரம் யாரோ ஒருவர் உடற்பயிற்சி செய்வது போல் தாமாக வேகமாக இயங்குகிறது.

தாமாக இயங்கும் வீடியோ

இந்த வீடியோவின் படி தாமாக இயங்குகிறது இதை சுற்றி போலீஸார் இருப்பது போன்று காட்சியாக்கப்பட்டுள்ளது. இதில் பார்ப்போரை சற்று திகைக்கப்பட்டு வருகிறது இதை பலரும் வாட்ஸ்ஆப்-ல் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு சமூகவலைதள நெட்டிசன்கள் பலதரப்பு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

விரைவில் கைது செய்யப்படுவார்

விரைவில் கைது செய்யப்படுவார்

இதுகுறித்து ஜான்சி பகுதி காவல்துறையினர் தரப்பில் இந்த அமானுஷ்ய நடவடிக்கைகள் ரத்து செய்தது. இந்த வீடியோ கான்ஷிராம் பூங்காவில் தான் படமாக்கப்பட்டதாகவும் இதை தவறாக பயன்படுத்துபவர்கள் யாரேனும் நபர் கண்டறியப்பட்டால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தது. இது யாரோ ஒருவர் முறைகேடாக பயன்படுத்தும் செயல் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இயந்திரத்தில் கம்பி கட்டியிருக்க வேண்டும்

இயந்திரத்தில் கம்பி கட்டியிருக்க வேண்டும்

"குறும்புக்காரர்கள்" கருவியில் ஒரு கம்பியைக் கட்டி, இயந்திரம் நகரும் போது அதை படமாக்கியிருக்க வேண்டும் என்று அறிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வழக்கில் போலீஸார்கள் தற்போதுவரை யாரை குறிப்பிட்டும் சந்தேக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Ghost operating the gym equipment in the park: viral video

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X