Home
News

இனி PF பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் எடுக்கலாம்.. வருகிறது புதிய வசதி.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது. அதாவது மத்திய அரசு விரைவில் EPFO ​​3.0 திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுப்பதை மிகவும் எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.

அதுவும் இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து EPFO ​​உறுப்பினர்கள் ஏடிஎம்கள் மூலம் தங்கள் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய விதிகளை அமல்படுத்துவதன் நோக்கம், உறுப்பினர்கள் தங்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி சுலபமாக பிஎஃப் பணத்தை எடுக்க முடியும்.

இனி PF பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் எடுக்கலாம்.. வருகிறது புதிய வசதி..

குறிப்பாக உறுப்பினர்கள் தங்கள் மொத்த பிஎஃப் இருப்புத் தொகையில் 75 சதவீதம் வரை ஏடிஎம் மூலம் எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர்கள் பணம் எடுப்பதற்கான காரணத்தை வழங்க வேண்டும். இப்போது ஏடிஎம் பணம் எடுக்கும் முறை எவ்வாறு செயல்படும் அல்லது வரம்புகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து EPFO-அமைப்பிடமிருந்து உறுதியான தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் மருத்துவ மற்றும் பிற தனிப்பட்ட அவசரத் தேவைகளுக்காக 75 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இதை உறுதியாகக் கூற முடியாது.

குறிப்பாக EPFO 3.0 திட்டம் தொடர்பான ஏடிஎம் பணம் எடுக்கும் விதிமுறை வெறும் வசதிக்காக மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது எந்த வரிச் சலுகைகளையும் வழங்காது என்றும், உங்களது பிஎஃப் பணம் எடுப்பதற்கு முன்பை போலவே தொடர்ந்து வரி விதிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

அதேபோல் EPFO ஒரு புதிய முறையைச் சோதித்து வருகிறது. அதில் புதிய விதிகள் ஏப்ரல் 1-ம் தேதி அன்று நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொரடந்து, சந்தாதாரர்கள் யுபிஐ பரிமாற்றங்கள் மற்றும் ஏடிஎம் மூலம் தங்கள் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். இது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால் பிஎஃப் பணம் எடுப்பது வேகமாகவும் எளிதாகவும் மாறும். இந்த நடவடிக்கை தற்போது உள்ள கோரிக்கை மனுக்களைத் தாக்கல் செய்து ஒப்புதல்களைப் பெறும் நீண்ட செயல்முறையை நீக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான தகவலின்படி, EPFO தனது உள் மென்பொருளை மேம்படுத்தி வருகிறது என்றும், இந்த சேவையை படிப்படியாக அறிமுகப்படுத்த வங்கிகள் மற்றும் யுபிஐ தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறையானது பிஎஃப் பணத்தை எடுப்பதற்குத் தேவைப்படும் 7 முதல் 15 வேலை நாட்களிலிருந்து, கிட்டத்தட உடனடியாக அல்லது 24 மணி நேரத்திற்குள் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இனி PF பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் எடுக்கலாம்.. வருகிறது புதிய வசதி..

பிஎஃப் பணத்தை எடுக்க வழிகள்
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, யுபிஐ மூலம் பணத்தை எடுக்க உங்கள் யூஏஎன் (UAN) உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் சரிபார்க்கப்படும். அதன்பின்னர் நீங்கள் ஒரு செயலி மூலம் பணம் எடுப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்து, உங்களது ஆதார் ஓடிபி அல்லது பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் அதை உறுதிப்படுத்துவீர்கள். அதைத்தொடர்ந்து யுபிஐ வழியாக பணம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் டெபிடிட் கார்டை போன்று ஒரு பிஎஃப் கார்டையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இது உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட வரம்பு வரை பணத்தை எடுக்க அனுமதிக்கும். மேலும் இந்த திட்டம் பணம் எடுப்பதை மற்றும் டெபாசிட் செய்யும் செயல்முறையைத் தானியக்கமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Getting your EPFO money soon? ATMs will make it easier
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X