ஸ்மார்ட்போனுடன் இனைந்து புகைப்படங்களை ப்ரின்ட் செய்யும் புதிய கருவி
ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுப்பது தினமும் அதிகரித்து வருகின்றது பல வகையில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக வழி வகுக்கின்றது. அந்த வகையில் உருவாகியிருக்கும் கருவி தான் ப்ரின்ட். அதிகளவில் எடுக்கப்படும் புகைப்படங்களை உடனடியாக ப்ரின்ட் செய்யவே இந்த கருவி கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரின்ட் தொழில்நுட்பம் செல்பீ ஜனங்களுக்கு ஏற்றதாக இருக்கின்றது. இது ஸ்மார்ட்போன் கேமராவுடன் எளிதாக பொருந்தி கொண்டு 30 நொடிகளில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை ப்ரின்ட் செய்கின்றது. மேலும் இந்த கருவி வைபை, ப்ளூடூத் என எவ்வித வயர்லெஸ் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ரின்ட் கருவியை உங்களது போனில் பொருத்தி புகைப்படம் எடுத்த பின் ப்ரின்ட் செய்து கொள்ள முடியும், மேலும் ஏற்கனவே கேலரியில் இருக்கும் புகைப்படங்களையும் இந்த கருவியை கொண்டு ப்ரின்ட் செய்ய முடியும்.
அனைத்து புகைப்படமும் 2 க்கு 3 இன்ச் இருப்பதோடு ZINK எனப்படும் ஜீரோ இன்க் பேப்பரை பயன்படுத்துகின்றது. இதன் மூலம் கேஸ் எடை குறைவாக இருக்கின்றது. ப்ரின்ட் கருவி ஐ போன் 5, ஐபோன் 5சி, 6 மற்றும் கேலக்ஸி எஸ்4 மற்றும் எஸ்5 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு தற்சமயம் வடிவமைக்கப்பட்டுள்ள்து. விரைவில் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் பொருந்தும் படி வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரின்ட் கருவியானது ஆக்மென்டெட் ரியால்டி செயலி கொண்டுள்ளதால் போட்டும் எடுக்கப்படுவதை வீடியோவாக மாற்றி அதனை க்ளவுட் ஸ்டோரேஜில் பதிவேற்றம் செய்கின்றது.


Click it and Unblock the Notifications