ஐபோன் வாங்க ரூ.23,000 சலுகை தராங்க பாஸ்..
புதுசா ஐபோன் வாங்க ஐடியா இருக்கா, அப்ப உடனே வாங்கிடுங்க, அதிகளவு கேஷ்பேக் தராங்களாம் பாஸ்..
ஆப்பிள் மற்றும் சிட்டி பேங்க் இணைந்து ஐபோன் மற்றும் ஐபேட் வாங்கும் பயனர்களுக்குக் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளன. அதன் படி ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை வாங்கும் போது அதிகபட்சம் ரூ.23,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரூ.23,000 கேஷ்பேக்
ஐபோன் அல்லது ஐபோன் 7 பிளஸ் கருவியை வாங்கும் அதே நாளில் ஐபேட் கருவியையும் வாங்கும் பயனர்களுக்கு ரூ.23,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் ஐபேட் கருவியை வாங்கி ஐபோனினை வாங்கும் போதும் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டிபேங்க்
ஆப்பிளின் இந்தச் சலுகை அனைத்துப் பயனர்களுக்கும் வழங்கப்படவில்லை, சிட்டிபேங்க் பயனர்களுக்கு மட்டும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகளை ஒரே நாளில் வாங்குபவர்களுக்கு மட்டுமே கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

90 நாட்கள்
கேஷ்பேக் பணம் கருவியை வாங்கிய 90 நாட்களுக்குள் வங்கி கணக்கில் கிரெடிட் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையங்கள்
ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்த குறிப்பிட்ட ஆப்பிள் விற்பனை நிலையங்களில் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும்.

வேலிடிட்டி
இச்சலுகை டிசம்பர் 31, 2016 வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரெடிட் கார்டும் சுமார் நான்கு முறை என மாதம் ஒன்றிற்கு இருமுறை பயன்படுத்த முடியும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications