ரயில் டிக்கெட் பெறுவதற்கு இனி கூகுள் பே, போன்பே போதும்.. இனி வரிசையில் நிற்க வேண்டாம்..
இந்தியன் ரயில்வே (Indian Railways) அமைப்பு அவ்வப்போது புதிய முயற்சிகளைச் செயல்படுத்திக் கொண்டேதான் வருகிறது. அதாவது இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக டிக்கெட் பெறுவதற்கு புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் முன்பதிவு செய்யாத டிக்கெட் வாங்க பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நடைமுறை இருந்தது. இதனால் கவுண்டரில் சில்லரை கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க தான் இப்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆர் கோடு (QR code) ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே ரயில் நிலையங்களில் வரிசையில் நிற்காமல் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தி எளிமையாக டிக்கெட் பெறலாம்.
அதுவும் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு (Salem Railway Division) உள்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, ஊட்டி உள்ளிட்ட 78 ரயில் நிலையங்களில் (78 railway stations) உள்ள டிக்கெட் கவுண்டர்களில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பயணிகள் அனைவரும் க்யூ ஆர் கோடு பயன்படுத்தி நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்த்து ரயில் டிக்கெட்டை எளிதாகப் பெறலாம் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பயணிகள் இனிமேல் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (paytm) போன்ற செயலிகளைப் பயன்படுத்தி, பணம் செலுத்தி எளிமையாக டிக்கெட் பெறலாம். இந்த புதிய நடைமுறை தற்போது அதிக பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல் யூடிஎஸ் செயலி (UTS App) மூலம் பிளாட்பாம் டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட், மாதாந்திர டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட் ஆகியவற்றை உடனே பெறமுடியும். இதுதவிர யூடிஎஸ் செயலி மூலம் எடுத்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்துகொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.
அதன்படி யூடிஎஸ் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை இரண்டு வகையில் எடுக்கலாம். பேப்பர்லெஸ் டிக்கெட், பேப்பர் டிக்கெட் என இரண்டு வகைகள் உள்ளன. பேபபர்லெஸ் (paperless) டிக்கெட் என்றால் டிக்கெட்டை எடுத்த பின்பு தனியாக பிரிண்ட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது யுடிஎஸ் செயலியை ஓபன் செய்தால் டிக்கெட்டை பார்க்க முடியும். இந்த டிக்கெட்டை டிடிஆர் கேட்டதும் காண்பிக்கலாம்.
பேப்பர் டிக்கெட் (paper ticket) என்றால் யூடிஎஸ் செயலியில் டிக்கெட் எடுத்தாலும்கூட ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கு உள்ள தனியாங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்திலோ அல்லது கவுண்டரிலோ காட்டி டிக்கெட் பிரண்ட் செய்துகொள்ளலாம். எனவே இப்படி பிரிண்ட் செய்த டிக்கெட் கைவசம் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இதைக் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பேப்ர்லெஸ் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் பேப்பர் டிக்கெட்டை கேன்சல் செய்யலாம். அதாவது நீங்கள் இந்த செயலியில் டிக்கெட் புக் செய்துவிட்டு வேண்டாம் என்று நினைத்தால், மெஷினில் பிரிண்ட் செய்யும் முன்பாக டிக்கெட்டை ரத்து செய்து கொள்ளலாம். ஒருவேளை டிக்கெட்டை இயந்திரத்தில் பிரிண்ட் செய்து விட்டால் ஒரு மணி நேரத்திற்குள் கவுண்டரில் கொடுத்து கூட ரத்து செய்து கொள்ளலாம்.

ஆனால் இந்த டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம் கையில் கிடைக்காது. ரயில்வே வேலட்டில் தான் ரிஃபண்ட் செய்யப்படும். இந்த வசதியைப் பயன்படுத்த, யூடிஎஸ் செயலியில் பேப்பர் டிக்கெட் புக் செய்த பயணிகள் கேன்சல் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு நீங்கள் எடுத்த டிக்கெட் கேன்சல் செய்ய உகந்ததா என்பதைக் காட்டும். அதாவது ரூ.30-க்கு குறைவான விலையில் டிக்கெட் எடுத்தால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது.
குறிப்பாக ரூ.30 ரூபாய்க்கும் மேல் உள்ள டிக்கெட் என்றால் மட்டுமே கேன்சல் செய்ய முடியும். கேன்சல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் பாப் அப் ஒன்ற திரையில் தோன்றும். அதில் பிடித்தது போக எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும் என்ற விவரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








