Home
News

மொத்த இந்தியாவுக்கும் தீபாவளி கிஃப்ட் கொடுத்த அம்பானி.. ரூ.3000-க்கு இலவச நன்மைகள்.. வருஷம் முழுக்க டேட்டா!

ஜியோ (Jio) அறிவித்துள்ள 2024 தீபாவளி ஆபர் ஆனது ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான ஒரு தீபாவளி கிஃப்ட்டை (Diwali Gift) போல உள்ளது. ஜியோவின் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு திட்டமானது, தற்போது ரூ.3000-க்கான இலவச நன்மைகளை வழங்குகிறது. அதென்ன திட்டம்? இதென்ன ஆபர்? இதோ விவரங்கள்:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் 2024 தீபாவளி தமாகா சலுகையின் (Diwali Dhamaka offer) கீழ் ரூ.3599 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3350 மதிப்புள்ள கூடுதல் நன்மைகள் ஆனது முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக கிடைக்கும் இலவச நன்மைகள் ஆனது ஏஜியோ (Ajio), ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) மற்றும் ஸ்விக்கி (Swiggy) போன்ற தளங்களுக்கான வவுச்சர்களாக கிடைக்கும். அதவாது அந்தந்த தளங்களில் சுயாதீனமாக பயன்படுத்தக்கூடிய கூப்பன்கள் வடிவில் கிடைக்கும். ஏஜியோ மூலம், ரூ.999 க்கு மேலான ஆர்டர்களில் ரூ.200 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன் கிடைக்கும்.

இதேபோல ஈஸ்மைட்ரிப் மூலம், விமானம் / ஹோட்டல் புக்கிங்கில் ரூ.3,000 வரை தள்ளுபடி கிடைக்கும். கடைசியாக ஸ்விக்கி மூலம், பயனர்கள் குறைந்தபட்சம் ரூ.399 மற்றும் அதற்கு மேலான ஆர்டர்களில் ரூ.150 தள்ளுபடி கிடைக்கும். மேற்கண்ட 3 கூப்பன்களுமே / வவுச்சர்களுமே மைஜியோ ஆப் (MyJio App) வழியாக ரீடீம் (Redeem) செய்ய கிடைக்கும்.

மொத்த இந்தியாவுக்கும் தீபாவளி கிஃப்ட் கொடுத்த அம்பானி!

ரூ.3599 திட்டத்தின் வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை, இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2.5ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் 365 நாட்கள் / 1 ஆண்டு என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். சுவாரசியமாக இந்த திட்டத்தின் எஃப்யுபி (FUP) வரம்பை மீறிய பின்னரும் கூட, அதாவது டெய்லி டேட்டா லிமிட்டை பயன்படுத்திய பிறகும் கூட, இது 64 கேபிபிஎஸ் அளவிலான இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்குகிறது.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.3599-ன் கீழ் ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) போன்ற ஆப்களுக்கான இலவச அணுகல் கிடக்கும். ரூ.3599 திட்டமானது, ஜியோ சேவையின் கீழ் கிடைக்கும் 2 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதே தீபாவளி ஆபர் 3 மாத திடமான ரூ.899 மீதும் கிடைக்கிறது. அதாவது அதே ரூ.3350 மதிப்புள்ள கூப்பன்கள் கிடைக்கிறது.

இதுதவிர்த்து 2 ஜியோபாரத் 4ஜி போன்கள் மீதும் தீபாவளி ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி (JioBharat V2 4G) ஆகிய 2 மாடல்களும், அசல் விளையான ரூ.999 க்கு பதிலாக, ரூ.300 தள்ளுபடிக்கு பிறகு, வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கிறது.

இவ்விரு ஃபீச்சர் போன்களின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இரண்டுமே 1.77-இன்ச் கலர் டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் 128ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்க உதவும் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் வருகின்றன. கூடவே 1000mAh பேட்டரியை பேக் செய்கின்றன.

ஜியோ நெட்வொர்க்கின் (Jio Network) கீழ் மட்டுமே வேலை செய்யும் ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி ஆகிய இரண்டுமே 23 இந்திய மொழிகளுக்கான ஆதரவை கொண்டுள்ளன. மேலும் இந்த ஃபீச்சர் போன்களில் ஜியோ சினிமா (JioCinema) ஆப் உள்ளது. இதன்மூலம் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளின் நேரலையை அணுகலாம். இதில் ஜியோ பே (JioPay) ஆப்பும் உள்ளது. இது க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் யுபிஐ (UPI) பேமெண்ட்களை செய்ய அனுமதிக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Get Rs 3350 Worth Free Benefits With Jio Rs 3599 Prepaid Plan Under Diwali Dhamaka Offer 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X