மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எதிர்காலத்தை கணித்து சொன்ன எலான் மஸ்க்: மனசை கல்லாக்கிட்டு இதை படிங்க!

|

உலகப் பணக்காரரும் ட்விட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்க் G20 உச்சிமாநாட்டில் வணிகத் தலைவர்களிடையே உரையாற்றினார். எதிலும் வித்தியாசம் இருக்க வேண்டியது தான், அதற்காக வீடியோ காலிலும் வித்தியாசமா என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர். மேலும் எதிர்காலத்தை கணித்து மஸ்க் சொன்ன விதம் பலரையும் வியப்படைய வைத்தது என்றே கூறலாம்.

G20 உச்சிமாநாட்டில் Elon Musk

G20 உச்சிமாநாட்டில் Elon Musk

உலகப் பணக்காரரும் ட்விட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்க் G20 உச்சிமாநாட்டில் வணிகத�� தலைவர்களிடையே உரையாற்றினார். வீடியோ இணைப்பு மூலம் இந்த உரையாடல் நடைபெற்றது. வீடியோ இணைப்பில் மஸ்க் முற்றிலும் வித்தியாசமாக தோன்றினார். அதாவது முழு பிளாக் திரையில் அவரது முகம் மற்றும் கை மட்டும் வெளிச்சத்தோடு தோன்றியது. இருட்டில் அமர்ந்தபடி பாரம்பரிய இந்தோனேசிய பாடிக் சட்டை அணிந்து மஸ்க் உரையாற்றினார். இருட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவரது முகம் மற்றும் கைகள் மட்டுமே தோன்றியது. இந்த உரையாடலில் அவர் உலக முன்னேற்றம் குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் கணத்து கூறினார்.

மஸ்க் ஏன் இப்படி தோன்றினார்?

மஸ்க் ஏன் இப்படி தோன்றினார்?

இந்த உரையாடலில் அவர் ஏன் இப்படி தோன்றினார் என்பதற்கான விளக்கத்தையும் மஸ்க் கூறினார். அதில் "இந்த அழைப்பிற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு எங்களுக்கு மின்சாரம் தடைபட்டது. அதனால்தான் நான் முழுவதுமாக இருட்டில் இருக்��ிறேன்" என்று குறிப்பிட்டார். ஏன் நேரில் வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த மஸ்க், சமூகவலைதளமான ட்விட்டரின் முதலாளியான பிறகு "பணிச்சுமை சமீபத்தில் நிறைய அதிகரித்துள்ளது" என குறிப்பிட்டார்.

ட்விட்டர் சர்ச்சை

ட்விட்டர் சர்ச்சை

மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் ஏற்பட்ட சர்ச்சை குறித்த எந்தவித கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூடிக் சந்தா கட்டண விவகாரம் ���ன ட்விட்டரை சுற்றி நிறைய சர்ச்சைகள் வந்துக் கொண்டிருக்கும். அது குறித்த எந்தவித தகவலையும் மஸ்க் இந்த உரையாடலில் பகிரவும் இல்லை, விளக்கவும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Aliens நாகரிகங்கள்

Aliens நாகரிகங்கள்

எதிர்காலம் குறித்து கூறுகையில், எதிர்காலத்தில் நாம் Aliens நாகரிகங்களைக் கண்டுபிடிப்போம் அல்லது மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரிகங்களைக் கண்டுபிடிப்போம் என குறிப்பிட்டார். முந்தைய நாகரிகம் குறித்த தெளிவான விளக்கம் இன்னும் இல்லாத நிலையில் எதிர்காலத்தில் அதை துல்லியமாக கண்டுபிடிப்போம் என குறிப்பிட்டுள்ளார். ஏலியன்ஸ் குறித்த உண்மைத் தகவல்கள் தெரியவரலாம் எனவும் கூறினார். அதேபோல் விண்மீனை ஆராய்வது என்பது நம்பமுடியாத அளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கும் என நான் நினைக்கிறேன் எனவும் கூறினார்.

பறக்கும் கார் திட்டங்கள்

பறக்கும் கார் திட்டங்கள்

ம��ன்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் மஸ்க், தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுக்கும் வகையில் பறக்கும் கார்களுக்கான திட்டம் கொண்டுவரப்படும் எனவும் கூறினார். பறக்கும் கார்களுக்கான திட்டங்களுக்கு என மேல்புறத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.

போக்குவரத்து நெரிசல் குறையும்

போக்குவரத்து நெரிசல் குறையும்

எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சுரங்கப்பாதை போக்கு���ரத்து என்பது எந்தவொரு பகுதியிலும் இருக்கும் மோசமான நெரிசலுக்கு முற்றிலும் தீர்வாக அமையும் என கூறினார். இந்த உரையாடலில் மஸ்க் பெரும்பாலும் பூமியின் எதிர்காலத்திற்கான தனது கண்ணோட்டம் குறித்தே கூறினார்.

ஒலியின் வேகத்தை விட 20 மடங்கு அதிவேக பயணம்

ஒலியின் வேகத்தை விட 20 மடங்கு அதிவேக பயணம்

இந்தோனேசியாவை தனது SpaceX ராக்கெட்டுக்கான ஏவுதளமாக பயன்படுத்துமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு உலகெங்கிலும�� உள்ள ராக்கெட் தளங்களை தான் பார்க்க விரும்புவதாக மஸ்க் கூறினார். அனைத்து இடங்களிலும் ராக்கெட் தளம் என்பது ஒலியின் வேகத்தை விட 20 மடங்கு அதிக வேகத்தில் மக்களை பயணிக்க இந்த திட்டம் வழிவகுக்கும் எனவும் கூறினார். உலகில் எங்கு வேண்டுமானாலும் ஒரு மணி நேரத்திற்குள் பயணம் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

வேடிக்கையான விஷயம்

வேடிக்கையான விஷயம்

எதிர்காலம் குறித்த அவரது கனவுகள் மிகவும் தைரியமானதாகவும் துணிவாகவும் இருக்கிறது என பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் "நான் இந்த வீடியோவை பார்க்கிறேன், இது மிகவும் வினோதமாக இருக்கிறது. மெழுகுவர்த்திகள் உடன் சூழப்பட்ட இருட்டில் அமர்ந்திருக்கிறேன். இது வேடிக்கையான விஷயம்" என மஸ்க் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Get Ready! Elon Musk prediction about World future: Aliens Life, Galaxy Research, Flying Cars, Rocket Tourism!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X