ரூ.10,000/-விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சோனி, எல்ஜி ஸ்மார்ட் டிவிகள்.!

|

ஜூலை 23-ம் தேதி முதல் 25-ம் வரை பேடிஎம் சார்பில் பல்வேறு மின்சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,

குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'Monsoon Appliance Bonanza' என்ற தலைப்பில் பேடிஎம் இந்த சிறப்பு தள்ளுபடி ஆஃபரை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10,000/-விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சோனி, எல்ஜி ஸ்மார்ட்டிவிகள்

சோனி, எல்ஜி, மைக்ரோமேக்ஸ், பானாசோனிக், வியூ டெலிவிஷன்ஸ் போன்ற நிறுவனங்களின் எல்இடி ஸ்மார்ட் டிவிகளை தற்சமயம் குறைந்த விலையில் வாங்கமுடியும் பேடிஎம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி 43LJ554T எல்இடி 43-இன்ச் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடலை தற்சமயம் ரூ.40,690-க்கு வாங்க முடியும், பின்பு இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.54,690-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.6,104 கேஷ்பேக் சலுனை இந்த

டிவி மாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10,000/-விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சோனி, எல்ஜி ஸ்மார்ட்டிவிகள்

சோனி நிறுவனத்தின் 32-இன்ச் KLV-32W672F HD-Ready/HD Plus ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.34,065-விலையில் விற்பனை செய்யப்படுகிறது,பின்பு இந்த டிவி மாடலுக்கு 5,110 கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 32-இன்ச் 32T8361HD/32T8352HD HD-Ready எல்இடி டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு, ரூ.13,450விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த டிவி மாடலுக்கு 2,758 கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.10,000/-விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சோனி, எல்ஜி ஸ்மார்ட்டிவிகள்

பானாசோனிக் 40-இன்ச் TH-40ES500D ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலுக்கு 37சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே ரூ.32,490-விலையில் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். மேலும் இந்த டிவி மாடலுக்கு 2,758 கேஷ்பேக்

வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி 32LJ573D 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 27சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்டிவியை மாடலை ரூ.30,990-க்கு வாங்க முடியும்.

ரூ.10,000/-விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சோனி, எல்ஜி ஸ்மார்ட்டிவிகள்

பானாசோனிக் TH-49ES480DX 49-இன்ச் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.41,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் சோனி KLV-32W672E 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.37,900விலையில் வாங்க முடியும்.

ஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்!

ஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்!

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் ஜியோ நிறவனத்திற்கு போட்டியா வோடபோன் அதன் ரூ.458/- திட்டதில் கூடுதல் டேட்டா நன்மைகளை அறிவித்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்பு வோடபோன் நிறுவனம் ரூ.199-திட்டதில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்தது, இப்போது ரூ.458-திட்டதில் கூடுதல் டேட்டாவை அறிப்பதன் மூலம் ஜியோவிற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தியுள்ளது இந்த வோடபோன் நிறுவனம்.மேலும் வோடபோன் இப்போது அறிவித்துள்ள திட்டத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.458/-திட்டம்:

வோடபோன் ரூ.458/-திட்டம்:

வோடபோன் வழங்கும் ரூ.458/-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இப்போது தினசரி 2.8ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், எஸ்எஸ்எம் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு இதே திட்டதில் தினசரி 1.4ஜிபி டேட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.448-திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தை 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஜியோ:

ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.448 மற்றும் ரூ.449 திட்டத்தில் தினசரி 2ஜிபி மற்றும் 1.5ஜிப டேட்டா ஆஃபர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. பின்பு ரூ.448-திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும், அதேபோல் ரூ.449-திட்டத்தை 91-நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலவச வாய்ஸ்கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

78.4ஜிபி டேட்டா:

78.4ஜிபி டேட்டா:

வோடபோன் நிறுவனம் இதற்குமுன்புரூ.199-/ திட்டத்தில் 78.4ஜிபி டேட்டா சலுகை அறித்தது, மேலும் தினசரி 2.8ஜிபி டேட்டாஇ 100எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 28 நாட்களுக்கு இந்த திட்டத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டாரங்களில் மட்டுமே இந்த சிறப்பு சலுகை கிடைக்கும் என்று வோடபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வட்டாரங்களிலும் இந்த அட்டகாசமான சிறப்பு சலுகை கிடைக்கும் என வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Get LED TVs from Sony, LG and other brands at up to Rs 10,000 discount: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X