ஏர்டெல் அதிரடி : 4ஜி டேட்டாவுடன் ரூ. 26,000/-க்குள் ஐபோன் 7 மற்றும் 7+ மாடல்கள்.!

|

புதிய ஐபோன்கள் வெளியான பின்னர் பழைய மாடல் ஐபோன்களின் விலை குறைவதும், சிறப்பான தள்ளுபடிகளை சந்திப்பதும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இப்படியொரு மலிவான வாய்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை, அதுவும் ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து.!

ஏர்டெல் அதிரடி : 4ஜி டேட்டாவுடன் ரூ. 26,000/-க்குள் ஐபோன் 7 மற்றும் 7+

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் போஸ்ட்பெயிட் சேவைக்கு மாறினாலும் கிடைக்கும் இந்த வாய்ப்பை ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி என்ன வாய்ப்பு.? ஐபோன் 7 தவிர வேறென்ன ஸ்மார்ட்போன்களுக்கு ஏர்டெல் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறது என்பதை விரிவாக காண்போம்.!

வெறும் ரூ.7,777/-க்கு.!

வெறும் ரூ.7,777/-க்கு.!

ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில், ஐபோன் 7 கருவியை வெறும் ரூ.7,777/-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 24 சமமான மாத தவணைகளை பயனர்கள் செலுத்தவேண்டியிருக்கும்.

ஐபோன் எக்ஸ்.!

ஐபோன் எக்ஸ்.!

இதே மாதிரியான சலுகையின் கீழ் ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் எக்ஸ் சாதனத்தையும் ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் வாங்க முடியும். நவம்பர் 3ஆம் தேதி, ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் ஐபோன் எக்ஸ் பட்டிய்லிட்டப்பட்ட சில நிமிடங்களுக்குள் அது விற்றுத்தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 7 (32 ஜிபி).!

ஐபோன் 7 (32 ஜிபி).!

ஐபோன் 7 கருவியின் 32 ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.7,777/-க்கு வாங்க கிடைக்கும். பின்னர், ரூ.2,499/- என்ற இஎம்ஐ தொகையை தொடர்ச்சியான 24 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 30 ஜிபி அளவிலான ஏர்டெல் 4ஜி டேட்டா வரம்பற்ற அழைப்பு நன்மைகளும் கிடைக்கும்.

ஐபோன் 7 (128 ஜிபி).!

ஐபோன் 7 (128 ஜிபி).!

இதேபோல ஐபோன் 7 கருவியின் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.16,300/-க்கு வாங்க கிடைக்கும். பின்னர், ரூ.2,499/- என்ற இஎம்ஐ தொகையை தொடர்ச்சியான 24 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 30 ஜிபி அளவிலான ஏர்டெல் 4ஜி டேட்டா வரம்பற்ற அழைப்பு நன்மைகளும் கிடைக்கும்.

ஐபோன் 7 ப்ளஸ் (32 ஜிபி).!

ஐபோன் 7 ப்ளஸ் (32 ஜிபி).!

ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் கருவியின் 32 ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.17,300/-க்கு வாங்க கிடைக்கும். பின்னர், ரூ.2,499/- என்ற இஎம்ஐ தொகையை தொடர்ச்சியான 24 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 30 ஜிபி அளவிலான ஏர்டெல் 4ஜி டேட்டா வரம்பற்ற அழைப்பு நன்மைகளும் கிடைக்கும்.

ஐபோன் 7 ப்ளஸ் (128 ஜிபி).!

ஐபோன் 7 ப்ளஸ் (128 ஜிபி).!

இறுதியாக ஐபோன் 7 ப்ளஸ் கருவியின் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ. 26,000/-க்கு வாங்க கிடைக்கும். பின்னர், ரூ.2,499/- என்ற இஎம்ஐ தொகையை தொடர்ச்சியான 24 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 30 ஜிபி அளவிலான ஏர்டெல் 4ஜி டேட்டா வரம்பற்ற அழைப்பு நன்மைகளும் கிடைக்கும்.

வழிமுறைகள்.!

வழிமுறைகள்.!

ஏர்டெல் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோருக்குள் நுழைந்து முதலில், நீங்கள் உங்களுக்கான ஐபோன் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவதாக, ஒரு உடனடி கடன் ஒப்புதல் பெற உங்களுக்கான தகுதியை சரிபார்க்க முடியும்.

முழுமையாக உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளவும்.!

முழுமையாக உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளவும்.!

மூன்றாவது, ரூ. 7,777/- (எடுத்துக்காட்டுக்கு) என்ற கட்டணம் செலுத்தி ஹோம் டெலிவரிக்கு காத்திருக்கவும். கருவி கைக்கு வந்த அடுத்த 24 மாதங்களுக்கு ஏர்டெல் வழங்கும் டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளை அனுபவித்துக்கொண்டே ரூ.2,499/- என்ற நிலையான இஎம்ஐ கட்டணத்தை செலுத்தி கருவியை முழுமையாக உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளவும்.

Best Mobiles in India

English summary
Get iPhone 7 At Airtel Online Store For Rs. 7,777. Details Here. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X