E-PAN Card வந்துவிட்டது: பான் கார்டு இல்லையென்று கவலை வேண்டாம்.! எப்போதுமுதல் கிடைக்கும்
இந்த மாதம் முதல் நாளில் (சனிக்கிழமை) இரண்டாவது பட்ஜெட்டை தாக்க செய்த நிர்மலா சீதாராமன், அதில் ஒரு மிகவும் எதிர்பார்த்த அம்சமாக பான் அட்டை பெறுவதை எளிமையாக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

நிர்மலா சீதாராமன்
குறிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல்
செய்ய அவசியமான பான் அட்டை இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில்உடனடியாக வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இ-பான் சேவை
அதன்படி ஆதார் முழு விபரங்களையும் கொண்டு இ-பான் சேவையை உடனே பெறும் வழிமுறையை வருமான வரித்துறைஅறிமுகம்செய்துள்ளது, இந்த புதிய வசதியை அரசாங்கம் இந்த மாதத்தில் உருவாக்கும் என வருவாய் துறைசெயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்திருந்ததார். குறிப்பாக இந்த முறையானது பான் நம்பரை ஒதுக்கீடு
செய்வதற்கான எளிதான செயல்முறைஎளிதாக்கும் என்றுதான் கூறப்படுகிது.

கணினி செயல்முறை தயாராகி வருகிறது
இந்த புதிய திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும், இதற்காக செயல்பாடுகளை உடைய கணினி செயல்முறைதயாராகி வருகிறது என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் இதை எப்படி அப்டேட் செய்யலாம்என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அதாவது இதை எப்படி செயல்படுத்தவேண்டும் என்றால், முதலில் வருமான வரித்துரை இணையதளத்திற்கு சென்றுஆதார் நம்பரை உள்ளீடு செய்யவும், அடுத்து ஆதார் எண்ணில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி எண்வரும். இந்த ஓடிபி நம்பரை கொடுத்தவுடன் இ-பான் அட்டையை பதிவிறகம் செய்யலாம்.

எளிமையாக பான் எண் கிடைக்கும்
முன்பு ஒருவர் பான் கார்டு பெற வேண்டுமெனில், அந்த மையங்களுக்கு சென்று படிவங்களை நிரப்பி,தேவையான ஆவணங்களை இணைந்து அனுப்ப வேண்டும். அதன்பின்னர் 14நாட்களுகக்கு பிறகு தான் பான் கார்டு கிடைக்கும். ஆனால் தற்போது கொண்டுவந்துள்ள திட்டத்தின் மூலம் இன்னும் எளிமையாக பான் எண் கிடைக்கும்.

30.75கோடி பேர்
மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம்அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் மார்ச் 31-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 27-ம் தேதி நிலவரப்படி 30.75கோடி பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆனால் இதுவரை 17.58கோடி பேரின் பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை, அவர்களும் பான் எண்ணைஇணைப்பதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications