சுந்தர் பிச்சை தலையில் 2 இடிகளை இறக்கிவிட்டு.. Google-ஐ விட்டு வெளியேறிய AI-யின் காட்ஃபாதர் Geoffrey Hinton!
"ஏஐ-யின் காட்ஃபாதர்" (Godfather of AI) என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton) கூகுள் நிறுவனத்தில் தனக்கு கொடுக்கப்பட்டு இருந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். மேலும் கூகுளை (Google) விட்டு செல்லும்போது சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலையில் 2 இடிகளையும் இறக்கியுள்ளார்.
ஏற்கனவே ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) வழியாக கூகுளும், அந்நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சையும் சந்திக்கும் சிக்கல்கள் போதாதென.. கூகுளில் இருந்து வெளியேற கையோடு, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொடர்பான 2 முக்கிய ஆபத்துகளை வெளிப்படுத்தியுள்ளார், ஜெஃப்ரி ஹிண்டன்.

தி நியூயார்க் டைம்ஸுக்கு (The New York Times) அளித்த நேர்காணலில், "ஏஐ சொந்தமாக கோடிங் (Coding) எழுதி, அதை ரன் (Run) செய்ய தொடங்கும் போது, அது மனிதர்களுக்கான வேலைகளை நீக்கிவிடும்; சாத்தியமாக அது மனிதகுலத்தையே கூட நீக்கிவிடும்" என்று ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரித்துள்ளார்.
"இதெல்லாம் நடக்க இன்னும் நிறைய காலம் ஆகுமென்று பலரும் நினைத்தார்கள்; நானும் கூட அப்படித்தான் நினைத்தேன். இதெல்லாம் நடக்க 30 முதல் 50 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக ஆகுமென்று நினைத்தேன். ஆனால் இப்போது நான் அப்படி நினைக்கவில்லை" என்றும் ஜெஃப்ரி ஹிண்டன் பகீர் கிளப்பியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தை பற்றி விமர்சிக்க விரும்புவதை காட்டிலும், ஏஐ-யின் அபாயங்களை (Risks Of Artificial Intelligence) பற்றி சுதந்திரமாக பேசுவதற்காகவே கூகுளை விட்டு வெளியேறியதாகவும் ஜெஃப்ரி ஹிண்டன் ட்வீட் செய்துள்ளார். மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஓப்பன்ஏஐ-யின் ஆதரவுடனான பிங் சேர்ச்சை (Bing Search) அறிமுகப்படுத்தும் வரை, கூகுளின் வெற்றியில் தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் ஹிண்டன் குறிப்பிட்டுள்ளார்.
சாட்ஜிபிடி-யின் வெளியீடானது கூகுளின் முக்கிய வணிகத்திற்கு பெரும் சவாலாக மாறியது. இதுபோன்ற கடுமையான போட்டியை நிறுத்துவது சாத்தியமே இல்லை. இந்த போட்டிகளானது "இனி எது உண்மை" என்று யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு போலியான கற்பனைகள் (Imagery) மற்றும் உரைகளை (Text) கொண்ட ஒரு உலகத்தை விளைவிக்கலாம் என்றும் ஹிண்டன் தனது கவலைகளை தெரிவித்துள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெஃப்ரி ஹிண்டன், ஏஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் தற்போதைய வளர்ச்சிக்கு வழிவகுத்த ஃபவுண்டேஷனல் பணிகளுக்காக (Foundational Works) 2018 ஆம் ஆண்டிற்கான டூரிங் விருதை (Turing Award) வென்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஹிண்டன் மற்றும் அவரது இரண்டு மாணவர்களால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை கூகுள் தனக்கு சொந்தமாக்கிய பிறகு ஹிண்டன் கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்தார். இவரின் 2 மாணவர்களில் ஒருவர் ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக (Chief Scientist) ஆனார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜெஃப்ரி ஹிண்டனின் வெளியேற்றம் பற்றி கூகுள் என்ன சொல்கிறது? ஏஐ-க்கான பொறுப்பான அணுகுமுறையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தைரியமான முன்னெடுப்பின் கீழ் புதுமைகளை உருவாக்கும்போது, அதன்வழி வரும் அபாயங்களை புரிந்து கொள்ள நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று கூகுளின் தலைமை விஞ்ஞானியான ஜெஃப் டீன் (Jeff Dean) கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








