ஒலிம்பிக்ஸ் வீராங்கனைகளை டேட் செய்ய இப்படி ஒரு ட்ரிக்கா? டின்டர் மூலம் திட்டம் போட பிரபலம்..

|

உலகின் தலைசிறந்த ஒவ்வொரு நாட்டிலும் இருந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக டோக்கியோ அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டிற்கான மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டோக்கியோவில் திரண்டுள்ள ஒலிம்பிக்ஸ் வீராங்கனைகளை டேட் செய்வதற்காக ஒரு டிக்டாக் பிரமுகர் முயன்றுள்ளார். அவர் செய்த இந்த ட்ரிக்கை வீடியோ பதிவாகப் பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஒலிம்பிக்ஸ் வீராங்கனைகளை டேட் செய்ய இப்படி ஒரு ட்ரிக்கா?

டிக்டாக்கில் பிரபலமானவர் ரீத் கன்வர் என்பவர், இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ஒலிம்பிக்ஸ் வீராங்கனைகளை எப்படி டேட் செய்வது என்று புதிய டின்டர் Tinder ட்ரிக்கை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது. அவர் தனது வீடியோவில், டின்டர் பயன்பாட்டை ஓபன் செய்து டின்டர் பிளஸ் சேவையை காசு கொடுத்து வாங்குவதைக் காட்டுகிறார். பின்னர் டின்டர் பிளஸ் சேவையில் உள்ள லொகேஷன் செட்டிங்க்ஸை மாற்றம் செய்து, அதை டோக்கியோவிற்குக் கொண்டுசென்றுள்ளார்.

இதனால், ஒலிம்பிக் வில்லேஜ் பகுதியில் உள்ள ஒலிம்பிக் வீராங்கனைகளை டேட் செய்ய முடியும் என்று அவர் தாது விடியோவில் கூறியுள்ளார். இதன் மூலம் அவருக்குக் காண்பிக்கப்பட்ட சில ஒலிம்பிக்ஸ் வீராங்கனைகளை அவர் ஸ்வைப் செய்து டேட் செய்யத் தயார் என்று தனது விருப்பத்தையும் பதிவு செய்துள்ளதை வீடியோ தெளிவாகக் காண்பிக்கிறது. இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் இந்தியர்கள் இதை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் கூட, டிவிட்டர் வழியாக இந்த வீடியோ இந்தியர்களுக்கும் பார்ப்பதற்குக் கிடைத்துள்ளது. இந்த வீடியோ பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் ஏராளமான லைக்குகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. இவரின் வீடியோ வைரல் ஆகிய பின்னர், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்லேஜ் பகுதியில் ஏராளமான டிண்டர் பயனர்களை ஆப் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Genius Guy Changed His Tinder Location To Tokyo To Date Olympic Athletes Goes Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X