நவ.30 குள்ள சமர்பிக்கணும்.. இல்லனா பணம் வராது.. Pension வாங்குவோர்களுக்கு புது கெடு.. Online-ல் செய்யலாம்!
ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற, அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்களும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதிக்குள், ஜீவன் பிரமான் பத்ரா (Jeevan Pramaan Patra) என்று அழைக்கப்படும் தங்கள் லைஃப் சர்டிஃபிகேட்டை (Life certificates) சமர்ப்பிக்க வேண்டும். ஏனென்றால் வாழ்க்கை சான்றிதழ் ஆனது கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் மட்டுமே செல்லுபடியாகும்.
அப்படியாக இந்த 2024 ஆம் ஆண்டிற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஆன்லைன் வழியாக டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை (Digital Life Certificate) பெறுவது எப்படி? ஒருவேளை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்களுடைய ஜீவன் பிரமான் பத்ராவை சமர்பிக்காத ஓய்வூதியதாரர்கள் என்ன மாதிரியான சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும்? இதோ விவரங்கள்:

ஓய்வூதியம் பெறுவோர் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் லைஃப் சர்டிஃபிகேட்டை சமர்ப்பிக்க தவறவிட்டால் என்ன நடக்கும்? 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1, 2024 முதலே லைஃப் சர்டிஃபிகேட்டை சமர்ப்பிக்கத் தொடங்கலாம், மற்றவர்களுக்கு ஜீவன் பிரமான் பத்ராவை சமர்ப்பிக்கும் செயல்முறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
அரசாங்கத்தால் நீட்டிக்கப்படாத பட்சத்தில், சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2024 நவம்பர் 30 ஆகும். ஒருவேளை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் உங்கள் லைஃப் சர்டிஃபிகேட்டை சமர்ப்பிக்கவில்லை என்றால் உங்கள் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். லைஃப் சர்டிஃபிகேட் ஆனது மத்திய ஓய்வூதியச் செயலாக்க மையங்களுக்கு (Central Pension Processing Centers - CPPC) வந்தவுடன் மட்டுமே பணம் ரிலீஸ் செய்யப்படும்.
லைஃப் சர்டிஃபிகேட்டை சமர்ப்பிப்பதற்கான தேவைகள் என்னென்ன?
- பிபிஓ எண் (PPO Number)
- ஆதார் எண் (Aadhaar number)
- வங்கிக் கணக்கின் விவரங்கள் (Details of the bank account)
- ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் (Aadhaar linked mobile number)
ஆன்லைன் (Online) வழியாக ஜீவன் பிரமன் பத்ரா சான்றிதழை எவ்வாறு உருவாக்குவது?
1. முதலில் உங்கள் மொபைல் அல்லது பிசி வழியாக ஜீவன் பிரமான் ஆப்பை (Jeevan Pramaan App) பதிவிறக்கம் செய்யவும் அல்லது அருகிலுள்ள ஜீவன் பிரமன் மையத்தில் (Jeevan Pramaan Center) ரிஜிஸ்டர் செய்யலாம். இதற்காக ஆதார் எண் (Aadhaar Number), பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (Pension Payment Order), வங்கி கணக்கு, வங்கி பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் போன்ற தேவையான தகவல்களை வழங்க வேண்டியிருக்கும்.
2. பின்னர் உங்கள் பயோமெட்ரிக்ஸை (Biometrics) பயன்படுத்தி, அதாவது கைரேகை (Fingerprint) அல்லது கருவிழி (Iris) பயோமெட்ரிக்கை வழங்கி, உங்களை அங்கீகரிக்கவும். ஆன்-லைன் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஜீவன் பிரமான் தளமானது ஆதார் தளத்தைப் (Aadhaar Platform) பயன்படுத்துகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜீவன் பிரமான் ஐடியை (Jeevan Pramaan ID) வழங்குவதன் மூலம், ஜீவன் பிரமான் இணையதளத்தில் (Jeevan Pramaan Website) இருந்து உங்களுடைய லைஃப் சர்டிஃபிகேட்டின் பிடிஎப் நகலை (PDF Copy) நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். இதனை தொடர்நது, உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு உறுதிப்படுத்துதல் மெஸேஜும் (Acknowlegment Message) அனுப்பப்படும் அதில் உங்கள் ஜீவன் பிரமான் சான்றிதழ் ஐடி-யும் (Jeevan Pramaan Certificate ID) இருக்கும்.
ஓய்வூதியம் பெறுபவருக்கும், ஓய்வூதியம் வழங்கும் முகமைக்கும் (Pension Disbursing Agency) எந்த நேரத்திலும் எங்கும் கிடைக்கும் வகையில் இந்த சான்றிதழ்கள் ஆனது ஆயுள் சான்றிதழ் களஞ்சியத்தில் (Life Certificate Repository) சேமிக்கப்படும். இதே போல ஜீவன் பிரமான் இணையதளத்தில் இருந்தும் உங்களுடைய லைஃப் சர்டிஃபிகேட்டை அணுகி, அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications