"குவியும் முதலீடுகள்: பிரபல நிறுவனம் ஜியோவில் முதலீடு- எது தெரியுமா"

|

ஜியோ நிறுவனத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்ராண்டிக் என்ற நிறுவனம் ரூ.6,598.38 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காலத்திலும் கூட கடந்த நான்கு வாரத்தில் சர்வதேச பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.67,194.75 கோடி முதலீட்டை ஜியோ நிறுவனம் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 அட்லாண்டிக் நிறுவனம்

ஜியோ நிறுவனத்தில் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 1.34விழுக்காடு பங்குகளை வாங்கவுள்ளதாக ஜியோ நிறுவனத்தின் தலைமை
நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூலமாக ஜியோ

மேலும் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தேதியன்று ஜியோ நிறுவனத்தில் 9.99விழுக்காடு பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.இதன் மூலமாக ஜியோ நிறுவனத்திற்கு சுமார் ரூ.43,574கோடி முதலீடு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Whatsapp இல் 50 நபர் வீடியோ காலிங் அம்சத்திற்கான விருப்பம் அறிமுகம்! எப்படிப் பயன்படுத்துவது?Whatsapp இல் 50 நபர் வீடியோ காலிங் அம்சத்திற்கான விருப்பம் அறிமுகம்! எப்படிப் பயன்படுத்துவது?

அதேபோல் கடந்த மே 3-ம் தேதியன்று சில்வர் லேக் நிறுவனம்

அதேபோல் கடந்த மே 3-ம் தேதியன்று சில்வர் லேக் நிறுவனம் 1.15விழுக்காடு பங்குகளை வாங்கியது. இதனால் ஜியோ நிறுவனத்திற்குசுமார் ரூ.5,656கோடி முதலீடு கிடைத்தது. அதன்பின்பு கடந்த மே 8-ம் தேதியன்று விஸ்டா நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் 2.32விழுக்காடு பங்குகளை வாங்கியது, இதன்மூலம் ஜியோ நிறுவனத்திற்கு ரூ.11,367கோடி முதலீடு கிடைத்தது.

ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம்

தற்சமயம் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 1.34விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளத. கடந்த 40 ஆண்டுகளாக ஜெனரல்அட்லாண்டிக் நிறுவனம் நிதிச் சேவை, சுகாதாரம்,தொழில்நுட்பம், நுகர்வோர் சேவை உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துவரும் முன்னணி நிறுவனமாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

குறிப்பாக சர்வதேச முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக்குடன் கூட்டணி அமைப்பது மிகவும் மகழ்ச்சியளிப்பதாக ரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்கும்  ஊழியர்களுக்காக இந்த திட்டம் சமீபத்தில்

மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அதன் புதிய வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home)ஆட்-ஆன் திட்டங்களின் கீழ் சில முக்கிய திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த முக்கிய
திருத்தும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.251, ரூ.201, மற்றும் ரூ.151 ஆகிய மூன்று வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக்
திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணத்தினால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்
ஊழியர்களுக்காக இந்த திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சியோமி டிவிக்கு இப்படியொரு சலுகையா? அடேங்கப்பா..!இந்த சியோமி டிவிக்கு இப்படியொரு சலுகையா? அடேங்கப்பா..!

 30 நாட்களுக்குச்

கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டு, உங்களிடம் ஆக்டிவ் ஆக உள்ள திட்டத்தின் செல்லுபடியின் கீழ் இந்த ஆட் ஆன் பேக்களின்செல்லுபடி ஒற்றுப்போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ தளத்தில் தற்பொழுது கிடைக்கும் புதுப்பிக்கப்பட்ட பட்டியலின் தகவல் படி, ரூ.251, ரூ.201, மற்றும் ரூ.151 ஆகிய மூன்று வொர்க் ஃப்ரம் ஹோம் ப்ரீபெய்ட் ஆட்-ஆன் பேக்ஸ் திட்டங்களும் இனி 30 நாட்களுக்குச்
செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஜியோ வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக் ரூ.251 வழியாக

முன்பு போல் ஜியோ வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக் ரூ.251 வழியாக பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல், ரூ.201 வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக் வழியாக 40 ஜிபி டேட்டா நன்மையையும், ரூ.151 வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக் வழியாக 30 ஜிபி டேட்டா நன்மையையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
General Atlantic to Invest Rs. 6,600 Crores in Jio Platforms: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X