Gemini Vs ChatGPT: டீன்-ஏஜ் பாதுகாப்பு.. பேரெண்டல் கன்ட்ரோல்.. AI சாட்பாட்களில் என்னென்ன கட்டுப்பாடுகள்?
ஜெமினி (Gemini) மற்றும் சாட்ஜிபிடி (ChatGPT) ஆகிய 2 ஏஐ சாட்பாட்களிலும் டீனேஜனரின் (Teenager) பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும், அவை வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன. இந்த சாட்பாட்களில் பெற்றோர் கட்டுப்பாட்டு வழிமுறைகள் (Parental Controls) மற்றும் டீனேஜனருக்கான பாதுகாப்பு வழிமுறைகள் எப்படி கிடைக்கின்றன என்பதற்கான ஒப்பிட்டை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜெமினி டீனேஜர் பேரெண்டல் கன்ட்ரோல்: கூகுள் நிறுவனமானது, அதனுடயை கூகுள் பேமிலி அக்கவுண்ட்கள் மூலம் பேரெண்டல் கன்ட்ரோல் கொடுக்கிறது, இதில் வழக்கம்போல பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளின் அக்கவுண்ட்களை ஆட் செய்து கொண்டு, அதன் மூலம் ஜெமினி சாட்பாடை பயன்படுத்த அனுமதி கொடுக்கலாம்.

* கூகுள் பேமிலி லிங்க் (Google Family Link)
* ஜெமினி ஆன்/ஆஃப் (Gemini On/OFF)
* கன்டென்ட் பில்டரிங் (Content Filtering)
* எஜுகேஷனல் கன்டென்ட் (Educational Content)
கூகுள் பேமிலி லிங்க்: மற்ற கூகுள் ஆப்களை போலவே ஜெமினி சாட்பாடும் கூகுள் பேமிலி அக்கவுண்ட்களுடன் இன்டிகிரேட் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பெற்றோர்களால் டீன்-ஏஜ் பிள்ளைகளின் ஜெமினி சாட்பாடையும் கட்டுப்படுத்த முடியும். இதனால், அவர்களது நேரடி கட்டுப்பாட்டில் பிள்ளைகள் ஜெமினி சாட்பாடை அக்சஸ் செய்யலாம்.
ஜெமினி ஆன்/ஆஃப்: பெற்றோர்களுக்கு முழு அக்சஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் தேவைப்படும் நேரத்தில் அவர்களது பிள்ளைகளுக்கு ஜெமினி ஆப்-ஐ பயன்படுத்தும் அனுமதியை கொடுக்கலாம். அதேபோல அனுமதியை மறுக்கவும் முடியும். இதனால், ஜெமின் ஆப் பயன்பாட்டை ஆன் அல்லது ஆஃப் செய்யும் கன்ட்ரோல்கள் பெற்றோர்களுக்கு கிடைக்கிறது.

கன்டென்ட் பில்டரிங்: ஜெமினி ஏஐ சாட்பாடில் கன்டென்ட் பில்டரிங் கிடைக்கிறது. ஆகவே, பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெமினி அக்கவுண்ட்களுக்கு சேப்சர்ச் (SafeSearch), 18 வயதுக்கு மேல் தொடர்புள்ள கன்டென்ட்களை தவிர்த்தல் போன்ற இன்-பில்ட் சேஃப்ட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. இதனால் தேவையற்ற கன்டென்ட்களை தவிர்க்கலாம்.
எஜுகேஷனல் கன்டென்ட்: மேற்கண்ட கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சமீபத்தில் இருந்து பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும் ஜெமினி சாட்பாட்களில் எஜுகேஷனல் கன்டென்ட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கிரியேட்டிவ் ரைட்டிங், ஹோம் வொர்க் செய்தல், கேள்வி மற்றும் பதில்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது.
சாட்ஜிபிடி பேரெண்டல் கன்ட்ரோல்: ஜெமினி சாட்பாடை போல சாட்ஜிபிடியில் பேரெண்டல் கன்ட்ரோல் முன்கூட்டியே கொண்ட வரப்படவில்லை. அக்டோபர் மாதத்தில் இருந்து பேரெண்டல் கன்ட்ரோல்களை கொண்டுவர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அதில் என்னென்ன இடம்பெறும் என்பதை இப்போது தெரிவித்து இருக்கிறது.
* டீன் அக்கவுண்ட் லிங்க் (Teen Account Link)
* பிகேவியர் ரூல்ஸ் (Behavior Rules)
* பீச்சர்கள் கன்ட்ரோல் (Features Control)
* டிஸ்ட்ரெஸ் நோட்டிபிகேஷன் (Distress Notification)
டீன் அக்கவுண்ட் லிங்க்: கூகுள் நிறுவனத்தை போலவே டீன்-ஏஜ் பிள்ளைகளின் சாட்ஜிபிடி அக்கவுண்ட்டை பெற்றோர்களின் அக்கவுண்ட்டுடன் லிங்க் செய்யும் பீச்சர் கொண்டுவரப்பட இருக்கிறது. ஈமெயில் மூலம் லிங்க் அனுப்பி எளிதாக அதை செய்யும்படி அப்டேட் கொண்டுவரப்பட இருக்கிறது. குறைந்தபட்சம் 13 வயது பிள்ளைகள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

பிகேவியர் ரூல்ஸ்: உங்களது பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ற மாடல் நடத்தை விதிகள் (Age-appropriate Model Behavior Rules) சாட்ஜிபிடியில் கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த விதிகள் டீபால்ட்டாக கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, இந்த விதிகள் பெற்றோர்களின் அனுமதிக்கு ஏற்றவாறு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதிலும் ஆப்ஷன்கள் இருக்க வாய்ப்புள்ளது.
பீச்சர்கள் கன்ட்ரோல்: ஜெமினி சாட்பாடில் ஆன்/ஆஃப் பீச்சர் கிடைத்ததை போலவே இதில் டிசேபிள் (Disable) பீச்சர் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர் மூலம் டீன்-அக்கவுண்ட்களின் சாட் ஹிஸ்டரி (Chat History), மெமரி (Memory) உள்ளிட்டவற்றை டிசேபிள் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் அதில் இருந்தால் பெற்றோர்கள் அதை டிசேபிள் செய்யலாம்.
டிஸ்ட்ரெஸ் நோட்டிபிகேஷன்: பெற்றோர்களின் அக்கவுண்ட்டுடன் பிள்ளைகளின் சாட்ஜிபிடி இணைக்கப்பட்ட பிறகு, அதில உங்களது பிள்ளைகள் டிஸ்ட்ரெஸ் (துன்பம்) உள்ளிட்ட மனநிலையில் சாட் செய்தால், உடனடியாக பெற்றோருக்கு நோட்டிபிகேஷன் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் உடனடியாக பெற்றோர்களின் கவனத்துக்கு அது கொண்டு செல்லப்படுகிறது.
இந்த 2 சாட்பாட்களிலும் டீனேஜர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே பீச்சர்கள் வருகின்றன. இருப்பினும், தனிப்பட்ட தகவல்களை பகிருவது, வயதுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறு பெற்றோர்கள் அவர்களது டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும். ஏஐ சாட்பாட்கள் முழுமையானவை கிடையாது. அதிலும் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால், பெற்றோர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது.


Click it and Unblock the Notifications