Home
News

Gemini Live: வாரி வழங்கிய கூகுள்.. ஆன்-ஸ்கிரீன் கைடன்ஸ் டு நேச்சுரல் ஸ்பீச்.. Pixel10 சீரிஸ்-க்கு யோகம்!

கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெமினி லைவ்வில் (Gemini Live) ஏகப்பட்ட அப்கிரேட்கள் கிடைத்துள்ளது. விசுவல் அசிஸ்டன்ட் அனுபவத்தை கொடுக்கும் ஆன்-ஸ்கிரீன் கைடன்ஸ் முதல் ஒரு மனிதனை போல வாய்ஸ் அனுபவத்தை கொடுக்கும் எக்ஸ்பிரஸிவ் & நேச்சுரல் ஸ்பீச் வரையில் அப்கிரேட்கள் வருகின்றன. இதுபோக கூடுதல் கூகுள் ஆப் இன்டிகிரேஷன் கிடைக்கிறது. இவை கூகுள் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) மாடல்களில் கிடைக்க இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

* ஆன்-ஸ்கிரீன் கைடன்ஸ் (On-screen Guidance)
* கூடுதல் கூகுள் ஆப்கள் (More Google Apps)
* எக்ஸ்பிரஸிவ் & நேச்சுரல் ஸ்பீச் (Expressive & Natural Speech)

Gemini Live: வாரி வழங்கிய கூகுள்.. ஆன்-ஸ்கிரீன் கைடன்ஸ்!

ஆன்-ஸ்கிரீன் கைடன்ஸ்:
இது விசுவல் அசிஸ்டன்ட் போல செயல்படுகிறது. ஆகவே, உங்களது கேமராவை ஆன் செய்து, அந்த ஸ்கிரீனில் தெரியும் ஆப்ஜெக்ட்களை பற்றிய கேள்விகள் மற்றும் பரிந்துரைகளை பெற்று கொள்ளலாம். இதை ரியல்-டைமில் செய்து கொள்ள முடியும். உதாரணமாக நீங்கள் 1 ஜோடி ஷூக்களை கேமராவில் ஷூட் செய்து, அதற்கு ஏற்ற அவுட்பிட் பற்றி கேட்கலாம்.

இதற்கான பதில்களை ரியல்-டைமில் ஜெமினி லைவ் கொடுக்கும். அதேபோல ஸ்டூல்களை கண்டறிவது, தெரியாத ஆப்ஜெக்ட்கள் குறித்து கேட்பது போன்வற்றை செய்யலாம். இதை சாட் செய்வது போல பயன்படுத்த முடியும். இந்த பீச்சர் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் கிடைக்க இருக்கிறது. ஆனால், கூகுள் பிக்சல் 10 சீரிஸ் மாடல்களில் ஏற்கனவே கிடைக்கிறது.

Gemini Live: வாரி வழங்கிய கூகுள்.. ஆன்-ஸ்கிரீன் கைடன்ஸ்!

கூடுதல் கூகுள் ஆப்கள்:
கூகிள் காலண்டர் (Calendar), கீப் (Keep) மற்றும் டாஸ்க்ஸ் (Tasks) போன்ற ஆப்களுடன் ஏற்கனவே ஜெமினி லைவ் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இப்போது வரும் அப்கிரேட்டில் மெசேஜஸ் (Messages), போன் (Phone), கிளாக் (Clock) மற்றும் மேப்ஸ் (Maps) போன்ற ஆப்களுடனும் இன்டிகிரேஷன் செய்யப்படுகிறது. கால் செய்வதில் ஏஐ பீச்சர்கள் வரப்போகிறது.

அதேபோல அதிகமாக பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் ஆப்பிலும் ஜெமினி லைவ் இன்டிகிரேஷன் வருவதால், புதிய அனுபவத்தை எதிர்பார்க்கலாம். உங்களது பயணத்தின்போது ஏற்படும் தாமதம் அல்லது எப்போது போக வேண்டிய இடத்துக்கு செல்வீர்களோ அந்த நேரத்தை கூகுள் மேப்ஸ் மூலம் கணித்து, அதை போனில் உள்ள கான்டாக்ட்களுக்கு பகிர முடியும். இதை மேப்பில் இருந்தே செய்யலாம்.

Gemini Live: வாரி வழங்கிய கூகுள்.. ஆன்-ஸ்கிரீன் கைடன்ஸ்!

எக்ஸ்பிரஸிவ் & நேச்சுரல் ஸ்பீச்:
கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் செய்ததை இப்போது ஜெமினி லைவ் மூலம் செய்யப்பட இருக்கிறது. அதிலும் வாய்ஸ் சாட் செய்வதை போல பயன்படுத்த முடியும். அதாவது, வழக்கமாக கிடைக்கும் கூகுள் வாய்ஸ் (மெஷின் வாய்ஸ் போல) போலல்லாமல், உங்களது வாய்ஸ் மற்றும் இன்புட்களுக்கு ஏற்ப வாய்ஸ் மாடுலேஷன் கொடுக்கும். அதாவது, நீங்கள் கவலையில் இருப்பது போல இன்புட் கொடுக்கும் நேரத்தில்,

ஜெமினி லைவ் உங்களிடம் கால்மாக (Calm) பதில்களை கொடுக்கும். உங்களுக்கு எதிரே அமைதியான மனிதர் பேசுவதை போல அவுட்புட் கொடுக்கும். அதேபோல மெதுவாக பதில்களை கொடு என்றால், வேகமாக வாசிப்பதை நிறுத்தி பொறுமையாக பதில்களை கொடுக்கும். ஏதாவது, கதைகளை சொல்ல சொன்னால், அதில் வரும் கேரக்டர்களை போல ஸ்பீச் கொடுக்கும். இப்படி நேர்ச்சுவல் வாய்ஸ் கிடைக்கும்.

கூகுள் பிக்சல் 10 சீரிஸ் மாடல்கள் இந்தியாவிலும் வெளியாகிவிட்டன. கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10), கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro), கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்டு (Google Pixel 10 Pro Fold) ஆகிய மாடல்கள் இருக்கின்றன. இதில் பிக்சல் 10 மற்றும் பிக்சல் 10 ப்ரோ மாடல்களின் ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது.

மற்ற மாடல்கள் வெளியாகி இருந்தும், விற்பனை விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரியவரும். ஆனால், அந்த மாடல்களும் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க இருப்பது உறுதியாகும். ஆகவே, இந்திய மார்கெட்டிலும் அப்கிரேட் செய்யப்பட்ட இந்த ஜெமினி லைவ் பீச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Gemini Live Upgrades From on-screen Guidance To Expressive and Natural Speech For Pixel 10 Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X